படைப்பாளர்: வெ. சந்திரா மணி
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலை நேரம். அங்கம் பாக்கம் ஊரில் பாலாற்றின் கரையில் சிவ சண்முகம் தன் நண்பர்கள் உடன் கிரிக்கெட் விளையாட வந்திருந்தான்.
நண்பர்கள் விளையாட ஆரம்பித்தனர்.
அந்த ஓவரின் கடைசி பாலை கோகுல் ஓடி வந்து வீசினான்.
பேட் பிடித்த சிவ சண்முகம் வந்த பாலை ஓங்கி அடித்தான்.
பால் மேல் நோக்கி பறந்தது.
நண்பர்கள் ஆக்ரோஷமாக கைத்தட்டினார்கள்.
அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது.
அந்த பாலை வானிலிருந்து ஒரு பேரொளி பிம்பம் பிடித்த படி தரை இறங்கியது.
நண்பர்கள் அலறினார்கள்.
அந்த பேரொளி யைத் தொடர்ந்து
வானில் இருந்து இறங்கியது விண்கலம். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது ஆச்சரியமடைந்தனர்.
தரையிறங்கிய யுஎஃப்ஒவில் இருந்து ஒருவர் நட்பான தொனியில் பேசினார்:
“வாழ்த்துகள், பூமி மனிதர்களே. எனது பெயர் எக்ஸ் சென்.நான் இங்கிருந்து பல, பல ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள சோளார் கிரகத்தைச் சேர்ந்தவன். அது ஏலியன்உலகம். ஆயிரம் ஆண்டுகளாக உங்கள் பூமியை கவனித்து வருகிறேன். உங்கள் பிரபஞ்சத்தின் நன்மைக்காக, உங்கள் கிரகம் அழிக்கப்பட இருக்கிறது.அதை தடுக்க நான் வந்து இருக்கிறேன்.“
இதைக் கேட்டு சிவசண்முகம் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
பிறகு பேசினான் சிவ சண்முகம்.
“நீங்கள் சொல்வது உண்மையா? நீங்கள் ஏலியன்ஸ். இந்த உலகில் நீங்கள் எங்களைப் போல இங்கு வாழமுடியாது. பிறகு ஏன் இந்த பூமியை அழிக்க வேண்டும். அப்படி அழிக்க போவது யார்? “
சிவ சண்முகம் பேசியதை ரசித்த எக்ஸ் சென்”இந்த பூமியில் இருக்கும் மரங்களை பாதி மனிதர்கள் அழித்து வருகிறார்கள். மீதியை எங்களின் விரோதிகள் ஏலியன்ஸ் அழிக்க இருக்கிறார்கள். பூமியில் மரங்கள் எல்லாம் அழிந்து விட்டால் நீங்கள் சுவாசிக்க பிராணவாயு இருக்காது. நீங்கள் எல்லாரும் இறந்து விடுவீர்கள். பிறகு பூமி சுடுகாடாய் மாறிவிடும். பின்னர் ஏலியன்ஸ் நாங்கள் எல்லாம் இங்கு வந்து விடுவோம். “என்றது ஏலியன்.
ஏலியன் சொன்னதெல்லாம் உண்மையோ என யோசித்த சிவ சண்முகம்” சரி. நாங்கள் உனக்கு எப்படி உதவ முடியும்? நீங்கள் எப்படி எங்களுக்கு உதவ முடியும்? “என்றான்.
மெல்ல சிரித்த எக்ஸ் சென்” எங்கள் விரோதியை இன்று க்குள் அழித்து விடுவேன். அதற்கான தொழில்நுட்பம் என்னிடம் இருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் உங்கள் கண்முன் எங்கள் போர் நடக்கும். அதில் நான் வெல்வேன். என் போர் வெற்றி மட்டுமே எதிர்காலத்தில் உங்கள் பூமி அழிவதை தடுக்காது. நீங்களும் ஓர் போர் செய்ய வேண்டும் “என்றது எக்ஸ் சென்.
உடனே ஆர்வமாக ” நாங்கள் என்ன செய்ய வேண்டும்? “என்றான்.
” நீங்கள் இந்த பூமியில் மரங்களை அழிப்பவர்களுக்கு எதிராக போர் செய்ய வேண்டும். மேலும் நீங்கள் தினமும் இந்த பூமியில் மரங்களை நட்டு வளர்த்து கொண்டிருக்க வேண்டும். செய்வீர்களா? “என்று கூறிய எக்ஸ் சென் னிடம் சிவ சண்முகம் நண்பர்கள் நிச்சயமாக செய்வோம்” என்றனர்.
“சபாஷ். உங்கள் பூமியை காப்பாற்ற முடியும். இதோ என் விரோதிகள் வந்து விட்டனர். நான் போர் செய்ய போகிறேன். வருகிறேன் பூமி நண்பர்களே” எக்ஸ் சென் வான் நோக்கி விண்கலத்தில் பறந்தார்.
சில நிமிடங்களில் வானில் மின்னலுடன் இடி இடித்தது. ஆம் போர் ஆரம்பமானது.
முற்றும்.