படைப்பாளர்: தேவராஜன் சண்முகம்
அது மாலை நேரம். கொஞ்சம் வெயில். வானத்தின் ஈசானிய மூலையில் கரு மேகங்கள் ஓடி கொண்டிருந்தன. சிறு சிறு தூறல் விழுந்து கொண்டிருந்தன.
திருக்கண்ணபுரம் கிராமத்தில் ஒத்தை மரத்திடலில் நானும் சீனுவும் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தோம். பரந்துபட்ட அந்த திடலில் ஒரு அசாத்தியமான அமைதி.சட்டென்று வானில் அழகான வானவியல் தோன்றியது.அதை ரசித்து கொண்டிருந்த போது…வானவில் மறைந்து அங்கே பளீரென்று ஒளி வெள்ளம் ஏற்பட்டு எங்களை ஆச்சரியப் படுத்தியது.அடுத்த சில நொடிகளில் பெரிய அண்டா போன்ற பாத்திரம் சுழன்று தரை இறங்கியது.
அதைப் பார்த்து நாங்கள் பயந்து நடுங்கினோம்.அதில் இருந்து இரண்டு ஒளி கீற்று எழுந்து வந்தன. சில நொடிகளில் அவை குள்ளமான உருவம் பெற்றன. முடியில்லாத தலை. பெரிய கண்கள். மூக்கும் வாயும் இருந்தும் இல்லாதது போல இருந்தன. கைகள் கால்கள் உடல் எல்லாம் சூம்பி இருந்தன._வணக்கம். தம்பிகளா.
நாங்கள் ஏலியன்ஸ். உங்கள் மூதாதையர் வழி உறவு.குரல் கேட்டு பயந்தனர்.-பயப்படாதீர்கள்.-சரி.நீங்கள் எப்படி இங்கே?- வாருங்கள். என் வாகனத்தில் ஏறுங்கள்.எங்கள் ஊருக்கு அழைத்துச் செல்கிறோம்.-வேண்டாம்.பயமாக இருக்கிறது.-பயம் வேண்டாம். நாங்கள் உங்களுக்கு நண்பர்கள். வாருங்கள். வாகனப் பயணத்தில் உரையாடல் செய்யலாம்.இருவரும் அந்த அண்டா வாகனத்தில் ஏறினோம்.
சொய்ய்ங் என்று வாகனம் மேல் எழுந்து பறந்தது.இப்போது நால்வரும் வாகனத்தில் வானில் பறந்து கொண்டிருந்தோம்.-உங்கள் உலகம் எங்கே இருக்கிறது?-புதன் கிரகம் பக்கம்.-அங்கே நாங்கள் சுவாசம் செய்ய ஆக்ஸிஜன் வேண்டுமே.-நாங்கள் பாஸ்பீன் வாயுக்களால் சு வாசிக்கிறோம். உங்களுக்கு பாஸ்பரஸ் மூலம் பாஸ்பீன் தயாரித்துள்ளோம். அதை நீங்கள் சுவாசித்து உயிருடன் இருக்கலாம். கவலை வேண்டாம்.-உங்களுக்கு எப்படி தமிழ் தெரியும்?-எங்களுக்கு மின் காந்த ரேடியல் அலை மூலம் யாரிடம் பேசினாலும் அவர்கள் மொழியில் பேச இயலும்.
சில நிமிடங்கள் கரைந்தன.இப்போது நாங்கள் ஏலியன்ஸ் உலகில் இறங்கினோம்.ஆஹா மிக அருமையான அழகான கண்ணாடிகளால் செய்யப்பட்டது போல இருந்தது.அங்கே ஏலியன்ஸ் நிறைந்து இருந்தனர். எங்களைப் பார்த்து ஆசை ஆசையாய் கட்டித் தழுவி கொஞ்சினர்.-நண்பர்களே.பார்த்தீர்களா எங்களையும் எங்கள் உலகத்தையும். இதை உங்கள் உலகத்தில் உங்கள் மனிதர்களிடம் கூறுங்கள். சரி. புறப்படலாம். ஒரு நாள் கடந்து விட்டது.-என்ன அதுக்குள் ஒரு நாள் கடந்ததா?-ஆமாம். உங்க பூமியில் ஒரு மணிநேரம் அப்படின்றது எங்க கிரகத்துலே ஒரு நாளைக்கு சமம். அதாவது உங்களுடைய ஒரு நாள் எங்க கிரகத்துலே இருபத்திநாலு நாளுக்குச் சமம்.-ஓ அப்படியா? ஒரு நாள் போச்சு. உங்களுக்கு பசியில்லையா?
நாங்கள் ஒரு நாளில் மூன்று முறை சாப்பிட்டு இருப்போம்.-எங்களுக்கு பசி கிடையாது. எங்கள் உணவு சூரிய ஒளி. இங்கே எல்லாமே சூரிய ஒளியிலிருந்து பெறப்படுகிறது. அதன் சக்தி எங்க உடம்பிலே போதுமான அளவுக்கு தானாகவே சேமித்து வைக்கப்படும். இந்த கிரகத்திற்கு யார் வந்தாலும் அவங்களுக்கு சக்தி தானாவே கிடைக்க ஆரம்பிச்சிடும்.சுத்தமான காற்று. தூய்மையான பகுதி. இதனால் இங்கு தூசு ஏதும் இல்லை. அதனால் உடல் அழுக்காவதில்லை.
நாங்கள் குளிப்பதில்லை. இங்கு நீரும் இல்லை.இதைக் கேட்ட எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.-புறப்படலாம்?-கிளம்பலாம். எங்கள் வீட்டில் தேடுவார்கள்.ஏலியன் சைகை செய்ய எதிரே பறக்கும் தட்டு தோன்றியது.-ஏறிக்கொள்ளுங்கள்” என்றதும் இருவரும் ஏறி உள்ளே சென்றோம்.அடுத்த சில நிமிடங்களில் அது பூமியை வந்தடைந்து .ஒத்தை மரத்திடலில் இறங்கியது.நாங்கள் ஏலியன்சுக்கு நன்றி சொன்னோம்.-நன்றி.நாம் அடிக்கடி சந்திக்கலாம்.
எங்கள் உலகத்துக்கும் பயணம் செய்யலாம். சரியா? என்று அவர்கள் சொல்லி முடித்த நொடிகளில்பறக்கும் தட்டு பறக்கத்தொடங்கி நொடிப்பொழுதில் மறைந்தது.
முற்றும்.