திகில் போட்டிக் கதை:  இது தீர்வல்ல! 

by admin 1
103 views

மூச்சு வாங்கியது. எனக்கு இருந்தும் நில்லாது ஓடினேன் நான்.  அம்மாவும் அப்பாவும் அயர்ந்து தூங்குகிறார்கள் என்று நினைத்தாலும் எங்கேயாவது விழித்துக் கொண்டு என்னை பின் தொடர்ந்து வந்து விடுவார்களோ என்ற பயத்துடனே திரும்பி திரும்பி பார்த்தேன்.

நான் எடுத்திருக்கும் இந்த முடிவு பயங்கரமானது என்று என் மனதுக்குள்  பயம் இருந்தாலும் என்னால் என் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.

அந்த கும்மிருட்டு. எனக்கு மிகவும் பயத்தை கொடுத்தாலும் நான் மெல்ல மெல்ல மெதுவாக அந்த இருட்டில் அடி எடுத்து நடக்க தொடங்கினேன்.

கண்களில் கண்ணீர் பெருகியது. இருந்தாலும் என் மனதை கல்லாக்கிக் கொண்டு சுற்றும் மற்றும் பார்த்தேன். நிசப்தமாக இருந்தது.  எங்கேயோ ஓலமிடும் ஒரு நாயின் அழுகுரல் கேட்டு மனதுக்குள் பக் என்று இருந்தது.

சில அடிகள் முன்னால் எடுத்து வைத்து அந்த தண்டவாளத்தை நெருங்கிய போது இருட்டில் யாரோ அவள் பின்னால் வருவது போல் உணர்ந்தாள்  நந்தினி.

பிளஸ் டூ தேர்வில் ஒரு பாடத்தில்  தோல்வி அடைய அம்மா அப்பா என்ன சொல்வார்களோ என்று பயந்து நாம் நம்மை அழித்துக் கொள்ளலாம் என்று தண்டவாளத்தை நோக்கி வந்தாள்.

விடியற் காலையாக  இருந்தால் யாரும் நம்மை பார்க்க மாட்டார்கள் என்று அம்மா அப்பாவுக்கு தெரியாமல் ரயில் நிலையத்துக்கு அருகே இருக்கும் அவள் வீட்டில் இருந்து மெதுவாக இருட்டில் கிளம்பினாள் நந்தினி.

தண்டவாளத்தில் கண்ணை மூடிக்கொண்டு படுத்துக்கொண்டு விட்டால் வேகமாக வரும் ரயிலில் இருட்டில் நாம் இருப்பது தெரியாமல் அவர்கள் நம் மீது ரயிலை ஏற்றி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு வந்தவளுக்கு பின்னால் அவள் ஆசையுடன் வளர்த்த டாமியும் வந்து விட்டது.

உடனே திரும்பிப் பார்த்தவளுக்கு தான் ஆசையுடன் வளர்த்த நாய் வருவதை பார்த்தவுடன் நாம் இறந்து போனால் அந்த நேரத்தில் அதுவும் நம் பக்கத்தில் வந்து உட்கார்ந்து இறந்து விடுமோ என்று நினைத்து அதை அருகே உட்கார்ந்து தலையை தடவி “என்னை காப்பாற்ற தான் நீ வந்தாயா?” என்று ஆசையுடன் கேட்டவுடன் அது அவளைப் பார்த்து லேசாக வாலை ஆட்டியது.

பிறகு தான் மனதுக்குள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று இருந்த எண்ணம் ஓடிப்போனது. “நல்லவேளை டாமி நீ வந்தாய் இல்லையென்றால் நான் என்னையே மாய்த்துக் கொண்டிருப்பேன் தேர்வில் தோல்வியடைந்தால் என்ன அடுத்த முறை கண்டிப்பாக எழுதி வெற்றி பெற்று விடுவேன்” என்று டாமியிடம் சொல்லிக் கொண்டே அதை தூக்கிக் கொண்டு தன் வீட்டை நோக்கி நம்பிக்கையுடன் நடந்தாள் நந்தினி.

நாம் எடுத்த முடிவு எவ்வளவு தவறானது எந்த பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வு அல்ல நாம் பிரச்சனைகளை எதிர்கொண்டு நிமிர்ந்து நடக்க வேண்டும் என்று டாமியை பார்த்ததும்  அவளுக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது .

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!