படைப்பாளர்: பூர்ணி சுபாஷ்
மாலை மங்கி இருட்டிய நேரத்தில் அப்போது தான் ஒரு குட்டி தூக்கம் போட்டு தூங்கி எழுந்த ஜோசப் அவசர அவசரமாக தனது நண்பனான சங்கரன் வீட்டிற்கு சென்றான். அங்கு ஏற்கனவே சங்கரும் இப்ராஹிமும் குழுமி இருந்தனர். சங்கர் இப்ராஹிம் ஜோசப் மூவரும் சிறு வயதில்
இருந்தே நண்பர்கள். எங்கு சென்றாலும் இணை பிரியாமல் செல்லும் அளவிற்கு நெருக்கமானவர்கள். மூவருக்குமே அறிவியல் என்றால் அலாதி பிரியம் அதிலும் முக்கியமாக வானவியல் மீது.
தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்களையும் நிலாவையும் மற்ற கிரகங்களையும் பார்ப்பது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான செயல். மற்ற கிரகங்களில் ஏதாவது உயிரினங்கள் இருக்கும் என்பது இவர்களது ஆழமான நம்பிக்கை. விண்வெளி துறையில் ஏதாவது சாதிக்க
வேண்டும் என்பது இவர்களது வாழ்நாள் கனவு அதிலும் ஏலியன்களை கண்டுபிடிப்பதற்காக தான் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
யாருடா இவங்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களா? என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்கு புரிகிறது ஆனால் இவர்கள்
ஏழாம் வகுப்பு தான் படிக்கிறார்கள். இன்றும் அது போல் ஏதோ ஒரு ஆராய்ச்சிக்காக தான் சங்கரன் வீட்டின் மொட்டை மாடிக்கு வருவதாக இருந்தனர். சங்கரன் வீட்டு மொட்டை மாடியில் மூன்று நாற்காலிகள் அவற்றுக்கு நடுவே ஒரு மேஜை அந்த மேஜை மேல் ஒரு மடிக்கணினி
அதற்கு அருகிலேயே ஒரு தொலைநோக்கி இருந்தது. அவசர அவசரமாக மேலே வந்த ஜோசப், இப்ராஹிம் சங்கரன் இருவருக்கும் நடுவே உள்ள நாற்காலியில் அமர்ந்தான் அருகில் அமர்ந்து மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்த சங்கரனிடம் ” என்னடா மச்சான் சிக்னல் ஏதாச்சும் கிடைச்சதா ” என்று கேட்டான் ” இதுவரைக்கும் எதுவும் கிடைக்கலடா ஆனா சீக்கிரமா ஏதாச்சும் சிக்னல் வரும்னு நான் நினைக்கிறேன் ” என்றான் சங்கர்.
” நாமளும் ஒரு மாசமா சர்ச் பண்ணிட்டு இருக்கோம் ஆனா எந்த சிக்னலும் கிடைக்கலையே டா ” என்று அலுத்து கொண்டான் இப்ராஹிம்
இவர்கள் சிக்னல் சிக்னல் என்கிறார்களே அது என்ன சிக்னல் என்று யோசிக்கிறீர்களா எல்லாம் ஏலியன்களிடமிருந்து வரும் சிக்னல் தான். சங்கரனின் அண்ணன் சரவணன் கல்லூரி முடித்து வேலைக்கு சென்றுவிட சரவணனுக்கு அரசு பள்ளியில் இலவசமாக கொடுக்கப்பட்ட லேப்டாப் சங்கரின் கைக்கு மாறியது. அன்று முதல் இவர்கள் இவ்வாறு தான் இரவு நேரங்களில் ஏலியன்கள் அனுப்பும் சிக்னல் ஏதாவது கிடைக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இவர்களுக்கு கிடைத்தது என்னவோ சிட்டுக்குருவிகளை
கொல்லும் செல்போன் சிக்னல்கள் மட்டுமே. ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து
கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கீழே இருந்து சங்கரனின் அம்மா சாந்தி
” பசங்களா சாப்பிட வாங்கடா” என்று அழைத்தார் அவர் கூப்பிட்டவுடன் மூவரும் கீழே இறங்கி சென்றனர் அங்கு ஏற்கனவே சங்கரனின் அப்பா கந்தசாமியும் அண்ணன் சரவணனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் உள்ளே வந்த மூவரையும் பார்த்த சாந்தி
” வாங்கப்பா சாப்பிடலாம் ” என்று அழைத்தார் உடனே இப்ராஹிம்
” இல்லம்மா நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறேன் எனக்காக உம்மாவும் வாப்பாவும் சாப்பிடாம இருப்பாங்க ” என்று மறுத்தான் அதை கவனித்த ஜோசப்பும் உடனே ” சரி மம்மி நானும் போயிட்டு வரேன் நான் போகலைன்னா மரியா விளக்கமாத்தோட இங்க வருவா ” என்று சொல்லிவிட்டு எஸ் ஆக துணிய அவன் அருகில் வந்த சாந்தி
” எத்தனை தடவை சொல்லி இருக்கேன் அம்மாவை பேர் சொல்லி கூப்பிடாதன்னு” என்று அவன் காதை பிடித்து திருக அவர் கைகளில் இருந்து விடுபட்டுக் கொண்ட ஜோசப் இப்ராஹிமை
பார்க்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு
” அப்போ போய்ட்டு வரோம் சாந்தி ” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டனர் இதை பார்த்துக் கொண்டிருந்த சங்கர் சரவணன் கந்தசாமி மூவரும் சிரிக்க சாந்தி திரும்பி அவர்களை முறைத்து வைத்தார்.
இப்படித்தான் இவர்கள் மூவரும் சேர்ந்தால் வீடு கலகலப்பாக இருக்கும். மூவர் வீட்டுக்கும் மூவருமே செல்லப்பிள்ளை தான் ஜாதி மதம் பேதம் இல்லாதது இவர்கள் நட்பு. இந்தியாவே மத நல்லிணக்கத்தை இவர்களிடம் தான் தெரிந்து கொள்ள வேண்டும். தீபாவளிக்கு
மூவரும் சேர்ந்து தான் பட்டாசு வெடிப்பர் ரம்ஜானுக்கு இப்ராஹிம் வீட்டில் பிரியாணி என்றால் முதலாவதாக உட்கார்ந்து இருப்பது ஜோசப் மற்றும் சங்கராக தான் இருக்கும். அதுபோல கிறிஸ்துமஸுக்கு பரிசுகள் மூவருக்கும் சேர்ந்தே கிடைக்கும். இரவு உணவை முடித்துவிட்டு
மூவரும் மீண்டும் சங்கரன் வீட்டு மொட்டை மாடிக்கு வந்தனர். சங்கரன் மடிக்கணினியில் மீண்டும் ஏதோ தட்டிக் கொண்டிருக்க இப்ராஹிம் தொலைநோக்கி மூலம் வானவெளியை கவனித்துக் கொண்டிருந்தான் .
எப்போதும் போல லேட்டாக வந்த ஜோசப் வெறும் கண்களால்
வானத்தை நோட்டமிட அந்த நேரம் சங்கரன் இப்ராஹிம் இருவரும்
” டேய் டேய் ஏதோ தெரியுதுடா ” என்று ஒரு சேர கத்த இப்ராஹிமும் ஜோசப்பும் சங்கர் அருகே சென்று கணினி திரையை கவனித்தனர் . அப்போது வெளியே இருந்து சிக்னல் ஏதோ கிடைக்க வானத்திலிருந்து விண்கல் போல வந்த ஏதோ ஒன்று சங்கரன் வீட்டிற்கு பின்னாடி இருந்த வெற்று மைதானத்தில் சென்று விழுந்தது மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள மூவரும் இறங்கி அந்த விண்கலை நோக்கி ஓட ஆரம்பித்தனர்.
ஜோசப் வரும்போது சங்கரின் மடிக்கணினியையும் கையோடு கொண்டு வந்திருந்தார் ” சிக்னல் இங்க இருந்து தான் கிடைக்குதாடா என்று கேட்டான் சங்கர் “ஆமாண்டா இங்க இருந்து தான் கிடைக்குது நல்லா பாரு” என்று ஜோசப் சொல்ல மூவரும் எதையோ தேடிக் கொண்டிருந்தனர். “விழுந்தது ஏதோ asteroid ஆ இருக்கும் போல டா” என்று கூறினான் இப்ராஹிம்.
“அந்த பக்கம் பாருடா எதோ இருக்கு” என்று கத்தினான் சங்கர் .
மூவரும் அதன் அருகே சென்று பார்க்க ஒருவர் மட்டும் உள்ளே அமரும் வடிவத்தில் உருண்டையாக மஞ்சள் வண்ணத்தில் அது மின்னிக் கொண்டிருந்தது . மூவரும் அதன் அருகில் செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே நின்றிருந்தனர். அப்போது அந்த
உருண்டை வடிவத்தை திறந்து கொண்டு மனிதர்கள் போலவே சற்று வித்தியாசமாக இருந்த ஒரு உருவம் வெளியே வந்தது.
” அப்பாடா ஒரு வழியா பூமிக்கு வந்துட்டேன் நம்ம முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க எவ்ளோ நல்லா இருக்கு ” என்று கூறிக்கொண்டு சுற்றி பார்த்தது அந்த உருவம் நண்பர்கள் மூவரும் கையில் கிடைத்த மரக்கட்டையை எடுத்துக்கொண்டு அந்த உருவத்தை
தாக்க தயாராக நின்றனர் .அவர்கள் மூவரையும் பார்த்த அந்த உருவம் தன் பெல்டில் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதத்தை எடுத்து இப்ராஹீமை குறிவைத்துக்கொண்டே ” இங்க பாருங்க நான் உங்களை எதுவும் செய்ய மாட்டேன் நான் ஒரு முக்கியமான வேலைக்காக
இங்க வந்தேன் உங்க மூணு பேரையும் எனக்கு தெரியும் உங்களுக்கு சிக்னல் அனுப்புனதுநான்தான் உங்க உதவி எனக்கு தேவைப்படுது அதனால தான் நான் இங்க வந்தேன்” என்று
கூறியது உடனே நண்பர்கள் மூவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
” எங்க உதவி உனக்கு வேணும்னா அப்புறம் எதுக்கு கைல என்னத்தையோ வெச்சு எங்கள பயமுறுத்திக்கிட்டு இருக்க ” என்று கேட்டான் ஜோசப் உடனே தன் கையில் இருந்த ஆயுதத்தை கீழ் இறக்கிய அந்த உருவம் ” ஐயையோ சாரிப்பா ” என்றது உடனே தைரியசாலியாக மாறிய நமது கதாநாயகர்கள் மூவரும் யார் நீ ? எதுக்காக இங்க வந்த? எங்க இருந்து வந்திருக்க ? உனக்கு என்ன வேணும் ? என்றே
கேள்விகளை தொடுக்க ஆரம்பித்திருந்தனர் .
இவர்கள் கேட்ட கேள்வியில் குழம்பிப்போன அந்த உருவம்
” ஹேய் cool cool எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுறீங்க என் பேரு அகவழகன் என்னோட கிரகத்தோட பேரு நான் உன்கிட்ட சொல்ல முடியாது அது ஒரு confidential ஆன விஷயம் அதனால சொல்ல முடியாது ” என்றது .
” பரவால்ல சொல்லு ” என்றான் சங்கரன் .
” நான் எதுக்கு சொல்லணும் நான் சொன்னதும் நீங்க ஆராய்ச்சி பண்ணி எங்க கிரகத்தை கண்டுபிடிச்சிடுவீங்க அப்புறம் எங்க கிரகத்துக்கு குடிவந்து பூமி மாதிரி எங்கு கிரகத்தையும் அழிக்க பாக்குறீங்களா ” என்று கோபமாக கேட்டது அவன் கோபத்தை கண்டு அதிர்ந்த நண்பர்கள் மூவரும் ” இப்ப எதுக்கு நீ கோபப்படுற அப்படி நாங்க என்ன பூமிய அழிச்சிட்டோம் ” என்று கோரசாக கேட்டனர் .
உடனே அகவழகனோ” நீங்களே சொல்லுங்க பூமி முன்னாடி இருந்த மாதிரியா இப்பயும் இருக்கு முக்காவாசி மரங்கள காணோம் முன்னாடி இருந்த உயிரினங்கள் பாதிய காணோம் எல்லாத்தையுமே அழிச்சது நீங்க தானே தொழில்நுட்ப வளர்ச்சி அப்படிங்கிற பேர்ல பூமியை நீங்க சிதைச்சிட்டீங்க அதனாலதான் எல்லாரும் சாக போறீங்க” என்றான்
அவன் சொன்னதைக் கேட்டு நண்பர்கள் மூவரும் அதிர்ச்சி அடைந்தனர் .
உடனே ஜோசப் ” என்னது நாங்க சாகப் போறோமா எப்படி ” என்று கேட்டான்.
” ஆமா நீங்க மட்டும் இல்ல மொத்த மனித இனமுமே கூண்டோடு அழிய போகுது அதற்காக தான எங்க இனத்தை சேர்ந்தவங்க இங்க வர போறாங்க “நண்பர்கள் மூவருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்க ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் அகவழகனை நம்பாத பார்வை ஒன்று பார்க்க ” எதுக்கு என்னை அப்படி பாக்குறீங்க நான் சொல்றது எல்லாம் உண்மைதான் எங்களோட space ship ஒன்னு பூமியோட outer spaceல நிக்குது அது வந்ததும் நீங்களாம் மொத்தமா காலி
எல்லா மனிதர்களையும் மொத்தமா அழிக்க போறாங்க “
” நீங்க மொத்தம் எத்தனை பேரு ” என்று சங்கர் கேட்டான்
” என்னோட சேர்த்து மொத்தம் 300 பேர் ” என்ற அகவழகனின் வார்த்தையை கேட்ட நண்பர்கள்
மூவருக்கும் மாரடைப்பு வராத குறை தான்.
” இதை எப்படி தடுக்குறது ” அவசரமாக இப்ராஹிம் கேட்டான்.
” அத தடுக்குறதுக்காக தான் என்ன அனுப்பி வச்சாங்க அதுக்காக தான் உங்க உதவி கேட்டு நான்இங்க வந்துருக்கேன்” என்று கூறினான் அகவழகன் .”யாரு உன்ன அனுப்புனா” என்று சங்கரன் வினவினான்
“அதுவும் எங்க கிரகத்திலிருந்து தான்” என்று அகவழகன் கூற
” அது எப்படிப்பா உங்க கிரகத்தில் இருந்து எங்கள அழிக்க ஆள் அனுப்புவீங்க காப்பாத்தவும்
ஆள் அனுப்புவீங்களா ” நக்கலாக கேட்டான் ஜோசப் .”ஆமா உங்களுக்குள்ள கொள்கை வேறுபாடு எல்லாம் வரது இல்லையா? அந்த மாதிரி தான்எங்கள சில பேர் மனிதர்களுக்கு ஆதரவா இருந்தோம் சில பேர் எதிரா இருந்தோம் எங்களோடalpha தொல்காப்பியன் பூமியிலிருந்து மனிதர்களை அழிக்கனும்னு முடிவு எடுத்து அதுக்காக
எங்களுக்கு training கொடுத்து இப்போ இந்த mission க்கு கூட்டிட்டு வந்தாரு ” என்றான்அகவழகன் .
“என்ன mission எதுக்காக ” என்று கேட்டான் இப்ராஹிம்
” நாம இப்படியே பேசிக்கிட்டே இருந்தோம்னா எங்க alpha வந்து மொத்த மனித இனத்தையுமேஅழிச்சிட்டு எங்க கிரகத்துக்கு போயிடுவாரு சீக்கிரமா நாம வேலையை பார்த்தோம்னா அப்போ
அப்போ எல்லா தகவல்களையும் நான் உங்களுக்கு சொல்றேன் ” என்று கூறினான் அகவழகன் .” இப்போ நாம என்ன பண்ணனும் ” உறுதியான குரலில் கேட்டான் சங்கரன்அவன் சொல்வதைக் கேட்ட ஜோசப் ” என்னடா உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா ஏதோவிண்வெளியில் இருந்து ஒரு உருவம் வந்து நம்ம கிட்ட பேசிகிட்டு இருந்தா அது
சொல்றதெல்லாம் உண்மை நீ நம்பிடுவியா இது ஏதோ பெரிய விஷயம் போல நாம் யாருக்காச்சும்இன்பார்ம் பண்ணிடலாம் ” என்று கத்தினான் ஜோசப்.
” டேய் நாம கண்ணால பார்க்கிறோம்ல ஏலியன் இருக்கிறது எல்லாம் உண்மை தான்டா இப்ப
நாம போய் இதை வெளியே சொன்னோம்னா நம்மல தான்டா எல்லாரும் பைத்தியம்னு
சொல்லுவாங்க” என்று நிதர்சனத்தை சொன்னான் இப்ராஹிம் .
” அடேய் குட்டி பசங்களா உங்க விளையாட்டு சண்டை எல்லாம் முடிச்சுட்டீங்கன்னா நாமபோய் வேலையை பார்க்கலாமா ” என்று கேட்டான் அகவழகன் .
” நமக்கு வேற வழி இல்லடா வாங்க போவோம் “என்று அகவழகன் பின்னால் நடக்கதொடங்கினான் சங்கரன் .
“இப்போ நாம எங்க போறோம்” பின்னாலே வந்து ஜோசப் கேட்டான்
“உங்க ஊருக்கு நடுவுல இருக்குல ஆலமரம் அங்கதான்” அகவழகன் பதில் அளிக்க
“நாம ஏன் இப்ப அங்க போய்கிட்டு இருக்கோம்” என்று கேட்டான் இப்ராஹிம்.
” அங்கதான் எங்க alpha அவரோட space ship ல வந்து இறங்க போறாரு” என்றான் அகவழகன்”அவர் ஏன் அங்க வராரு “என்று சங்கரன் கேட்க
“அங்க இருந்து தான் மனித இனத்தை அழிக்க ஸ்டார்ட் பண்ண போறாங்க” முகத்தில் எந்தஉணர்ச்சிகளையும் காட்டாமல் சொன்னான் அகவழகன் .
” நீங்க ஏன் எங்கள அழிக்கணும்னு நினைக்கிறீங்க” விடாமல் கேட்டான் ஜோசப் .
” எங்க முன்னோர்கள் தான் உங்களுக்கு எல்லாத்தையுமே சொல்லிக் கொடுத்தாங்க நெருப்பு, சக்கரம் ,விவசாயம் இப்படி உங்களுடைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணமே நாங்க தான்
ஆனா நீங்க அதை ஆக்கத்துக்கு பயன்படுத்தாம அழிவுக்கு பயன்படுத்தி இருக்கீங்க இது எங்க கிரகத்தை சேர்ந்த யாருக்குமே புடிக்கல நீங்க இயற்கையை காப்பாத்தாம அழிச்சிட்டு இருக்கீங்க
இன்னும் கொஞ்சம் விட்டா பூமிய அழிச்சிடுவீங்க அதனாலதான் உங்களை கொல்லனும்னு நினைக்கிறாங்க பூமியை காப்பாத்த மனிதர்கள் அழிக்கிறது தவிர அவங்களுக்கு வேற வழி
தெரியல” இன்று பெரிய விளக்க உரை அளித்தான் அகவழகன் .
“அப்புறம் ஏன் நீ எங்களை காப்பாத்த வந்து இருக்க ” என்று கேட்டான் இப்ராஹிம் .
” எங்க எல்லாருக்குமே ஒரே முடிவு இல்லை எங்களோட பெரிய alpha உங்களை அழிக்காமல் திருத்தணும்னு நினைக்கிறாரு உங்களுக்கு சொல்லிக் கொடுத்த ஆசான் நாங்க தான் அப்புறம்
இந்த கிரகத்தை காப்பாத்த வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கு மனித இனம் அழிஞ்சிருச்சுன்னா இந்த பூமிக்கு அது மிகப் பெரிய இழப்பா இருக்கும் அதனாலதான் எங்களோட
பெரிய alpha உங்கள காப்பாத்தணும்னு நினைக்கிறாரு ” என்று பதில் அளித்தான் அகவழகன் .
” ஆமா யாரது உங்க பெரிய alpha ” என்று கேட்டான் சங்கர்
” அகத்தியன் அவர்தான் இந்த கிரகத்திலேயே மூத்தவர் எங்க எல்லாருக்குமே தலைவர் அவரோட மாணவன் தான் இப்போ எங்க தலைவரா இருக்குற தொல்காப்பியன்” அவர்கள் கேள்விகள்
அனைத்திற்கும் பொறுமையாக பதில் அளித்து கொண்டிருந்தான் அகவழகன். “
அகத்தியனோட மாணவன் தொல்காப்பியன் ஏதோ தமிழ் சங்கஇலக்கியம் படிக்கிற மாதிரி இருக்குலடா” ஜோசப்பை பார்த்து இப்ராஹிம் கூற” டேய் அகவா நீ ஏலியன் தானே அப்புறம் எப்படி தமிழ் பேசுற” என்று கேட்டான் ஜோசப் .
” மனிதர்கள் உங்களுக்கு தான் மொழி வேறுபாடு நாங்க எல்லாம் ஒரே மொழி தான் பேசுவோம்” ” அப்படியா என்ன மொழி பேசுவீங்க” ஆச்சரியமாக கேட்டான் சங்கரன்”வேற என்ன தமிழ் தான் ” அசால்ட் ஆக பதில் அளித்தான் அகவழகன்”தமிழா ” மூவரும் ஒரு சேர அதிர்ச்சியாக கேட்க” ஆமா என் பேரே அகவழகன் அத வச்சு உங்களுக்கு தெரிய வேண்டாமா? எங்களோட மொழி தமிழ் தான் நாங்க தான் உங்களுக்கு நாகரீகத்தை சொல்லிக் கொடுத்தோம் எங்க மொழியை
நாங்க குடுத்தோம் அதுக்கு அப்புறம் தான் உச்சரிப்பு அடிப்படையில நீங்க வேற வேற மொழியை மாத்திக்கிட்டீங்க ” தோளை குலுக்கிக் கொண்டு சாதாரணமாக சொன்னான் அகவழகன்.
” டேய் ஜோசப் இது மட்டும் உலகின் முதல் மொழி எங்க மொழி தான் அப்படின்னு சொல்லிட்டு சுத்துற கூட்டம் கேட்டுச்சுன்னா என்ன ஆகும் ” நகைத்துக்கொண்டே கூறினான் இப்ராஹிம்
” என்ன ஆகும் அவங்களுக்கு வயிறு எரியும் அவ்வளவுதான் ” பதில் அளித்தான் சங்கரன்
” மொழியில எந்த வேறுபாடும் இல்லப்பா நாங்க எங்க கிரகத்துல எல்லாரும் ஒத்துமையா தான் இருக்கோம் மனிதர்கள் இந்த கிரகத்தில் வாழ ஆரம்பிச்சப்போ அவங்களும் எல்லாரும்
ஒற்றுமையா தான் இருந்தாங்க போக போக மொழி இனம் அப்படின்னு உங்களுக்குள்ளேயே வேறுபட்டுக்கிட்டு நீங்களே சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க நாம எல்லாரும் மனுஷங்க தான் அப்படிங்கறது நீங்க மறந்துட்டீங்க அதனால தான் இப்போ இவ்ளோ பெரிய பிரச்சனையில்
மாட்டிக்கப் போறீங்க ” என்ற பதில் அளித்தான் அகவழகன் .
நால்வரும் பேசிக் கொண்டே ஆலமரத்தடியை வந்தடைந்தனர்
” நீ சொன்ன மாதிரி நாம ஆலமரத்து கிட்ட வந்துட்டோம் இனிமே என்ன பண்ணனும் “
சீரியஸ்ஸாக கேட்டான் இப்ராஹிம் ” வேற ஒன்னும் இல்ல நாம இங்கேயே காத்திருக்க போறோம் எங்க alpha வந்த உடனே அவரை
போட்டு தள்ளிட்டு நான் எங்க வீட்டுக்கு போயிடுவேன் நீங்களும் வீட்டுக்கு போயிடலாம்
அவ்ளோதான் ” கூலாக பதில் அளித்தான் அகவழகன்.
” என்னது கொல்ல போறோமா” ஷாக் ஆகி கேட்டான் ஜோசப்
” ஆமா நமக்கு வேற வழி இல்ல எங்க Alpha தொல்காப்பியன் அவரோட குருவான அகத்தியன் சொல்றதையே கேக்கல மனிதர்களை அழிக்கிறது மட்டும்தான் இந்த பூமிக்கு பண்ற நல்லது அப்படின்னு அவர் நினைக்கிறாரு அதனால அவரை போட்டுத் தள்ளாம எதுவும் நடக்காது “
என்றான் அகவழகன் .
” நாம எப்படி அவர கொல்ல போறோம்” assassin ஆக மாறிய எண்ணத்தில் கேட்டான் சங்கர் அந்த நேரத்தில் சரியாக அகவழகன் கையில் கட்டி இருந்த ஸ்மார்ட் வாட்ச் போன்ற உபகரணம் ஒளிர நண்பர்களை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு தொடுத்திரையை இயக்கினான்.
” எண் மூன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம் அகவழகன் பேசுகிறேன் தோழரே”
……………
” எல்லாம் சரியாக உள்ளது தோழரே “
…………..
” தாங்கள் தரையிறங்களாம்”
……………
” ஊர்தியை எடுத்துக்கொண்டு தாங்கள் வரலாம் “
……………
” காத்திருக்கிறேன் “
……………..
” நன்றி தோழர் மதிவதனி “
இவ்வளவு நேரம் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் மூவரும் அவனையே
வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தனர் மூவரும் தன்னை கவனிப்பதை அறிந்த அகவழகன்
“டேய் என்னடா இப்படி பார்க்கிறீங்க ” என்று கேட்டான்
” ஒன்னும் இல்ல நீ இவ்ளோ நேரம் எந்த மொழியில பேசிகிட்டு இருந்தனு யோசிச்சிட்டு
இருந்தோம் ” என்று பதில் வழங்கினான் இப்ராஹிம்.
” தமிழ் தான் நீங்க தமிழ் தான் பேசுறீங்க உங்களுக்கு புரியலையா ” என்று ஆச்சரியமாக
கேட்டான் அகவழகன்
” அதெல்லாம் புரியுது நீ தூய தமிழ்ல பேசுறியேனு பார்த்தோம் அவ்வளவுதான் ” தன்மானத்தை
விட்டுக் கொடுக்காமல் பேசினான் ஜோசப்
“ஆமா நீ லேண்ட் ஆகலாம் அப்படின்னு பேசிட்டு இருந்தியே யாருகிட்ட நம்ம உதவி பண்ண
போறவங்க கிட்டயா ” என்று சங்கரன் கேட்டான் .
” இல்ல அவங்க தான் உங்களை கொல்ல போறாங்க ” அவர்கள் தலையில் பெரிய
அணுகுண்டாக தூக்கி எறிந்தான் அகவழகன்
“என்னடா சொல்ற அவங்க எங்கள கொல்ல போறாங்களா அப்புறம் ஏன் நீ அவங்களுக்கு
உதவி செஞ்சுட்டு இருக்க” கோபமாக கேட்டான் ஜோசப்
“ஆமா நான் அவங்களுக்கு உதவி செஞ்சுதான் ஆகணும் அப்போதான் என் மேல சந்தேகம்
வராது” நிதானமாக பதில் அளித்தான் அகவழகன் .
” என்னடா குழப்புற ஒழுங்கா தெளிவா சொல்லுடா” என்றான் இப்ராஹிம்
” எங்க alpha தொல்காப்பியன் எங்கள்ல 300 பேரை தேர்ந்தெடுத்து மனிதர்களை
அழிக்கறதுக்காக பயிற்சி கொடுக்குறதா இருந்தாரு இத தெரிஞ்சுகிட்ட எங்க பெரிய alpha
அகத்தியன் அதுக்கு எதிரா நின்னாரு ஆனா தொல்காப்பியன் அவரோட முடிவை மாத்திக்கறதா
இல்லை அகத்தியன் கிட்ட இருந்து பிரிந்து போய் 300 பேருக்கு பயிற்சி கொடுத்துட்டு இருந்தாரு
அகத்தியன் ஐயா கிட்ட இருந்த நான் அவரோட வழிகாட்டுதல் மூலமா அவங்க 300 பேர்ல
ஒருத்தரா மாறி பயிற்சி எடுத்துக்கிட்டேன் என் மேல எந்த சந்தேகமும் வராத அளவுக்கு
நடந்துகிட்டு இப்போ உங்களுக்கு உதவி பண்ணிக்கிட்டு இருக்கேன் இது தெரிஞ்சா எங்க
கிரகத்தை சட்டப்படி என்ன கொல்றதுக்கு கூட வாய்ப்பு இருக்கு” தன்னிலை விளக்கம்
அளித்தான் அகவழகன் .
” இப்போ அந்த 300 பேரும் இங்கே வர போறாங்களா “பயத்துடன் கேட்டான் சங்கரன்
” இல்ல அவங்க 300 பேராலயும் இங்க வர முடியாது” பதில் உரைத்தான் அகவழகன்.
“எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற” சந்தேகத்துடன் கேட்டான் ஜோசப்
” நாங்க பூமிக்கு வந்த ஸ்பேஸ் ஷிப்ல ஒரு சின்ன கோளாறு பண்ணி வச்சிட்டேன் அதனால
அவங்களால மொத்தமா தரையிறங்க முடியாது என்ன மாதிரி ஒருத்தர் ஒருத்தர தான் வர முடியும்
அதுக்காக தான் இந்த பூமியோட தட்பவெட்ப நிலையை தெரிஞ்சுக்க என்ன அனுப்பினாங்க
எப்படியும் முதல்ல எங்க ஆல்ஃபா தொல்காப்பியன் தான் வருவாரு அப்போ நாம தலைய
முடிச்சுட்டோம்னா வால் ஆடுறது நின்னு போயிடும் அவ்வளவுதான்” பெரிய விஷயத்தை
எளிமையாக கூறிவிட்டான் அகவழகன்
ஆனால் இது கேட்ட நம் கதாநாயகர்களுக்கு தான் அடிவயிறு கலங்குவது போன்ற உணர்வு
ஏற்பட்டது.
” அவர எப்படி கொல்ல போறோம்” பயத்துடனே கேட்டான் இப்ராஹிம்
“அதெல்லாம் யோசிக்கல அவர் வந்ததுக்கு அப்புறம் பாத்துக்கலாம்” என்று கூலாக பதில்
அளித்தான் அகவழகன்
” என்னாது உன் கிட்ட பிளானே இல்லையா எங்களை கொல்ல பாக்குறியா”அதிர்ச்சியாக
கேட்டான் ஜோசப் .
“என்ன நம்புங்க எதாவது நடக்கும் அகவழகனை நம்பினோர் கைவிடப்படார் “அகவழகன்
அவர்களுக்கு தைரியம் அளிக்கும் நோக்கத்தில் பேச அதுவே அவர்களுக்கு பயமாக தான்
இருந்தது.
நண்பர்கள் இருவரையும் பார்த்த சங்கர்
“என்னடா மச்சி இவன் இப்படி சொல்றான் பேசாம நாம வீட்டுக்கு போய்டலாமா எனக்கு பயமா
இருக்குடா” என்று கூறினான் உடனே அகவழகனோ
“என்னங்கடா என்னய தனியா கோர்த்து விட்டுட்டு போயிடலாம்னு ஐடியாவா நடக்காதே நான்
தொல்காப்பியன முடிக்கிற வரைக்கும் நீங்க மூணு பேரும் என் கூட தான் இருக்கீங்க இதுதான்
என் முடிவு” என்று உறுதியாக கூறினான் அகவழகன் எப்படியும் இவன் நம்மள விட போறதில்ல
என்று நினைத்துக் கொண்ட நம் கதாநாயகர்கள் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்று
கொண்டிருந்தனர் அந்த நேரம் வானத்திலிருந்து மஞ்சள் வண்ண ஒளி கீழ் இறங்க அது அருகில்
நெருங்கி வந்ததும் தான் தெரிந்தது அது ஒரு விண்கலம் என்று. உடனே நண்பர்கள் மூவரையும்
பார்த்து அகவழகன்
“போங்கடா போய் ஒளிஞ்சுக்கோங்க அவங்க வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன் நீங்க
எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும்” என்று சொன்னான் அவர்கள் மூவரும் சென்று ஒளிந்து
கொள்ளவும் அந்த விண்கலம் தரையிறங்கவும் சரியாக இருந்தது உள்ளே இருந்து வெளியே
வந்தான் தொல்காப்பியன் விண்கலத்திலிருந்து இருந்து கீழே இறங்கியவன். பூமியின் காற்றை
ஆழ்ந்து சுவாசித்து கண்களை மூடிக்கொண்டான் பின்னர் அங்கு நின்றிருந்த அகவழகனை
பார்த்து
“வாருங்கள் தோழரே நமது பணியை செய்யலாம்” என்று அழைத்தான்
உடனே அவனுக்கு எதிரே வந்த அகவழகன்
” தங்களை தடுக்க சொல்லி எனக்கு உத்தரவு வந்துள்ளது என்னை மன்னித்து விடுங்கள் alpha”
என்று சொல்லிவிட்டு நொடியில் தொல்காப்பியனின் கையில் இருந்த ஆயுதத்தை பிடுங்கி வீசி
இருந்தான் .
அவனை அதிர்ச்சி கலந்த கோப பார்வை பார்த்த தொல்காப்பியன்
“தங்களுக்கு இந்த உத்தரவு யாரிடமிருந்து வந்தது” என்று கேட்டான்
“நம் எல்லோருக்கும் தலைவர் அகத்தியனிடமிருந்துதான்” என்று அவன் கண்களை நேர்கொண்டு
பார்த்து பதில் அளித்தான் அகவழகன்.
அவன் குரலிலும் கண்களிலும் தெரிந்த உறுதியை பார்த்து தொல்காப்பியன் ஒரு சின்ன சிரிப்பை
உதிர்த்துவிட்டு அகவழகனை கைகளால் தாக்க தொடங்கியிருந்தான்
இருவருக்கும் மிகவும் பலமான சண்டை நடைபெற்றது சண்டையின் இறுதியில் அகவழகன்
தொல்காப்பியனை தனது துப்பாக்கி முனையில் சிறை பிடித்திருந்தான். இது அனைத்தையும் புதர்
மறைவில் இருந்து நண்பர்கள் மூவரும் பார்த்துக் கொண்டிருந்தனர் திடீரென்று தன் தலைக்கு
பின்னால் ஏதோ ஒன்று உரசுவது போல உணர்ந்தான் அகவழகன் அவன் பின்னால்
துப்பாக்கியோடு அவன் தலைக்கு குறி வைத்தவாறு நின்று கொண்டிருந்தாள் மதிவதனி. அவள்
தன் தலைக்கு குறி வைத்திருப்பதை உணர்ந்து கொண்ட அகவழகன் தன் கையில் இருந்த
துப்பாக்கியை கீழிறக்கினான் அவனை அடித்து கீழே தள்ளிய மதிவதனி அவனை கோப பார்வை
ஒன்றை பார்த்துவிட்டு
” நீ இவ்வாறு செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை அகவா நம் இனத்திற்கே
துரோகம் இழைக்க பார்க்கிறாயா உனக்கு நிச்சயம் தண்டனை உண்டு ” என்று கூறினாள்
” நான் தவறிழைக்கவில்லை மதிவதனி நீங்கள் தான் தவறிழைத்து கொண்டிருக்கிறீர்கள் நம்
முன்னோர்களின் வாக்கை நீங்கள் மறந்து விட்டீர்கள் மனித இனத்தை காப்பது தான் நமது
கடமை நீங்கள் அவர்களை அழிக்க நினைக்கிறீர்கள் ” என்று தோய்ந்த குரலில் பேசிக்
கொண்டிருந்தான் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே தனது wristband மூலமாக
தனது கிரகத்திற்கு தகவல் அனுப்பியிருந்தான்.
மாலை மங்கி இருட்டிய நேரத்தில் அப்போது தான் ஒரு குட்டி தூக்கம் போட்டு தூங்கி எழுந்த
ஜோசப் அவசர அவசரமாக தனது நண்பனான சங்கரன் வீட்டிற்கு சென்றான். அங்கு ஏற்கனவே
சங்கரும் இப்ராஹிமும் குழுமி இருந்தனர். சங்கர் இப்ராஹிம் ஜோசப் மூவரும் சிறு வயதில்
இருந்தே நண்பர்கள். எங்கு சென்றாலும் இணை பிரியாமல் செல்லும் அளவிற்கு
நெருக்கமானவர்கள். மூவருக்குமே அறிவியல் என்றால் அலாதி பிரியம் அதிலும் முக்கியமாக
வானவியல் மீது. தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்களையும் நிலாவையும் மற்ற கிரகங்களையும்
பார்ப்பது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான செயல். மற்ற கிரகங்களில் ஏதாவது உயிரினங்கள்
இருக்கும் என்பது இவர்களது ஆழமான நம்பிக்கை. விண்வெளி துறையில் ஏதாவது சாதிக்க
வேண்டும் என்பது இவர்களது வாழ்நாள் கனவு அதிலும் ஏலியன்களை கண்டுபிடிப்பதற்காக தான்
இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். யாருடா இவங்க விண்வெளி
ஆராய்ச்சியாளர்களா? என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்கு புரிகிறது ஆனால் இவர்கள்
ஏழாம் வகுப்பு தான் படிக்கிறார்கள். இன்றும் அது போல் ஏதோ ஒரு ஆராய்ச்சிக்காக தான்
சங்கரன் வீட்டின் மொட்டை மாடிக்கு வருவதாக இருந்தனர். சங்கரன் வீட்டு மொட்டை மாடியில்
மூன்று நாற்காலிகள் அவற்றுக்கு நடுவே ஒரு மேஜை அந்த மேஜை மேல் ஒரு மடிக்கணினி
அதற்கு அருகிலேயே ஒரு தொலைநோக்கி இருந்தது. அவசர அவசரமாக மேலே வந்த ஜோசப்,
இப்ராஹிம் சங்கரன் இருவருக்கும் நடுவே உள்ள நாற்காலியில் அமர்ந்தான் அருகில் அமர்ந்து
மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்த சங்கரனிடம்
” என்னடா மச்சான் சிக்னல் ஏதாச்சும் கிடைச்சதா ” என்று கேட்டான் “
இதுவரைக்கும் எதுவும் கிடைக்கலடா ஆனா சீக்கிரமா ஏதாச்சும் சிக்னல் வரும்னு நான்
நினைக்கிறேன் ” என்றான் சங்கர்
” நாமளும் ஒரு மாசமா சர்ச் பண்ணிட்டு இருக்கோம் ஆனா எந்த சிக்னலும் கிடைக்கலையே டா
” என்று அலுத்து கொண்டான் இப்ராஹிம்
இவர்கள் சிக்னல் சிக்னல் என்கிறார்களே அது என்ன சிக்னல் என்று யோசிக்கிறீர்களா எல்லாம்
ஏலியன்களிடமிருந்து வரும் சிக்னல் தான். சங்கரனின் அண்ணன் சரவணன் கல்லூரி முடித்து
வேலைக்கு சென்றுவிட சரவணனுக்கு அரசு பள்ளியில் இலவசமாக கொடுக்கப்பட்ட லேப்டாப்
சங்கரின் கைக்கு மாறியது. அன்று முதல் இவர்கள் இவ்வாறு தான் இரவு நேரங்களில்
ஏலியன்கள் அனுப்பும் சிக்னல் ஏதாவது கிடைக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு கிடைத்தது என்னவோ சிட்டுக்குருவிகளை
கொல்லும் செல்போன் சிக்னல்கள் மட்டுமே. ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து
கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கீழே இருந்து சங்கரனின் அம்மா சாந்தி
” பசங்களா சாப்பிட வாங்கடா” என்று அழைத்தார் அவர் கூப்பிட்டவுடன் மூவரும் கீழே இறங்கி
சென்றனர் அங்கு ஏற்கனவே சங்கரனின் அப்பா கந்தசாமியும் அண்ணன் சரவணனும் சாப்பிட்டுக்
கொண்டிருந்தனர் உள்ளே வந்த மூவரையும் பார்த்த சாந்தி
” வாங்கப்பா சாப்பிடலாம் ” என்று அழைத்தார் உடனே இப்ராஹிம்
” இல்லம்மா நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறேன் எனக்காக உம்மாவும் வாப்பாவும்
சாப்பிடாம இருப்பாங்க ” என்று மறுத்தான் அதை கவனித்த ஜோசப்பும் உடனே
” சரி மம்மி நானும் போயிட்டு வரேன் நான் போகலைன்னா மரியா விளக்கமாத்தோட இங்க
வருவா ” என்று சொல்லிவிட்டு எஸ் ஆக துணிய அவன் அருகில் வந்த சாந்தி
” எத்தனை தடவை சொல்லி இருக்கேன் அம்மாவை பேர் சொல்லி கூப்பிடாதன்னு” என்று
அவன் காதை பிடித்து திருக அவர் கைகளில் இருந்து விடுபட்டுக் கொண்ட ஜோசப் இப்ராஹிமை
பார்க்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு
” அப்போ போய்ட்டு வரோம் சாந்தி ” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டனர் இதை பார்த்துக்
கொண்டிருந்த சங்கர் சரவணன் கந்தசாமி மூவரும் சிரிக்க சாந்தி திரும்பி அவர்களை முறைத்து
வைத்தார். இப்படித்தான் இவர்கள் மூவரும் சேர்ந்தால் வீடு கலகலப்பாக இருக்கும். மூவர்
வீட்டுக்கும் மூவருமே செல்லப்பிள்ளை தான் ஜாதி மதம் பேதம் இல்லாதது இவர்கள் நட்பு.
இந்தியாவே மத நல்லிணக்கத்தை இவர்களிடம் தான் தெரிந்து கொள்ள வேண்டும். தீபாவளிக்கு
மூவரும் சேர்ந்து தான் பட்டாசு வெடிப்பர் ரம்ஜானுக்கு இப்ராஹிம் வீட்டில் பிரியாணி என்றால்
முதலாவதாக உட்கார்ந்து இருப்பது ஜோசப் மற்றும் சங்கராக தான் இருக்கும். அதுபோல
கிறிஸ்துமஸுக்கு பரிசுகள் மூவருக்கும் சேர்ந்தே கிடைக்கும். இரவு உணவை முடித்துவிட்டு
மூவரும் மீண்டும் சங்கரன் வீட்டு மொட்டை மாடிக்கு வந்தனர். சங்கரன் மடிக்கணினியில்
மீண்டும் ஏதோ தட்டிக் கொண்டிருக்க இப்ராஹிம் தொலைநோக்கி மூலம் வானவெளியை
கவனித்துக் கொண்டிருந்தான் . எப்போதும் போல லேட்டாக வந்த ஜோசப் வெறும் கண்களால்
வானத்தை நோட்டமிட அந்த நேரம் சங்கரன் இப்ராஹிம் இருவரும்
” டேய் டேய் ஏதோ தெரியுதுடா ” என்று ஒரு சேர கத்த இப்ராஹிமும் ஜோசப்பும் சங்கர் அருகே
சென்று கணினி திரையை கவனித்தனர் . அப்போது வெளியே இருந்து சிக்னல் ஏதோ கிடைக்க
வானத்திலிருந்து விண்கல் போல வந்த ஏதோ ஒன்று சங்கரன் வீட்டிற்கு பின்னாடி இருந்த வெற்று
மைதானத்தில் சென்று விழுந்தது மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள மூவரும் இறங்கி
அந்த விண்கலை நோக்கி ஓட ஆரம்பித்தனர். ஜோசப் வரும்போது சங்கரின் மடிக்கணினியையும்
கையோடு கொண்டு வந்திருந்தார்
” சிக்னல் இங்க இருந்து தான் கிடைக்குதாடா என்று கேட்டான் சங்கர்
“ஆமாண்டா இங்க இருந்து தான் கிடைக்குது நல்லா பாரு” என்று ஜோசப் சொல்ல மூவரும்
எதையோ தேடிக் கொண்டிருந்தனர்.
“விழுந்தது ஏதோ asteroid ஆ இருக்கும் போல டா” என்று கூறினான் இப்ராஹிம்.
“அந்த பக்கம் பாருடா எதோ இருக்கு” என்று கத்தினான் சங்கர் .
மூவரும் அதன் அருகே சென்று பார்க்க ஒருவர் மட்டும் உள்ளே அமரும் வடிவத்தில்
உருண்டையாக மஞ்சள் வண்ணத்தில் அது மின்னிக் கொண்டிருந்தது . மூவரும் அதன் அருகில்
செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே நின்றிருந்தனர். அப்போது அந்த
உருண்டை வடிவத்தை திறந்து கொண்டு மனிதர்கள் போலவே சற்று வித்தியாசமாக இருந்த ஒரு
உருவம் வெளியே வந்தது.
” அப்பாடா ஒரு வழியா பூமிக்கு வந்துட்டேன் நம்ம முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க
எவ்ளோ நல்லா இருக்கு ” என்று கூறிக்கொண்டு சுற்றி பார்த்தது அந்த உருவம்
நண்பர்கள் மூவரும் கையில் கிடைத்த மரக்கட்டையை எடுத்துக்கொண்டு அந்த உருவத்தை
தாக்க தயாராக நின்றனர் .அவர்கள் மூவரையும் பார்த்த அந்த உருவம் தன் பெல்டில் இருந்து
துப்பாக்கி போன்ற ஆயுதத்தை எடுத்து இப்ராஹீமை குறிவைத்துக்கொண்டே
” இங்க பாருங்க நான் உங்களை எதுவும் செய்ய மாட்டேன் நான் ஒரு முக்கியமான வேலைக்காக
இங்க வந்தேன் உங்க மூணு பேரையும் எனக்கு தெரியும் உங்களுக்கு சிக்னல் அனுப்புனது
நான்தான் உங்க உதவி எனக்கு தேவைப்படுது அதனால தான் நான் இங்க வந்தேன்” என்று
கூறியது உடனே நண்பர்கள் மூவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்
” எங்க உதவி உனக்கு வேணும்னா அப்புறம் எதுக்கு கைல என்னத்தையோ வெச்சு எங்கள
பயமுறுத்திக்கிட்டு இருக்க ” என்று கேட்டான் ஜோசப்
உடனே தன் கையில் இருந்த ஆயுதத்தை கீழ் இறக்கிய அந்த உருவம்
” ஐயையோ சாரிப்பா ” என்றது உடனே தைரியசாலியாக மாறிய நமது கதாநாயகர்கள் மூவரும்
யார் நீ ? எதுக்காக இங்க வந்த? எங்க இருந்து வந்திருக்க ? உனக்கு என்ன வேணும் ? என்றே
கேள்விகளை தொடுக்க ஆரம்பித்திருந்தனர் .
இவர்கள் கேட்ட கேள்வியில் குழம்பிப்போன அந்த உருவம்
” ஹேய் cool cool எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுறீங்க என் பேரு அகவழகன் என்னோட
கிரகத்தோட பேரு நான் உன்கிட்ட சொல்ல முடியாது அது ஒரு confidential ஆன விஷயம்
அதனால சொல்ல முடியாது ” என்றது .
” பரவால்ல சொல்லு ” என்றான் சங்கரன் .
” நான் எதுக்கு சொல்லணும் நான் சொன்னதும் நீங்க ஆராய்ச்சி பண்ணி எங்க கிரகத்தை
கண்டுபிடிச்சிடுவீங்க அப்புறம் எங்க கிரகத்துக்கு குடிவந்து பூமி மாதிரி எங்கு கிரகத்தையும்
அழிக்க பாக்குறீங்களா ” என்று கோபமாக கேட்டது
அவன் கோபத்தை கண்டு அதிர்ந்த நண்பர்கள் மூவரும்
” இப்ப எதுக்கு நீ கோபப்படுற அப்படி நாங்க என்ன பூமிய அழிச்சிட்டோம் ” என்று கோரசாக
கேட்டனர் .
உடனே அகவழகனோ
” நீங்களே சொல்லுங்க பூமி முன்னாடி இருந்த மாதிரியா இப்பயும் இருக்கு முக்காவாசி மரங்கள
காணோம் முன்னாடி இருந்த உயிரினங்கள் பாதிய காணோம் எல்லாத்தையுமே அழிச்சது நீங்க
தானே தொழில்நுட்ப வளர்ச்சி அப்படிங்கிற பேர்ல பூமியை நீங்க சிதைச்சிட்டீங்க அதனாலதான்
எல்லாரும் சாக போறீங்க” என்றான்
அவன் சொன்னதைக் கேட்டு நண்பர்கள் மூவரும் அதிர்ச்சி அடைந்தனர் .
உடனே ஜோசப்
” என்னது நாங்க சாகப் போறோமா எப்படி ” என்று கேட்டான்.
” ஆமா நீங்க மட்டும் இல்ல மொத்த மனித இனமுமே கூண்டோடு அழிய போகுது அதற்காக
தான எங்க இனத்தை சேர்ந்தவங்க இங்க வர போறாங்க “
நண்பர்கள் மூவருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்க ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்
கொண்டனர். அவர்கள் அகவழகனை நம்பாத பார்வை ஒன்று பார்க்க
” எதுக்கு என்னை அப்படி பாக்குறீங்க நான் சொல்றது எல்லாம் உண்மைதான் எங்களோட
space ship ஒன்னு பூமியோட outer spaceல நிக்குது அது வந்ததும் நீங்களாம் மொத்தமா காலி
எல்லா மனிதர்களையும் மொத்தமா அழிக்க போறாங்க “
” நீங்க மொத்தம் எத்தனை பேரு ” என்று சங்கர் கேட்டான்
” என்னோட சேர்த்து மொத்தம் 300 பேர் ” என்ற அகவழகனின் வார்த்தையை கேட்ட நண்பர்கள்
மூவருக்கும் மாரடைப்பு வராத குறை தான்.
” இதை எப்படி தடுக்குறது ” அவசரமாக இப்ராஹிம் கேட்டான்.
” அத தடுக்குறதுக்காக தான் என்ன அனுப்பி வச்சாங்க அதுக்காக தான் உங்க உதவி கேட்டு நான்
இங்க வந்துருக்கேன்” என்று கூறினான் அகவழகன் .
“யாரு உன்ன அனுப்புனா” என்று சங்கரன் வினவினான்
“அதுவும் எங்க கிரகத்திலிருந்து தான்” என்று அகவழகன் கூற
” அது எப்படிப்பா உங்க கிரகத்தில் இருந்து எங்கள அழிக்க ஆள் அனுப்புவீங்க காப்பாத்தவும்
ஆள் அனுப்புவீங்களா ” நக்கலாக கேட்டான் ஜோசப் .
“ஆமா உங்களுக்குள்ள கொள்கை வேறுபாடு எல்லாம் வரது இல்லையா? அந்த மாதிரி தான்
எங்கள சில பேர் மனிதர்களுக்கு ஆதரவா இருந்தோம் சில பேர் எதிரா இருந்தோம் எங்களோட
alpha தொல்காப்பியன் பூமியிலிருந்து மனிதர்களை அழிக்கனும்னு முடிவு எடுத்து அதுக்காக
எங்களுக்கு training கொடுத்து இப்போ இந்த mission க்கு கூட்டிட்டு வந்தாரு ” என்றான்
அகவழகன் .
“என்ன mission எதுக்காக ” என்று கேட்டான் இப்ராஹிம்
” நாம இப்படியே பேசிக்கிட்டே இருந்தோம்னா எங்க alpha வந்து மொத்த மனித இனத்தையுமே
அழிச்சிட்டு எங்க கிரகத்துக்கு போயிடுவாரு சீக்கிரமா நாம வேலையை பார்த்தோம்னா அப்போ
அப்போ எல்லா தகவல்களையும் நான் உங்களுக்கு சொல்றேன் ” என்று கூறினான் அகவழகன் .
” இப்போ நாம என்ன பண்ணனும் ” உறுதியான குரலில் கேட்டான் சங்கரன்
அவன் சொல்வதைக் கேட்ட ஜோசப் ” என்னடா உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா ஏதோ
விண்வெளியில் இருந்து ஒரு உருவம் வந்து நம்ம கிட்ட பேசிகிட்டு இருந்தா அது
சொல்றதெல்லாம் உண்மை நீ நம்பிடுவியா இது ஏதோ பெரிய விஷயம் போல நாம் யாருக்காச்சும்
இன்பார்ம் பண்ணிடலாம் ” என்று கத்தினான் ஜோசப்.
” டேய் நாம கண்ணால பார்க்கிறோம்ல ஏலியன் இருக்கிறது எல்லாம் உண்மை தான்டா இப்ப
நாம போய் இதை வெளியே சொன்னோம்னா நம்மல தான்டா எல்லாரும் பைத்தியம்னு
சொல்லுவாங்க” என்று நிதர்சனத்தை சொன்னான் இப்ராஹிம் .
” அடேய் குட்டி பசங்களா உங்க விளையாட்டு சண்டை எல்லாம் முடிச்சுட்டீங்கன்னா நாம
போய் வேலையை பார்க்கலாமா ” என்று கேட்டான் அகவழகன் .
” நமக்கு வேற வழி இல்லடா வாங்க போவோம் “என்று அகவழகன் பின்னால் நடக்க
தொடங்கினான் சங்கரன் .
“இப்போ நாம எங்க போறோம்” பின்னாலே வந்து ஜோசப் கேட்டான்
“உங்க ஊருக்கு நடுவுல இருக்குல ஆலமரம் அங்கதான்” அகவழகன் பதில் அளிக்க
“நாம ஏன் இப்ப அங்க போய்கிட்டு இருக்கோம்” என்று கேட்டான் இப்ராஹிம்.
” அங்கதான் எங்க alpha அவரோட space ship ல வந்து இறங்க போறாரு” என்றான் அகவழகன்
“அவர் ஏன் அங்க வராரு “என்று சங்கரன் கேட்க
“அங்க இருந்து தான் மனித இனத்தை அழிக்க ஸ்டார்ட் பண்ண போறாங்க” முகத்தில் எந்த
உணர்ச்சிகளையும் காட்டாமல் சொன்னான் அகவழகன் .
” நீங்க ஏன் எங்கள அழிக்கணும்னு நினைக்கிறீங்க” விடாமல் கேட்டான் ஜோசப் .
” எங்க முன்னோர்கள் தான் உங்களுக்கு எல்லாத்தையுமே சொல்லிக் கொடுத்தாங்க நெருப்பு,
சக்கரம் ,விவசாயம் இப்படி உங்களுடைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணமே நாங்க தான்
ஆனா நீங்க அதை ஆக்கத்துக்கு பயன்படுத்தாம அழிவுக்கு பயன்படுத்தி இருக்கீங்க இது எங்க
கிரகத்தை சேர்ந்த யாருக்குமே புடிக்கல நீங்க இயற்கையை காப்பாத்தாம அழிச்சிட்டு இருக்கீங்க
இன்னும் கொஞ்சம் விட்டா பூமிய அழிச்சிடுவீங்க அதனாலதான் உங்களை கொல்லனும்னு
நினைக்கிறாங்க பூமியை காப்பாத்த மனிதர்கள் அழிக்கிறது தவிர அவங்களுக்கு வேற வழி
தெரியல” இன்று பெரிய விளக்க உரை அளித்தான் அகவழகன் .
“அப்புறம் ஏன் நீ எங்களை காப்பாத்த வந்து இருக்க ” என்று கேட்டான் இப்ராஹிம் .
” எங்க எல்லாருக்குமே ஒரே முடிவு இல்லை எங்களோட பெரிய alpha உங்களை அழிக்காமல்
திருத்தணும்னு நினைக்கிறாரு உங்களுக்கு சொல்லிக் கொடுத்த ஆசான் நாங்க தான் அப்புறம்
இந்த கிரகத்தை காப்பாத்த வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கு மனித இனம்
அழிஞ்சிருச்சுன்னா இந்த பூமிக்கு அது மிகப் பெரிய இழப்பா இருக்கும் அதனாலதான் எங்களோட
பெரிய alpha உங்கள காப்பாத்தணும்னு நினைக்கிறாரு ” என்று பதில் அளித்தான் அகவழகன் .
” ஆமா யாரது உங்க பெரிய alpha ” என்று கேட்டான் சங்கர்
” அகத்தியன் அவர்தான் இந்த கிரகத்திலேயே மூத்தவர் எங்க எல்லாருக்குமே தலைவர் அவரோட
மாணவன் தான் இப்போ எங்க தலைவரா இருக்குற தொல்காப்பியன்” அவர்கள் கேள்விகள்
அனைத்திற்கும் பொறுமையாக பதில் அளித்து கொண்டிருந்தான் அகவழகன். “
அகத்தியனோட மாணவன் தொல்காப்பியன் ஏதோ தமிழ் சங்கஇலக்கியம் படிக்கிற மாதிரி
இருக்குலடா” ஜோசப்பை பார்த்து இப்ராஹிம் கூற
” டேய் அகவா நீ ஏலியன் தானே அப்புறம் எப்படி தமிழ் பேசுற” என்று கேட்டான் ஜோசப் .
” மனிதர்கள் உங்களுக்கு தான் மொழி வேறுபாடு நாங்க எல்லாம் ஒரே மொழி தான் பேசுவோம்”
” அப்படியா என்ன மொழி பேசுவீங்க” ஆச்சரியமாக கேட்டான் சங்கரன்
“வேற என்ன தமிழ் தான் ” அசால்ட் ஆக பதில் அளித்தான் அகவழகன்
“தமிழா ” மூவரும் ஒரு சேர அதிர்ச்சியாக கேட்க
” ஆமா என் பேரே அகவழகன் அத வச்சு உங்களுக்கு தெரிய வேண்டாமா? எங்களோட மொழி
தமிழ் தான் நாங்க தான் உங்களுக்கு நாகரீகத்தை சொல்லிக் கொடுத்தோம் எங்க மொழியை
நாங்க குடுத்தோம் அதுக்கு அப்புறம் தான் உச்சரிப்பு அடிப்படையில நீங்க வேற வேற மொழியை
மாத்திக்கிட்டீங்க ” தோளை குலுக்கிக் கொண்டு சாதாரணமாக சொன்னான் அகவழகன்.
” டேய் ஜோசப் இது மட்டும் உலகின் முதல் மொழி எங்க மொழி தான் அப்படின்னு சொல்லிட்டு
சுத்துற கூட்டம் கேட்டுச்சுன்னா என்ன ஆகும் ” நகைத்துக்கொண்டே கூறினான் இப்ராஹிம்
” என்ன ஆகும் அவங்களுக்கு வயிறு எரியும் அவ்வளவுதான் ” பதில் அளித்தான் சங்கரன்
” மொழியில எந்த வேறுபாடும் இல்லப்பா நாங்க எங்க கிரகத்துல எல்லாரும் ஒத்துமையா தான்
இருக்கோம் மனிதர்கள் இந்த கிரகத்தில் வாழ ஆரம்பிச்சப்போ அவங்களும் எல்லாரும்
ஒற்றுமையா தான் இருந்தாங்க போக போக மொழி இனம் அப்படின்னு உங்களுக்குள்ளேயே
வேறுபட்டுக்கிட்டு நீங்களே சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க நாம எல்லாரும் மனுஷங்க தான்
அப்படிங்கறது நீங்க மறந்துட்டீங்க அதனால தான் இப்போ இவ்ளோ பெரிய பிரச்சனையில்
மாட்டிக்கப் போறீங்க ” என்ற பதில் அளித்தான் அகவழகன் .
நால்வரும் பேசிக் கொண்டே ஆலமரத்தடியை வந்தடைந்தனர்
” நீ சொன்ன மாதிரி நாம ஆலமரத்து கிட்ட வந்துட்டோம் இனிமே என்ன பண்ணனும் “
சீரியஸ்ஸாக கேட்டான் இப்ராஹிம்
” வேற ஒன்னும் இல்ல நாம இங்கேயே காத்திருக்க போறோம் எங்க alpha வந்த உடனே அவரை
போட்டு தள்ளிட்டு நான் எங்க வீட்டுக்கு போயிடுவேன் நீங்களும் வீட்டுக்கு போயிடலாம்
அவ்ளோதான் ” கூலாக பதில் அளித்தான் அகவழகன்.
” என்னது கொல்ல போறோமா” ஷாக் ஆகி கேட்டான் ஜோசப்
” ஆமா நமக்கு வேற வழி இல்ல எங்க Alpha தொல்காப்பியன் அவரோட குருவான அகத்தியன்
சொல்றதையே கேக்கல மனிதர்களை அழிக்கிறது மட்டும்தான் இந்த பூமிக்கு பண்ற நல்லது
அப்படின்னு அவர் நினைக்கிறாரு அதனால அவரை போட்டுத் தள்ளாம எதுவும் நடக்காது “
என்றான் அகவழகன் .
” நாம எப்படி அவர கொல்ல போறோம்” assassin ஆக மாறிய எண்ணத்தில் கேட்டான் சங்கர்
அந்த நேரத்தில் சரியாக அகவழகன் கையில் கட்டி இருந்த ஸ்மார்ட் வாட்ச் போன்ற உபகரணம்
ஒளிர நண்பர்களை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு தொடுத்திரையை இயக்கினான்.
” எண் மூன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம் அகவழகன் பேசுகிறேன் தோழரே”
……………
” எல்லாம் சரியாக உள்ளது தோழரே “
…………..
” தாங்கள் தரையிறங்களாம்”
……………
” ஊர்தியை எடுத்துக்கொண்டு தாங்கள் வரலாம் “
……………
” காத்திருக்கிறேன் “
……………..
” நன்றி தோழர் மதிவதனி “
இவ்வளவு நேரம் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் மூவரும் அவனையே
வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தனர் மூவரும் தன்னை கவனிப்பதை அறிந்த அகவழகன்
“டேய் என்னடா இப்படி பார்க்கிறீங்க ” என்று கேட்டான்
” ஒன்னும் இல்ல நீ இவ்ளோ நேரம் எந்த மொழியில பேசிகிட்டு இருந்தனு யோசிச்சிட்டு
இருந்தோம் ” என்று பதில் வழங்கினான் இப்ராஹிம்.
” தமிழ் தான் நீங்க தமிழ் தான் பேசுறீங்க உங்களுக்கு புரியலையா ” என்று ஆச்சரியமாக
கேட்டான் அகவழகன்
” அதெல்லாம் புரியுது நீ தூய தமிழ்ல பேசுறியேனு பார்த்தோம் அவ்வளவுதான் ” தன்மானத்தை
விட்டுக் கொடுக்காமல் பேசினான் ஜோசப்
“ஆமா நீ லேண்ட் ஆகலாம் அப்படின்னு பேசிட்டு இருந்தியே யாருகிட்ட நம்ம உதவி பண்ண
போறவங்க கிட்டயா ” என்று சங்கரன் கேட்டான் .
” இல்ல அவங்க தான் உங்களை கொல்ல போறாங்க ” அவர்கள் தலையில் பெரிய
அணுகுண்டாக தூக்கி எறிந்தான் அகவழகன்
“என்னடா சொல்ற அவங்க எங்கள கொல்ல போறாங்களா அப்புறம் ஏன் நீ அவங்களுக்கு
உதவி செஞ்சுட்டு இருக்க” கோபமாக கேட்டான் ஜோசப்
“ஆமா நான் அவங்களுக்கு உதவி செஞ்சுதான் ஆகணும் அப்போதான் என் மேல சந்தேகம்
வராது” நிதானமாக பதில் அளித்தான் அகவழகன் .
” என்னடா குழப்புற ஒழுங்கா தெளிவா சொல்லுடா” என்றான் இப்ராஹிம்
” எங்க alpha தொல்காப்பியன் எங்கள்ல 300 பேரை தேர்ந்தெடுத்து மனிதர்களை
அழிக்கறதுக்காக பயிற்சி கொடுக்குறதா இருந்தாரு இத தெரிஞ்சுகிட்ட எங்க பெரிய alpha
அகத்தியன் அதுக்கு எதிரா நின்னாரு ஆனா தொல்காப்பியன் அவரோட முடிவை மாத்திக்கறதா
இல்லை அகத்தியன் கிட்ட இருந்து பிரிந்து போய் 300 பேருக்கு பயிற்சி கொடுத்துட்டு இருந்தாரு
அகத்தியன் ஐயா கிட்ட இருந்த நான் அவரோட வழிகாட்டுதல் மூலமா அவங்க 300 பேர்ல
ஒருத்தரா மாறி பயிற்சி எடுத்துக்கிட்டேன் என் மேல எந்த சந்தேகமும் வராத அளவுக்கு
நடந்துகிட்டு இப்போ உங்களுக்கு உதவி பண்ணிக்கிட்டு இருக்கேன் இது தெரிஞ்சா எங்க
கிரகத்தை சட்டப்படி என்ன கொல்றதுக்கு கூட வாய்ப்பு இருக்கு” தன்னிலை விளக்கம்
அளித்தான் அகவழகன் .
” இப்போ அந்த 300 பேரும் இங்கே வர போறாங்களா “பயத்துடன் கேட்டான் சங்கரன்
” இல்ல அவங்க 300 பேராலயும் இங்க வர முடியாது” பதில் உரைத்தான் அகவழகன்.
“எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற” சந்தேகத்துடன் கேட்டான் ஜோசப்
” நாங்க பூமிக்கு வந்த ஸ்பேஸ் ஷிப்ல ஒரு சின்ன கோளாறு பண்ணி வச்சிட்டேன் அதனால
அவங்களால மொத்தமா தரையிறங்க முடியாது என்ன மாதிரி ஒருத்தர் ஒருத்தர தான் வர முடியும்
அதுக்காக தான் இந்த பூமியோட தட்பவெட்ப நிலையை தெரிஞ்சுக்க என்ன அனுப்பினாங்க
எப்படியும் முதல்ல எங்க ஆல்ஃபா தொல்காப்பியன் தான் வருவாரு அப்போ நாம தலைய
முடிச்சுட்டோம்னா வால் ஆடுறது நின்னு போயிடும் அவ்வளவுதான்” பெரிய விஷயத்தை
எளிமையாக கூறிவிட்டான் அகவழகன்
ஆனால் இது கேட்ட நம் கதாநாயகர்களுக்கு தான் அடிவயிறு கலங்குவது போன்ற உணர்வு
ஏற்பட்டது.
” அவர எப்படி கொல்ல போறோம்” பயத்துடனே கேட்டான் இப்ராஹிம்
“அதெல்லாம் யோசிக்கல அவர் வந்ததுக்கு அப்புறம் பாத்துக்கலாம்” என்று கூலாக பதில்
அளித்தான் அகவழகன்
” என்னாது உன் கிட்ட பிளானே இல்லையா எங்களை கொல்ல பாக்குறியா”அதிர்ச்சியாக
கேட்டான் ஜோசப் .
“என்ன நம்புங்க எதாவது நடக்கும் அகவழகனை நம்பினோர் கைவிடப்படார் “அகவழகன்
அவர்களுக்கு தைரியம் அளிக்கும் நோக்கத்தில் பேச அதுவே அவர்களுக்கு பயமாக தான்
இருந்தது.
நண்பர்கள் இருவரையும் பார்த்த சங்கர்
“என்னடா மச்சி இவன் இப்படி சொல்றான் பேசாம நாம வீட்டுக்கு போய்டலாமா எனக்கு பயமா
இருக்குடா” என்று கூறினான் உடனே அகவழகனோ
“என்னங்கடா என்னய தனியா கோர்த்து விட்டுட்டு போயிடலாம்னு ஐடியாவா நடக்காதே நான்
தொல்காப்பியன முடிக்கிற வரைக்கும் நீங்க மூணு பேரும் என் கூட தான் இருக்கீங்க இதுதான்
என் முடிவு” என்று உறுதியாக கூறினான் அகவழகன் எப்படியும் இவன் நம்மள விட போறதில்ல
என்று நினைத்துக் கொண்ட நம் கதாநாயகர்கள் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்று
கொண்டிருந்தனர் அந்த நேரம் வானத்திலிருந்து மஞ்சள் வண்ண ஒளி கீழ் இறங்க அது அருகில்
நெருங்கி வந்ததும் தான் தெரிந்தது அது ஒரு விண்கலம் என்று. உடனே நண்பர்கள் மூவரையும்
பார்த்து அகவழகன்
“போங்கடா போய் ஒளிஞ்சுக்கோங்க அவங்க வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன் நீங்க
எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும்” என்று சொன்னான் அவர்கள் மூவரும் சென்று ஒளிந்து
கொள்ளவும் அந்த விண்கலம் தரையிறங்கவும் சரியாக இருந்தது உள்ளே இருந்து வெளியே
வந்தான் தொல்காப்பியன் விண்கலத்திலிருந்து இருந்து கீழே இறங்கியவன். பூமியின் காற்றை
ஆழ்ந்து சுவாசித்து கண்களை மூடிக்கொண்டான் பின்னர் அங்கு நின்றிருந்த அகவழகனை
பார்த்து
“வாருங்கள் தோழரே நமது பணியை செய்யலாம்” என்று அழைத்தான்
உடனே அவனுக்கு எதிரே வந்த அகவழகன்
” தங்களை தடுக்க சொல்லி எனக்கு உத்தரவு வந்துள்ளது என்னை மன்னித்து விடுங்கள் alpha”
என்று சொல்லிவிட்டு நொடியில் தொல்காப்பியனின் கையில் இருந்த ஆயுதத்தை பிடுங்கி வீசி
இருந்தான் .
அவனை அதிர்ச்சி கலந்த கோப பார்வை பார்த்த தொல்காப்பியன்
“தங்களுக்கு இந்த உத்தரவு யாரிடமிருந்து வந்தது” என்று கேட்டான்
“நம் எல்லோருக்கும் தலைவர் அகத்தியனிடமிருந்துதான்” என்று அவன் கண்களை நேர்கொண்டு
பார்த்து பதில் அளித்தான் அகவழகன்.
அவன் குரலிலும் கண்களிலும் தெரிந்த உறுதியை பார்த்து தொல்காப்பியன் ஒரு சின்ன சிரிப்பை
உதிர்த்துவிட்டு அகவழகனை கைகளால் தாக்க தொடங்கியிருந்தான்
இருவருக்கும் மிகவும் பலமான சண்டை நடைபெற்றது சண்டையின் இறுதியில் அகவழகன்
தொல்காப்பியனை தனது துப்பாக்கி முனையில் சிறை பிடித்திருந்தான். இது அனைத்தையும் புதர்
மறைவில் இருந்து நண்பர்கள் மூவரும் பார்த்துக் கொண்டிருந்தனர் திடீரென்று தன் தலைக்கு
பின்னால் ஏதோ ஒன்று உரசுவது போல உணர்ந்தான் அகவழகன் அவன் பின்னால்
துப்பாக்கியோடு அவன் தலைக்கு குறி வைத்தவாறு நின்று கொண்டிருந்தாள் மதிவதனி. அவள்
தன் தலைக்கு குறி வைத்திருப்பதை உணர்ந்து கொண்ட அகவழகன் தன் கையில் இருந்த
துப்பாக்கியை கீழிறக்கினான் அவனை அடித்து கீழே தள்ளிய மதிவதனி அவனை கோப பார்வை
ஒன்றை பார்த்துவிட்டு
” நீ இவ்வாறு செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை அகவா நம் இனத்திற்கே
துரோகம் இழைக்க பார்க்கிறாயா உனக்கு நிச்சயம் தண்டனை உண்டு ” என்று கூறினாள்
” நான் தவறிழைக்கவில்லை மதிவதனி நீங்கள் தான் தவறிழைத்து கொண்டிருக்கிறீர்கள் நம்
முன்னோர்களின் வாக்கை நீங்கள் மறந்து விட்டீர்கள் மனித இனத்தை காப்பது தான் நமது
கடமை நீங்கள் அவர்களை அழிக்க நினைக்கிறீர்கள் ” என்று தோய்ந்த குரலில் பேசிக்
கொண்டிருந்தான் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே தனது wristband மூலமாக
தனது கிரகத்திற்கு தகவல் அனுப்பியிருந்தான். மதிவதனியோ அகவழகனை நெருங்கி
” நம் கிரகத்தில் நம்பிக்கை துரோகத்திற்கு தண்டனை என்ன தெரியும் அல்லவா நீ சாகப்
போகிறாய் அகவழகா சொல் உனக்கு கடைசி ஆசை எதுவும் இருக்கிறதோ” என்று கேட்டாள்.
தொல்காப்பியனோ எழுந்து தன் துப்பாக்கியை எடுத்து அகவழகனை கொல்ல தயாராக
இருந்தான். அவனைப் பார்த்த மதிவதனி
“Alpha தாங்கள் சென்று நமது பணியை கவனியுங்கள் நான் இந்த நம்பிக்கை துரோகியை
பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினாள்
அப்போது அவள் தலைக்கு பின்னால் ஏதோ உரசுவது போல் இருக்க பின்னால் திரும்பாமல்
யாரது என்று கேட்டாள்
” திரு மதிவதனி நீங்க யாரை கொல்லனும்னு நினைக்கிறீர்களோ அவங்க செஞ்ச ஆயுதம் தான்
உங்க தலைக்கு நேரா இருக்கு நீங்க லேசா அசைஞ்சா கூட பொட்டுன்னு போட்டு தள்ளிட்டு
போய்கிட்டே இருப்பேன்” என்று மாஸாக டயலாக் பேசி இருந்தான் இப்ராஹிம்
உடனே தொல்காப்பியனோ மதிவதனிக்கு பின்னால் நின்றிருந்த இப்ராஹிமை நோக்கி
துப்பாக்கியை நகர்த்த அவனுக்கு பின்னால் வந்து நின்ற ஜோசப்
“என்ன தொல்காப்பியன் அவனை போட்டு தள்ளிட்டு உங்க பிரண்ட காப்பாத்தலாம்னு
ஐடியாவா வர்ற நாங்க தனியாவா வருவோம் ரெண்டு பேரும் துப்பாக்கிய கீழே போடுங்க” என்று
கத்தினான் அவர்கள் இருவரும் துப்பாக்கியை கீழே வைக்க ஓடி சென்று சங்கர் அந்த
துப்பாக்கியை எடுத்துக் கொண்டான் . அகவழகனைத் தூக்கி நிறுத்தியவன்
” எங்களையெல்லாம் சின்ன பசங்கனு நினைச்சுக்கிட்டீங்களா நாங்க நினைச்சா என்ன
வேணாலும் பண்ண முடியும் ரெண்டு பேரும் முட்டி போடுங்க ” என்ற கெத்தாக சொன்னான்
அவர்கள் இருவரும் கீழே முட்டி போட
சங்கரனின் காதருகே குனிந்த அகவழகனோ
” உங்ககிட்ட ஏதுடா துப்பாக்கி நீங்க சின்ன பசங்க தானே” என்று கேட்டான்
” எங்க கிட்ட ஏது துப்பாக்கி அவங்க ரெண்டு பேரும் வச்சுக்கிட்டு இருக்கிறது துப்பாக்கியே
இல்லை ஜோசப் கையில வச்சிருக்குறது எஸ்தர் பாப்பா தண்ணி குடிக்கிற zipper பாட்டில்
இப்ராஹிம் கையில வச்சிருக்கிறது உடைஞ்ச பழைய இரும்பு கம்பி இதையும் துப்பாக்கின்னு
நம்பிட்டு பயந்து போய் நிக்குதுங்க” என்று அவர்களுக்கு கேட்காதவாறு கூறிவிட்டு லேசாக
சிரித்தான் சங்கர் .
” நீ செய்தது சரியில்லை அகவழகா பூமியை அழிக்க வந்த ஒட்டுண்ணிகள் இவர்கள்.
இவர்களுக்கு நீ உதவி செய்யலாமா மனிதர்களை அழித்தால் மட்டுமே இந்த பூமியை வாழ வைக்க
முடியும் ” என்று தனது கொள்கையை உறுதியாக எடுத்துரைத்தான் தொல்காப்பியன்.
” பூமியை காப்பாற்ற வேறு வழி எவ்வளவோ உள்ளது மனிதர்களை காக்க வேண்டியது நமது
கடமை மற்றும் நமது Alpha வின் உத்தரவும் கூட” என்று பதில் அளித்தான் அகவழகன்.
” முட்டாள்தனம் செய்யாதே அகவழகா இப்போது நம் கிரகத்தை சேர்ந்த 297 வீரர்களும் இங்கே
வந்து விடுவர் பிறகு இந்த மனிதர்களோடு சேர்ந்து நீயும் சாக வேண்டியது தான்” என்று
எச்சரிக்கை செய்தாள் மதிவதனி. அப்போது வானத்திலிருந்து ஒரு பெரிய விண்கலம் பூமியில்
வந்து தரையிறங்கியது இதை பார்த்து தொல்காப்பியனும் மதிவதனையும் சிரிக்க சந்தேகத்தோடு
அந்த விண்கலத்தை பார்த்தான் அகவழகன் .
விண்கலத்தில் இருந்து ஒரு மனிதன் இறங்கி வரவும் தொல்காப்பியன் மற்றும் மதிவதனி
இருவரின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது விண்கலத்தில் இருந்து இறங்கினார் அகத்தியர்
.கீழே முட்டி போட்டிருந்த தொல்காப்பியனையும் மதிவதனியையும் பார்த்தவர் .
” உங்களது திட்டம் பலிக்காது தொல்காப்பியா உங்களது வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு விட்டனர்
உன்னையும் இதோ கைது செய்யப் போகிறோம்” என்று கூறினார்
அருகில் நின்றிருந்த அகவழகனையும் மூன்று நண்பர்களையும் பார்த்தவர்
“உங்களால் தான் மொத்த மனித இனமே காக்கப்பட்டு இருக்கிறது உங்களுக்கு நான்
கடமைப்பட்டிருக்கிறேன் அகவழகா நீ எனது சிறந்த மாணவன் என்பதை நிரூபித்து விட்டாய்
மிக்க மகிழ்ச்சி” என்று கூறினார்
நம் கதாநாயகர்கள் நால்வரும் மகிழ்ச்சியில் இருக்க தொல்காப்பியனையும் மதிவதனியையும்
அகத்தியருடன் வந்த வீரர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர்
அகத்தியரை புன்னகையுடன் பார்த்த அகவழகன்
” இன்னும் சற்று நேரத்தில் நான் நமது ஊரில் வந்து சேர்ந்து கொள்கிறேன் Alpha” என்று
கூறிவிட்டு நண்பர்கள் பக்கம் திரும்பினான்
நால்வரும் மனித இனத்தை மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய திருப்தியுடன் மீண்டும்
அகவழகனின் ஊர்தி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
நண்பர்கள் மூவரையும் பார்த்த அகவழகன்
” உங்க கூட சேர்ந்து வேலை செஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் உங்களை மாதிரி எனக்கு
நண்பர்கள் கிடைக்கலையே அப்படின்னு எனக்கே பொறாமையா இருக்கு நான் இப்போ
உங்களை விட்டு போக போறேன் இந்த பூமியை உங்களோட பாதுகாப்புல நாங்க விட்டுட்டு
போறோம் இயற்கை வளங்களை அழிக்காமல் இந்த பூமியை காப்பாற்ற வேண்டியது உங்க
பொறுப்பு உங்கள நான் நம்புறேன் என் நம்பிக்கையை காப்பாத்துங்க ” என்று உருக்கமாக
பேசினான்
அவன் பிரியப் போவதை நினைத்து ஒரு நிமிடம் கலங்கிய நண்பர்களோ ஓடிச்சொன்று அவனை
அணைத்துக் கொண்டனர் .
அவர்கள் தலையை வாஞ்சையாக தடவி கொடுத்த அகவழகனோ
” நான் போற நேரம் வந்துருச்சு உங்களை எப்பவுமே மறக்க மாட்டேன்” என்று கூறினான் .
நாங்க உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவோம் அகவா என்று ஒரு சேர கூறினர். மூவரும் அவன்
அணைப்பில் கண்மூட
சூரியன் கண்களில் பட்டு கண்களை கசக்கி கொண்டு எழுந்தான் இப்ராஹிம் அவன் சுற்றி முற்றி
பார்க்க அவன் தனது வீட்டில் இருந்தான் அவன் வேகமாக சென்று தனது அம்மாவை
அழைத்தான்.
” உம்மா நேத்து நான் எப்போ வீட்டுக்கு வந்தேன் ” என்று கேட்டான் காலையிலேயே அவசரமாக
ஓடி வந்த மகனை பார்த்த ஆஷா
” நீ எப்படா வீட்டுக்கு வந்த நேத்து சங்கர் வீட்ல விளையாடிகிட்டே தூங்கிட்ட உன்னோட
வாப்பா தான் உன்ன தூக்கிட்டு வந்தாரு ” என்று பதிலுரைத்தார்
” அப்போ நேத்து நடந்ததெல்லாம் கனவோ ” என்று ஒரு நொடி யோசித்துப் பிறகு தனது
நண்பர்களை தேடி ஓட தொடங்கினான் நண்பர்கள் மூவரும் ஒரே நேரத்தில் ஓடி வந்து ஒருவரை
ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க
” டேய் நேத்து எனக்கு ஒரு கனவு வந்துச்சுடா” என்று கோரசாக சொன்னார்கள் உடனே மூவரும்
அந்த மைதானத்திற்கு சென்று அகவழகனின் விண்கலம் விழுந்த இடத்தை பார்க்க அங்கு அப்படி
ஒன்று நடந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை குழம்பி போயினர் மூவரும்.
“ஒருவேளை நாம பார்த்தது கனவா தான் இருக்குமோ” என்று கேட்டான் சங்கர்
“அது எப்படிடா மூணு பேருக்கும் ஒரே மாதிரி கனவு வரும் அதுவும் ஒரே நேரத்துல” லாஜிக்காக
கேட்டான் இப்ராஹிம்
“அது கனவோ இல்ல நிஜமோ அது தெரியலடா ஆனா இந்த பூமி அழிஞ்சுக்கிட்டு இருக்கு அதை
காப்பாற்ற வேண்டியது நம்மளோட கடமை நாம ஸ்கூலுக்கு போனதும் இதை பத்தி ஆசிரியர்கள்
கிட்ட பேசி எல்லாருக்கும் ஒரு விழிப்புணர்வை கொண்டு வரணும் டா ” என்று தீர்க்கமாக
சொன்னான் ஜோசப்
நண்பர்கள் மூவரும் சோர்வாக வீட்டிற்கு வர சங்கரின் மடிக்கணினியில் குட் பாய் டா குட்டி
பசங்களா என்ற குறுஞ்செய்தி ஒளிந்து கொண்டிருந்தது………..
முற்றும்.