எழுதியவர்: நா.பத்மாவதி
கேள்வி 1: என்னை ஏன் படைத்தாய்?
ஒரு பரிதவிக்கும் சாமான்ய மனிதன் ஆதித்யா. மனதில் ஏராளமான கேள்விகளுடன், அவன் ஒரு புனித மலையை அடைந்தான். குகையில் அமைதியாக ஒருவர் கண்கள் மூடி அமைதியாக அமர்ந்திருந்தவர் முகம் கருணை நிறைந்திருந்தது.
கண்கள் திறக்கும் வரை காத்திருந்து “ஐயா… நீங்கள் யார்?” என்றான் மிகவும் தவிப்புடன் ஆதித்யா.
“நீ யார் என்று அறிய வந்தாயா? இல்லையெனில் நீ யாராக வந்தாய் என்பதை கேட்க வருகிறாயா?” என்றார் அந்த முனிவர் போல இருந்தவர்.
“என் மனதில் சில கேள்விகள் இறைவனிடம் கேட்க வேண்டுமன எழுகின்றன. அவற்றை தெளிவுபடுத்த தங்களால் முடியுமா? பதில்களைப் பெற்றால்தான் நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வெளிச்சம் கிடைக்கும்.” என்றான் ஆதித்யா.
“கேள்… ஆனால் ஏன் இநத கேள்விகளை என்னிடம் கேட்கிறாய் என்ற காரணம் கூறு.” என்றார் அந்த முனிவர்.
“என்னை ஏன் படைத்தாய்? இந்த வாழ்வின் நோக்கம் என்ன?” என்ற கேள்வி எழக் காரணம்
வறுமையான சூழல், எதிலும் குழப்பம் நிறைந்த வாழ்வு” என்றான் ஆதித்யா.
“உன்னை யாரும் உருவாக்கவில்லை. நீ உன்னுள் விழுந்த விருப்பம், அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல், மற்றும் பழைய வாழ்வில் கனிந்தவை. இறைவன் உனக்குள் ஒளிந்திருக்கிற தேங்கிய உணர்வுகளின் வெளிப்பாடு. உன் படைப்பு உன்னால் ஏற்பட்ட பாவ புண்ணியத்தின் வெளிப்பாடு ” என்றார் அவர்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.