ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: நண்பேன்டா

by admin 1
26 views

அன்று தீபக்கிற்கு தமிழ் தேர்வு.  அந்த வகுப்பில் பலர் தமிழ் தேவையில்லை என்று வேறு மொழியில் எடுத்துக் கொண்டாலும் தீபக்கிற்கு தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்ததற்கு காரணமே அவனுடைய தாத்தா ஒரு தமிழ் வாத்தியார்.  அவர் சமீபத்தில் இறந்து விட்டாலும் நான் தமிழ் தான் படிப்பேன் என்று பள்ளியில் தமிழ் பாடத்தை தேர்வு செய்து கொண்டான்.  மிகவும் கடினமாக உழைத்து  தமிழ் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு தேர்வு எழுதி முடித்து விட்டு வீட்டிற்கு வந்தான்.  


அப்போது வாசலில் அவனை  பார்ப்பதற்காக ஒரு ஏலியன் நின்று கொண்டிருந்தான். ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்த தீபக் “நீ யார்?”  என்று கேட்டான்.   “நான் மேல் உலகத்திலிருந்து உன் தாத்தாவால் அனுப்பப்பட்டவன் உனக்கு தமிழ் மீது இருக்கும் ஆர்வத்தினால் தாத்தா உனக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க சொல்லி என்னை ஒருநாள் இங்கு அனுப்பி இருக்கிறார்” என்று சொன்னவுடன் அவன் மிகவும் ஆசையுடன் அந்த ஏலியுடன் பேச தொடங்கினான்.  ஆங்கிலமே கலக்காமல் தமிழ் பேச வேண்டும் என்று தீர்மானித்து அவன் பல முறை தவறு செய்து தமிழ் பேசினாலும் ஏலியன் என்ற நண்பன் அவனை திருத்தி தமிழில் பேச வைத்தான்.  தமிழ் தமிழ் அதுதான் என் உயிர் மூச்சு என்று எண்ணிய தீபத்திற்கு அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


அந்த ஒரு நாள் முழுவதும் ஏலியனுடன் தமிழில் பேசியதில் தீபத்திற்கு மனதுக்குள் ஒரு தெளிவு வந்தது.இரவு ஏலியன் விடை பெற்றுக் கொண்டு சென்ற போது கண்களில் நீர் துளிர்த்தது. இருந்தாலும் தாத்தாவிடம் நன்றி சொல்லி ஏலியனுக்கு விடை கொடுத்து பிரியாவிடையுடன்  நண்பேன்டா என்று கட்டியணைத்து முத்தமிட்டான்.

முற்றும்.

ஏலியனுடன் ஒரு நாள் கதைப் போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டுமா?!

https://aroobi.com/13504-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!