படைப்பாளர்: ஜீஷா ஶ்ரீ
அமெரிக்க நேரம் விடியல் காலை 3.30 மணி இருக்கும் அதிர்ச்சியில் விழிகள் விரிய சிற்பம் போல நின்றுக் கொண்டு இருந்தாள் லயா.
வியர்வை முகத்தில் இருந்து வழிய தன் முன்னால் தன்னை நோக்கி வரும் ஏலியனை வெறித்துப் பார்த்தவளுக்கு தான் செய்த பரிசோதனை வெற்றி அடைந்ததற்கான மகிழ்ச்சி ஒரு புறம் என்றால் அதை காப்பாற்றி இருக்கிறோம் என அறியாமல் தன்னை ஏதும் செய்து விடுமோ?! என்ற பயம் மறு புறம் இருக்க கைகள் நடுங்க தன் வியர்வையும் துடைத்துக் கொண்டாள்.
அந்த ஆய்வுக் கூடமே அவளுடையதாக இருக்க, அங்கு அவளையும் அந்த ஏலியனையும் தவிர யாரும் இருக்கவில்லை.
லயாவின் முகத்தின் அருகே நெருங்கி அவளின் முக வடிவை தன் கைகளால் அளக்க, அவளோ மூச்சினை விடக் கூட மறந்து இருந்தாள்.
ஏலியனின் கையோ அவளின் இதழில் வந்து நிலைக்க, சற்றும் தாமதிக்காமல் அவளின் இதழைக் கவ்வி இருந்தது.
பேரதிர்ச்சி அவளிடம்! அவ்வளவு அருவருப்பும் கூட, அடுத்த கணமே அதனை திமிறிக் கொண்டு விலக்க முயன்றவளுக்கு பலன் பூச்சியம் தான்.
கண்ணீர் வழிய நின்றவளை விட்டு விலகிய அந்த ஏலியனின் நினைவுகள் அன்று இப் பெண் தன்னை காப்பாற்றி இப்போது தன்னை மீட்டு எடுத்ததைக் கண்களை மூடி யோசித்து விட்டு கண்களைத் திறந்து அவளை விழிகளில் நிரப்பிக் கொண்டது.
ஆண் ஏலியன் போலும், அவளைக் கண்ட நொடி முதல் காதல் துளிர் விட்டு இருக்க, இதழை இத்தோடு 10 முறைகளுக்கும் மேலாக துடத்தவளை மேலும் நெருங்கி ஏதோ பேச அதனில் இருந்து வித்தியாசமான ஒலி கிளம்பியது.
மேலும் பயந்தவள் முடிவொன்றை எடுத்தவளாய் ஏலியன் தரை இறங்கிய பறக்கும் தட்டினின் அருகே அதன் கையைப் பற்றி இழுத்துச் சென்றவளை விடாது பற்றி மீண்டும் இதழைக் கவ்வி உணர்வுகளோடு காதலைக் கடத்த, அதிர்ந்து போய் அப்போது தான் தூக்கம் கலைந்து வியர்க்க விறுவிறுக்க எழுந்து அமர்ந்தாள் லயா.
முற்றும்.