ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: ஏலியனே ஏமாறாதே

by admin 1
46 views

முன்பனி இரவில் அந்த பார்க்கில் நுழைந்தபோது ஆளரவமில்லாமல் நிசப்தம் நிலவியது. பார்க்கின் கோடியில் மங்கலான விளக்கொளியடியிலிருந்த பெஞ்சில் ஒரு உருவம்
அமர்ந்திருந்தது. அதன் பின்புறமாக சப்தமில்லாமல் நெருங்கினேன்.
குனிந்தபடியே ஏதோ மும்முரமாக செய்து கொண்டிருந்ததால் நான்
வருவதை உணரவில்லை.

மெதுவாக பின்புறம் நெருங்கி எட்டிப்பார்த்தேன். ஒரு வெள்ளைத்தாளில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தது. இன்னும் அருகில் சென்று என்ன
எழுதுகிறது என்று பார்த்தேன். அட…. எனக்கு தெரிந்த தமிழ் மொழி!
ஓசைப்படாமல் எழுதுவதை படிக்கலானேன்:


“ இந்த கடிதத்தை படிப்பவர்களுக்கு என் வணக்கம்.
என் பேர் விஜய். பேர்தான் விஜய் ஆனா எல்லாமே தோல்விதான்.
படித்தேன் வேலை கிடைக்கவில்லை. காதலித்தேன் காதலி
ஓடிவிட்டாள். பெற்றோர்களோ உடன்பிறப்புகளோ எல்லோருமே
என்னை உதாசீனப்படுத்தினார்கள். நண்பர்கள் ஏமாற்றினார்கள்.
உலகம் முழுவதுமே பொய், பித்தலாட்டம், ஃபிராட் நல்லவனால
பொழைக்க முடியாதுன்னு புரிந்து கொண்டு நானும் ஏமாற்ற
ஆரம்பித்தேன்.

பலவிதமான ஏமாற்று வேலை விபரம் சொல்லி மாளாது. நல்லாதான் போயிட்டிருந்துச்சு. ஆனா கொஞ்சம் பெரிய லெவல்ல ஆரம்பிச்சதும் போலீஸ் தேட ஆரம்பிச்சுட்டாங்க.. அவங்ககிட்ட மாட்டிக்காம ஓடி ஒளிந்தேன். எப்ப வேணாலும் கைது பண்ணிவிடுவாங்க. அதுக்கு முன்னால என் வாழ்க்கையைமுடிச்சுக்க முடிவு செய்துட்டேன்.

ஐயோ இதோ அவங்க வராங்களே? இந்த விஷத்தை உடனே விழுங்கப்போறேன்..”இந்த வரியை படிச்சவுடனே எனக்கு உடல் பதறியது. உடனே முன்னே பாய்ந்து அவன் கைல இருந்த விஷத்தை பிடிங்கி எறிந்து
“ சே சே தற்கொலை தவறான செயல். எங்கூட வா..பொய்
பித்தலாட்டம் , ஃப்ராட் இல்லாத இடத்துக்கு கூட்டி போறேன்” என்று
அவனை அப்படியே அள்ளி எடுத்து போகும்போது பின்னால்
குரல்கள் காதில் விழுந்தது..
“ விஜயை ஏலியன் தூக்கிட்டு போகுதுடா…”

“ பொய், ஃப்ராடு எல்லாம் இல்லாத இடமாமில்ல”
“ இவன் போறான்லே இவன் ஒத்தாளு போரும் அந்த கிரகத்தையே
கெடுத்துடுவான்”.
அப்படியா என்று அவனை தூக்கியவாறே யோசிக்கலானேன்.

முற்றும்.

ஏலியனுடன் ஒரு நாள் கதைப் போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டுமா?!

https://aroobi.com/13504-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!