படைப்பாளர்: நா.பா.மீரா
ஜூலிம்மா…. நா உம் பக்கத்துலேதான் இருக்கேன் ..கவலைபடாமாத் தூங்குடா
முதல் பிரசவம் இல்லையா? அதான் பயப்படறா .சாப்பாடு ஊட்டி ,யூ டியூப் பார்த்து சுடுநீர் ஒத்தடம் கொடுத்தான்.
..மடிக்கணினியை உயிர்ப்பித்த பீட்டர்…
பாஸ் சொன்ன மாதிரி உண்மையிலேயே ஏலியன்கள் இருக்கா?
தரவுகள் தேடிப் படிக்கப் படிக்க குழம்பித்தான் போனான் .
திடீரென்று …. அறை வாயிலில் … வெளிச்சம் …. தன்னையறியாமல் பீட்டர் அந்த வெளிச்சத்தை நோக்கி நடக்க …அவன் நெருங்க நெருங்க வெளிச்சம் …நகர்ந்து ….
சூடாகக் காபி தொண்டையில் இறங்கியதில், சற்றே இதமாக உணர்ந்தான் பீட்டர்.
ஆர் யூ ஓகே மை சன்? தன் பாஸ் வின்சென்ட் குரல் கேட்டு நிமிர்ந்த பீட்டர் …. வாட் எ பிளசன்ட் சர்ப்ரைஸ் சார், நானே உங்களைப் பார்க்க வரணும்னு நெனைச்சிட்டிருந்தேன்.
இவனுக்கு என்ன ஆச்சு? சம்திங் ராங். மொதல்ல தூங்கி ஓய்வெடுக்கட்டும். அப்புறம் விவரம் கேட்கலாம்.
அங்கே …
படுக்கையில் புரண்டு புரண்டு — திரும்பிய ஜூலிக்கு— வயிற்றில், சுருக்… சுருக்…
பிரசவத்துக்கு மருத்துவர் கொடுத்த தேதிக்குப் பத்து நாட்கள் இருந்தது.
ஒரு கை …அவளை இதமாய்த் தடவி…. வலிக்கு மென்மையாய் ஒத்தடம் கொடுத்து….
மதியம் இரண்டு மணி போல வலியில் துடித்தவளை ஆசுவாசப்படுத்தி … காரின் பஸ்ஸர் ஒலி கேட்டு … ஆஸ்பிட்டல் உள்ளிருந்தவர்கள் வெளியே வர … ஜூலியட் பிரசவ வார்டுக்குக் கொண்டு செல்லப்பட்டாள் .
பீட்டரின் மொபைலில் வந்த தொடர் அழைப்பில் …
உயிர்ப்பித்துப் பேசிய வின்சென்ட் அதிர்ந்தார்.
ஜூலி எப்படி மருத்துவமனை போனா?
அழகான பெண் குழந்தை …..நெகிழ்ந்த பீட்டர்… சாரிடா ஜுலி— நேத்து ராத்திரி ….
அதெல்லாம் விடு… நீதான் கரெக்ட் டைமுக்கு என்னை ஆஸ்பிட்டல்ல சேர்த்துட்டியே …..
அதிர்ந்த பீட்டர், ஜூலியைக் குழப்ப விரும்பாது வெளியே வந்தான்.
பேபி நேம் ப்ளீஸ் … எதிர்ப்பட்ட நர்ஸ் கேட்க— ஏலியன் ஏஞ்சலீனா —
வெளியே வானில், வெளிச்சப்புள்ளி கண் சிமிட்டியது .
முற்றும்.
