எழுதியவர்: நா.பத்மாவதி
கேள்வி 3: எனது எல்லா கற்றல்களும் பாதியில் நின்ற காரணம்”?
ஒரு பரிதவிக்கும் சாமான்ய மனிதன் ஆதித்யா. மனதில் ஏராளமான கேள்விகளுடன், அவன் ஒரு புனித மலையை அடைந்தான். குகையில் அமைதியாக ஒருவர் கண்கள் மூடி அமைதியாக அமர்ந்திருந்தவர் முகம் கருணை நிறைந்திருந்தது.
கண்கள் திறக்கும் வரை காத்திருந்து “ஐயா… நீங்கள் யார்?” என்றான் மிகவும் தவிப்புடன் ஆதித்யா.
“நீ யார் என்று அறிய வந்தாயா? இல்லையெனில் நீ யாராக வந்தாய் என்பதை கேட்க வருகிறாயா?” என்றார் அந்த முனிவர் போல இருந்தவர்.
“என் மனதில் சில கேள்விகள் இறைவனிடம் கேட்க வேண்டுமன எழுகின்றன. அவற்றை தெளிவுபடுத்த தங்களால் முடியுமா? பதில்களைப் பெற்றால்தான் நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வெளிச்சம் கிடைக்கும்.” என்றான் ஆதித்யா.
“கேள்… ஆனால் ஏன் இநத கேள்விகளை என்னிடம் கேட்கிறாய் என்ற காரணம் கூறு.” என்றார் அந்த முனிவர்.
மூன்றாவதாக, “எனது எல்லா கற்றல்களும் பாதியில் நின்ற காரணம்”?
“இதை தெரிந்து கொள்ள காரணம், எதைப் படிப்பை பற்றி எந்த தெளிவும் இல்லாததால் எந்த வேலையிலும் நிரந்தரமாக இல்லை என்று கேட்கிறேன்”
என்றான் ஆதித்யா.
“நீ தொடங்கிய அனைத்தும் முடிவதற்காக தொடங்கப்பட்டது இல்லை. சில பயணங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்பதே அதன் பயன். நீ ஒரு பாடத்தை முடிக்காமல் விட்டிருந்தால், அதன் முழு பயனை நீ இன்னும் அடைய உனக்கு விதிக்கவில்லை என அர்த்தம். எதுவும் முடியவில்லை என்று கவலைப்படாதே. அது மற்றொரு வாழ்க்கை நிலையிலோ, மற்றொரு சூழ்நிலையிலோ முடியும்.” என்றார் முனிவர்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.