படைப்பாளர்: உஷாமுத்துராமன்
‘மேகம் கருக்குது மின்னல் அடிக்குது’ என்ற மகனுக்கு பிடித்த பாடலை தன செல்போனுக்கு ரிங் டோனக வைத்திருந்தாள் சுதா.
அந்த செல் போன் அடித்ததில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுதா கண் விழித்தாள்.
‘ஹாப்பி பர்த்டே அம்மா’ என்று அமெரிக்காவில் இருந்த மகன் ராமு வாழ்த்த, அம்மா உங்களுக்கு பர்த்டே கிப்டாக ஒன்று சற்று நேரத்தில் வரும் அது என்னவென்று சொல்ல மாட்டேன் சர்ப்ரைஸ்” என்று சொல்லி போனை வைத்து விட்டான்.
மகனிடம் மிகவும் சந்தோஷமாக பேசினாள். பத்து நிமிடம் போனதே தெரியவில்லை.
60 வயதான சுதாவின் கண்ணில் நீர் பெருகியது. வயதான பிறகு தனிமையில் இருப்பது ஒரு கொடுமை என்று யோசித்தவள் மகன் அனுப்பிய பர்த்டே பரிசு என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே குளித்துவிட்டு கோவிலுக்கு சென்றாள்.
வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மணியோசை அழைத்தது என்று பார்கக்க அங்கு ஏலியனுடன் மகனின் நண்பன் புன்னகைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தான்.
” ஆன்ட்டி உங்கள் பர்த்டேக்காக உங்கள் மகன் அனுப்பிய பரிசு” என்று சொல்லிகொடுக்க அதை பார்த்து ஆச்சரியத்துடன் “இது என்ன என்று தெரியாமல் விழிக்க அது ஏலியன்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான் சிறிது நேரத்தில் அவள் அதனுடன் பேச அதுவும் அவளுடன் மகிழ்ச்சியாக பேசி சுதாவுடன் மிகவும் தோழியாக பழகி அவளுடைய தனிமையை போக்கியது.
ஒரு நாளிலேயே அதனுடன் பழகியதில் மகனில்லா குறையை போக்கிய அந்த ஏலியன்தான் தன்னுடைய மகனாக எண்ணி அவள் சந்தோஷமாக தனிமையை மறந்து வாழத் தொடங்கினாள்.
முற்றும்.