உயிரானவளே…
உனக்காக
காத்திருக்கும்போது மட்டும்…
ஏனிந்த உற்சாகம்
ஒவ்வொரு நிமிடமும்…
கை கடிகாரத்தை வினாடிக்கு
விநாடி பார்த்து கொண்டே…
வியர்வை
இல்லாத போதும்…
கை குட்டையால் முகம்
துடைத்து கொண்டே…
கலையாத தலையை
சீவி கொண்டே…
எட்டு திசை எங்கும்
விழிகள் பறந்தபடியே…
நிமிடத்திற்கு நிமிடம்…
என் வசந்தம்
உன்னை தேடி கொண்டே…
பூமியில் உலா வரும்
வான் நிலவே…
நீ தாமதித்து
வருவாயா…
கரையில் விழுந்த
மீனாய் துடிக்கிறேன் நான்…
நான் கால் வலிக்க
காத்திருக்கிறேன்…
காதலியே வருவாயா
என்னை காண…..
முதல்பூ பெ.மணி