ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை:  ஏலியனும்  எனது நண்பன்தான்!

by admin 1
98 views

இரவு 11 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. தொலைக்காட்சியில் செய்தி பார்த்து கொண்டிருந்தேன். அப்போது எனது கைபேசி அழைத்தது. என்னப்பா…. இந்த நேரத்துல கூப்புடுற…. இன்னும் நீ தூங்கல….!
நல்ல வேளை!

சந்துரு…. நீ தூங்கிறிப்பி யோன்னு நினைச்சேன்….என்றான் எனது நண்பன் ராகவ்….!
ராகவ்….சொல்லு…. தூக்கம் வரல…. அதான் டி.வியில செய்தி பார்த்துட்டு இருக்கேன் என்றேன்….
நாளைக்கு காலையில எட்டு மணிக்கு ஒரு முக்கியமான நபரை நீ பேட்டி எடுக்கனும்….
ராகவ்….சொல்லு… யார் அந்த விஐபி என்றேன்… அது சஸ்பென்ஸ்…நீயே நேர்ல பார்த்து தெரிஞ்சுக்கோ என்றான் ராகவ்…. சரி…. நான் எட்டு மணிக்கெல் லாம் ரெடியா இருக்கேன் என்றேன்.

இரவு முழுதும் தூக்கமே எனக்கு வரலை…யார் அந்த விஐபி! எதற் காக ராகவ் சஸ்பென்ஸ் என்றான்…
எனக்கு குழப்பம் ஒருபுறம் இருந் தாலும், மறுபுறம் விஐபி ஒருவரை பேட்டி எடுக்கப் போகிறேன் என்ற
ஆர்வத்தில் உறங்கி விட்டேன். எனது பத்திரிகை நிருபரின் பணியை உணர்ந்து காலை 6 மணிக்கே எழுந்து, காலைக்கடன்களை முடித்து பேட்டிக்காக தயாராக புறப்பட்டேன்.
எனது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்றிருந் ததால் வீட்டின் கதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு எனது இருசக்கர வாகனத்தில் நண்பனின் வீட்டை நோக்கி பறந்தேன்.

வாசலில் என்னை எதிர்பார்த்து காத்து நின்ற ராகவ்,‌ என்னைக்கண்டதும் மகிழ்ச்சியாக வரவேற்
றான்.நான் ஆர்வ மிகுதியில் யார் அந்த விஐபி என்றேன். வீட்டுக்குள்ள வந்து பாரு….
உனக்கே தெரியும்…நீ எடுக்கற இந்த பேட்டியினாலே பத்திரிகை உலகத்துல பெரிய ஆளாக போற…
என்றான் என் நண்பன். புரியாத புதிராக நண்பனின் வீட்டுக்குள் நுழைந்தேன்.ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்திரு ந்த அந்த உருவம் எழுந்து நின்று வணங்கியது..

எனக்குள் ஒரு மின்னல் உருவாகி அதிர்ச்சியில் நின்றுவிட்டேன். அருகில் இருந்த ராகவ், என் தோளில் தட்டியவாறே… சந்துரு…. பயப்படாத.. இவர் என் நண்பன் தான்…மூணு மாசமா பழக்கம்…
அப்பப்ப…வருவாரு…என்னை வந்து பார்த்திட்டு போவாரு…நம்மை சந்திப்பை யாருகிட்டேயும் சொல்ல
வேணாம்னு சொல்லியிருந்தாரு.. அதான் உங்கிட்ட கூட இந்த தகவலை நான் சொல்லல.. நேரம்
வரட்டும்… சொல்லலாம்னு இருந்தேன்…! சரி உட்காரு..பேட்டிய ஆரம்பி….. ஒருவித பயத்துடன், ஏலியனைப் பார்த்து, பூமிக்கு நீங்க எப்படி வரீங்க..?. என்றேன்.

பறக்கும் தட்டு மூலமாத் தான் வரேன்…என்றது ஏலியன்…பூமிக்கு எதுக்கு நீங்க வரீங்க?
ஓ….அதுவா….! இன்னும் கொஞ்ச வருசத்துல, நாங்க பூமிக்கு வந்து குடியிருக்கப் போறோம்..
இங்கு வாழ்றதுக்கு எங்களுக்கு புடிச்சிருக்கு…..! அதனால இங்க வந்து வசிக்கலா ம்னு முடிவு பண்ணியிருக்கோம்… நாங்க வந்து பூமியை பாதுகாக்கப் போறோம்…பூமியை பாதுகாக்கப் போறீங்க ளா? என்றேன் நான்…ஆமாம்…‌நீங்க வாழ்ற பூமியைத் தான் கூறுபோட்டு வித்துகிட்டு இருக்கீங்களே…..! வனங்கள்,மலைகள், நீர் நிலைகள் , ஆற்று மணல் என இயற்கையை அழிச்சிபாழாக்கிட்டிங்களே….அது பொறுக் காமத்தான் நாங்க பூமிக்கு வந்து இயற்கையை பாதுகாக்கப் போறோம்….

அப்ப நாங்கல்லாம் எங்கபோய் வசிக்கிறது?உங்களுக்குதான் பூமியை புடிக்கலியே? அதனலாத்தான் அதை பாழாக்கிட்டு இருக்கீங்க?நீங்க பண்ற அட்டூழியம் பிடிக்காமத் தான் நாங்க பூமியைக் காப்பாத்த
பூமிக்கு வரப்போறோம்.ஏலியன் கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தாலும், பூமியைக் காப்பாற்ற ப் போகிறோம் என்ற நல்லெண்ணம் எனக்கு பிடித்துவிட்டது. ஓ.கே. நன்றி! நான் புறப்படறேன் என்று கூறிக்கொண்டே, எழுந்து வந்த ஏலியன், ராகவ் வீட்டின் பின்புறம் நின்றிருந்த பறக்கும் தட்டில் வேக மாக ஏறி அமர்ந்து எங்கள் இருவருக்கும் கையசைத்து டாடா சொல்லியபடி யே பறந்து சென்றது!

ஏலியனோடு ஒரு பேட்டி! என்ற தலைப்பில், நான் பணிபுரியும் ” மக்கள் சேவை”
செய்தித்தாளில் மறுநாள் தலைப்பு ச் செய்தியாக எனது பேட்டி வெளி யாகியிருந்தது.
வேற்றுக்கிரக வாசி ஏலியன் எனக்கும் நண்பனாகி விட்டதையெண்ணி மகிழ்ச்சியில்
நான் மிதந்து கொண்டிருந்தேன்..

முற்றும்.

ஏலியனுடன் ஒரு நாள் கதைப் போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டுமா?!

https://aroobi.com/13504-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!