ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: கோலிக்கண் 

by admin 1
155 views

சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட், 

டெர்மினல் 2, கேட் நம்பர் 23 A..லண்டன் 

போற பிளைட்டுக்காக காத்திருந்தேன்.

இன்னும் குறைஞ்சது ஒண்ணரை 

மணி நேரம் ஆகுமாம்.

இப்ப பிளைட் அமைதியாய் 30 ஆயிரம் அடி 

உயரத்தில் மிதந்தது. திடீர்னு பிளைட் நிலைகுலைந்து ஆடியது.

வேகமாய் கீழே பாய்ந்தது.பயப்படாம இறங்குனு 

அந்த கோலிக்கண் என்னைஇறக்கி விட்டது.,

நீ என்ன செய்கிறாய் இந்த நடுக் காட்டில்.

ஒரு புன்னகை  போல ஒரு  வெளிச்சம் அந்த 

மொழுக் முகத்தில், நான் 32ஒய்எக்ஸ் நான் 

புரியாமல்  விழித்தேன்,  ஏதோ மென்டல் கிட்ட மாட்டிட்டோமோனு பயமா இருந்தது. 

நீண்ட ஒன்று என் இடுப்பை இடுக்கி போல பற்றி தூக்கியது, இத்தனை 
விரல்களா? நிமிடத்தில் ஒரு பரந்த மைதானம், நடுவே சர்க்கஸ் டெண்ட் போல படு வெண்மையில் ஒரு இடம்,32ஒய்எக்ஸ் ஏதோ பறபறபறனு சொல்ல தலைவன் தன் முகத்தில் இருந்த வாய் போன்ற குழியை திறந்த வினோத சத்தம் எழுப்பினான்(னது) சுற்றி இருந்த ஒரு 11 ம் அதே மாதிரி 

செய்தன எங்கள் 320வருட உழைப்பு வீணாக்கிடாம ஓடிடு.

இன்னும் ஒரு 123 வருட கடின உழைப்பில் இந்த எல்லா 
கிரகங்களையும் இணைத்து ஆட்சியை பிடிப்போம்.
உன் போன்ற அல்ப ஜந்துக்களால் எங்கள் முயற்சி கெடக் கூடாது. 

உன் இடத்தில் விட்டுவிடச் சொல்கிறோம்.நீங்கல்லாம் யாரு என்ன செய்யப் போறீங்க,உலகப் போருக்கு திட்டம் தீட்டுகிறீர்களா.

நண்பா எங்கள் திட்டம் போரல்ல கிரகங்களை இணைப்பது, 
இதெல்லாம் உனக்குப் புரியாது,அது வரை இடைஞ்சல் தராதீர்கள்.
என் முதுகில் ஏதோ ஊர்வது போல குறுகுறுப்பு 32ஓய்எக்ஸ் 
என் முதுகை காந்தமாய் ஆகர்ஷித்தது.
தலைக்கு மேல் ஒலி பெருக்கி அலறியது, லண்டன் செல்லும் 

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பயணிகளை போர்டிங் செய்ய 
அழைக்கிறது. கேட் நம்பர் 23A இப்போது திறக்கப் பட்டுள்ளது,
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
வரிசையில் நின்றேன் கனவா? நான் அப்படித் தூங்கற ஆள் இல்லையே…

முற்றும்.

ஏலியனுடன் ஒரு நாள் கதைப் போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டுமா?!

https://aroobi.com/13504-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!