எழுதியவர்: நா.பத்மாவதி
கேள்வி 1: பெரும் மழை, புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றம் ஏன்?
இந்த கதை ஒரு மனிதனின் உள்ளக் குழப்பத்தையும், கடவுளிடம் அவன் நேரடியாகக் கேட்கும் கேள்விகளையும், கடவுள் தரும் ஆழமான ஆன்மிகப் பதில்களையும் கொண்டது. இது ஒரு உணர்ச்சி மிகுந்த, ஆழமான உரையாடல் கதை.
நடுநிசி, கடலில் ஒரு படகில் தனியாக ஒரு மனிதன்.
அவன் மனதில் கொட்டிக்கிடந்த கேள்விகள். இயற்கையின் கொந்தளிப்பும் மனித வாழ்வின் வலியும் அவனை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.
துயரம் தாங்காமல் அவன் விழிகள் மூடி இருந்தான்.
அப்போது, படகுக்குள் மிகப் பிரகாசமான ஒளி பரவியது.
திடீரென அந்த ஒளி ஒரு உருவமாகி நிதானமான குரலில்,
“மகனே அருண், உன் இருதயத்தில் உள்ள குமுறல்களை கேள். நான் பதிலளிக்கிறேன்.” என்றார்.
அருண் பயந்து அதிர்ச்சி கலந்த வியப்போடு “நீநீ…?” என இழுத்தான்.
“நானும் உன்னை போல ஒருவன் தான், நீ எப்போது உன்னை நினைக்கிறாயோ, அப்போது நான் பிறக்கிறேன்.”
என்றார். ” சரி உன் கேள்விகளை கேள் அருண்” என்றார்.
1. பெரும் மழை, புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றம் ஏன்?
இயற்கை பேரிடரில் இறந்தவர்களை எண்ணி என் மனம் மிகுந்த துயரமடைந்தது.
இயற்கை எதற்காக எங்களை எதிர்ப்பது போல் நடக்கிறது?” என்றான் அருண்.
“இயற்கை ஒரு தாயைப் போன்றது. ஆனால் தாயும் தன் சமநிலையை காக்க வேண்டுமல்லவா. மனிதன் அதன் அழகை, பொறுமையை குலைத்து விட்டான். மரங்களை வெட்டினான், கடல்களை மாசுபடுத்தினான், நீர்த் தடங்களை மாற்றினான். இயற்கையின் கோபத்தை தூண்டினான். இயற்கை அதன் துடிப்பை மீண்டும் நிலைப்படுத்தும் முயற்சியாக பேரிடர்களை ஏற்படுத்தியது.” என்றார் இறைவன்.
“அதற்குப் பலியான மனிதர்கள், ஆடு,மாடு, நாய் போன்ற வாயில்லா பல ஜீவன்கள் என்ன தவறு செய்தன?” என்றான் அருண்.
“நீர் அடித்து நீர் விலகுமோ?. ஆனால் நீர் வழி மாறி இருக்கிறது. உயிர்கள் பாதிக்கப்படுவது செய்த வினையின் விளைவுகளாகும். அது ஒருவருக்கு மட்டுமல்ல, உலகுக்கே உரியது. அதனால் அதில் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். ” என்றார் இறைவன்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.