ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: கப் கேக்

by admin 1
39 views

அப்பா அம்மாவுடன் சண்டை போட்டு வீட்டுக்கு பின்புறம் இருக்கும் ஏரி அருகில் அமர்ந்து இருந்தாள் அஞ்சலி.மாலை மங்கி இருள் சூழ தனியாக இருக்க பயம் வந்தது அவளுக்கு..

திடீரென மின்னல் போல ஒரு ஒளி கீற்று.காற்றை கிழித்து கொண்டு வந்தது அந்த பறக்கும் தட்டு.அதன் கதவை திறந்து கொண்டு வினோதமான உருவம் ஒன்று வெளியே வந்தது.

அஞ்சலி பயத்தில் ஒட கூட முடியாமல் உறைந்து நின்றாள் .வாயை அசைத்து ஏதோ பேசியது அந்த உருவம்.ஒன்றும் புரியவில்லை.அஞ்சலி அழ ஆரம்பித்தாள்.தன்னை விட்டு விடுமாறு சைகை செய்தாள்.சிறிது யோசித்து ஒரு சாதனத்தை எடுத்து ஏதோ பேசியது அந்த உருவம்.

“பயம் வேண்டாம் .நான் வேறு கிரகத்தில் இருந்து வருகிறேன்.பல ஆண்டுகளாக எங்களை போல வேறு கிரகம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தோம்.இந்த கிரகத்தை நாங்கள் அனுப்பி வைத்த செயற்கைக்கோள் படம் எடுத்து அனுப்பியது.அதில் உங்களை எல்லாம் பார்த்ததும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.நேரில் ஆய்வு செய்ய தான் நான் வந்துள்ளேன் ” என அஞ்சலிக்கு புரியும் மொழியில் சொன்னது அந்த சாதனம்.

பிறகு அஞ்சலிக்கு சாப்பிட எதோ பண்டம் கொடுத்தது அந்த உருவம்.அது மிகவும் சுவையாக இருந்தது.பயம் தெளிந்து அந்த ஏலியனுடன் பேச ஆரம்பித்தாள் அஞ்சு.சிறிது நேரத்திலேயே நீண்ட காலமாக பழகிய நண்பனை போல பேசியது அந்த ஏலியன்.

மகளை காணவில்லை என்று தேடி வந்த அஞ்சலியின் பெற்றோர் ஏலியனை பார்த்து நடுங்கி உதவிக்கு அந்த ஊரையே அழைத்து இருந்தனர்.ஏலியனை தாக்க வந்தவர்களை தடுத்து நிறுத்தி  ஏலியனை அறிமுகம் செய்து வைத்தாள் அஞ்சலி.அது இங்கு வந்து இருக்கும் காரணத்தை கூறி ஏலியனை வீட்டிற்கு அழைத்து சென்றாள்..அவர்களோடு வீட்டுக்கு சென்ற ஏலியனுக்கு அனைத்தும் வியப்பாக இருந்தது.

சிறிது நேரம் அவர்களுடன் நன்றாக பேசிய ஏலியன் ஏதோ சத்தம் அதன் கையில் இருந்து வர ” நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.உங்கள் கிரகத்தை பற்றி எங்கள் கிரக தலைவரிடம் கூறி அவர்களை உங்கள் தலைவரிடம் பேச சொல்கிறேன்.மீண்டும் சந்திப்போம்.என் பரிசாக இந்த இனிப்பு பண்டங்களை அனைவரும் வைத்து கொள்ளுங்கள்” என கூறி பறக்கும் தட்டில் ஏறியது.கண்கலங்கி விடை கொடுத்தாள் அஞ்சலி..

விண்கலத்தில் :

பாஸ் பிராஜக்ட் சக்சஸ்.நீங்க நினைச்ச மாதிரி சனி கிரகத்துல மனிதர்கள் உயிர்வாழ முடியும்… வழக்கம் போல கப் கேக்  கொடுத்து கரக்ட் பண்ணிட்டேன் இங்க இருக்கும் ஏலியன்சை..கொஞ்ச கொஞ்சமா உள்ளே நுழைஞ்சு ப்ளாட் போட்டு விக்க வேண்டியது தான் என்று கூறி சிரித்தான் சூரி..

முற்றும்.

ஏலியனுடன் ஒரு நாள் கதைப் போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டுமா?!

https://aroobi.com/13504-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!