கடவுளிடம் ஐந்து கேள்விகள் கதைப்போட்டி: வாழ்க்கை அவ்வளவு சுமையாகிறது

by admin 2
8 views

எழுதியவர்: நா.பத்மாவதி

கேள்வி 3:  தற்கொலைகள் அதிகரிப்பது ஏன்?

இந்த கதை ஒரு மனிதனின் உள்ளக் குழப்பத்தையும், கடவுளிடம் அவன் நேரடியாகக் கேட்கும் கேள்விகளையும், கடவுள் தரும் ஆழமான ஆன்மிகப் பதில்களையும் கொண்டது. இது ஒரு உணர்ச்சி மிகுந்த, ஆழமான உரையாடல் கதை.

நடுநிசி, கடலில் ஒரு படகில் தனியாக ஒரு மனிதன்.

அவன் மனதில் கொட்டிக்கிடந்த கேள்விகள். இயற்கையின் கொந்தளிப்பும் மனித வாழ்வின் வலியும் அவனை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.

துயரம் தாங்காமல் அவன் விழிகள் மூடி இருந்தான்.

அப்போது, படகுக்குள் மிகப் பிரகாசமான ஒளி பரவியது.

திடீரென அந்த ஒளி ஒரு உருவமாகி நிதானமான குரலில்,

“மகனே அருண், உன் இருதயத்தில் உள்ள குமுறல்களை கேள். நான் பதிலளிக்கிறேன்.” என்றார்.

அருண் பயந்து அதிர்ச்சி கலந்த வியப்போடு “நீநீ…?” என இழுத்தான்.

“நானும் உன்னை போல ஒருவன் தான், நீ எப்போது உன்னை நினைக்கிறாயோ, அப்போது நான் பிறக்கிறேன்.”

என்றார். ” சரி உன் கேள்விகளை கேள் அருண்” என்றார்.

3. “தற்கொலைகள் அதிகரிப்பது ஏன்? மனிதர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஏன் இந்த வாழ்க்கை அவ்வளவு சுமையாகிறது?” என்றான் அருண்.

“அவர்கள் தனிமை மீது காதல் கொள்ளாமை. அவர்கள் மனதில் காதல், அன்பு இருந்த போதும், அருகில் இருப்பவர்களிடம் இல்லை. அவர்கள் காதலிக்கப்படவில்லை. அவர்கள் சக உயிராக மதிக்கப்படவில்லை. முக்கியமாக அவர்கள் மன தைரியம் கொண்டு தற்கொலைக்கு துணிவதை விடுத்து தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள். தற்கொலை ஒரு முடிவல்ல. ஆழ் மனதின் குரல் கேட்கப்படாத சத்தமற்ற மெளனம் .” என்றார் கடவுள்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!