படைப்பாளர்: ஆர் சத்திய நாராயணன்
மூச்சு வாங்கியது எனக்கு. இருந்தாலும் நில்லாமல் ஒடினைன் நான்.
ஆம்… என் மகளை விட்டு விட்டு நான் மட்டுமே ஒட ஆரம்பித்தேன்.
வெகு வேகமாக ஓடினேன். வழியில் யாரும் இல்லை. வெகு தூரம் வந்து விட்டேன்.
என் மகளை பற்றி நினைக்க கூட மறந்தேன். என் பிரச்சினை பெரிது.
ஓடும் போது ஒரு பெரிய பங்களா இருந்தது. வீட்டு வாச் மேன் தனது துப்பாக்கியை எடுத்தார். ஆபத்து வருவதை உணர்ந்து தயார் ஆனேன்.
அவன் துப்பாக்கயை இயக்கும் முன்பே… அவனை தூக்கி எறிந்து வீசினேன். அவன் கீழே விழுந்தான். அவன் இறந்து கூட போய் இருக்கலாம்.
நான் மீண்டும் ஓடத் துவங்கினேன். குளித்து ஒரு வாரம் ஆகி விட்டது. என் மகளை பார்க்க ஆசை. ஆனால் என் பிரச்சினை என்னை ஓட வைத்தது.
நான் எங்கு தேடியும் எனக்கு கிடைக்க வில்லை. ஆனாலும் மனம் தளராமல் மூச்சு வாங்கி ஓடினேன்.
நான் களைப்பு அடைந்து விட்டேன். எனக்கு தாகம்.
ஆம். தாகம். என்னால் தாகத்தை அடக்க முடிய வில்லை. தண்ணீர்..! தண்ணீர்…!!
தேடி ஓடிக் கொண்டே இருக்கிறேன். என்னை காணாமல் என் மகள்
வாடி போய் இருப்பாள். இன்னும் எவ்வளவு தூரம் செல்வது…?
கால் கூட வலித்தது. சோர்வு வந்தது. சிறிது நேரம் ஒய்வு எடுத்தேன். எப்படியும் இன்று என் தாகம் தீர வேண்டும். இல்லை என்றால் நான் இறக்க கூடும். நான் சாவதற்கு அஞ்ச வில்லை. ஆனால் அனாதையாக என் மகளை விட்டு விட்டு செல்ல மனம் இல்லை. பாவம் அவள். அவளும் தாகத்தால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறாள்.
சிறிது ஒய்வு எடுத்து விட்டு மீண்டும் ஒட ஆரம்பித்தேன்.
என் வாழ்க்கையில் நான் கடைசி கட்டத்தை அடைந்தது போல் இருந்தது. எனக்கு சாவை சந்திக்க பயம் துளியும் இல்லை. ஆனால் என் உயிருக்கு உயிரான என் மகளை விட்டு செல்வதில் எனக்கு உடன் பாடு இல்லை.
என் ஓட்டம் நிற்க வில்லை. மூச்சு மிக வேகமாக இருந்தது.
மேற்கொண்டு ஒட தெம்பு இல்லை. அதற்குள் என் பின்னே ஒரு வண்டி சைரன் அடித்து கொண்டு வந்தது. எனக்கு அபாயம் என உணர்ந்தேன்.
உயிரை காப்பாற்ற மூச்சு வாங்கி கொண்டே ஓடினேன். நான் அந்த சப்தத்தை இது வரை கேட்டது இல்லை.
நான் மிரண்டு போய் விட்டேன். ஒட ஒட துரத்தியது. அந்த வண்டியின் சப்தம், சைரன்பலமாக ஒலித்தது.
ரொம்ப தூரம் ஓடி வந்து விட்டேன். நான் சற்று நின்றேன்.
என் வயத்தில் ஒரு ஊசி குத்தியது. இன்னும் இரண்டு நிமிடங்களில் என் தலையில் ஒரு ஊசி குத்தியது.
எல்லாம் சில நொடிகள் தான். நான் இறந்து விட்டேன் என தோன்றியது.
நான் கீழே விழுந்தேன். எனக்கு எந்த ஞாபகமும் வர வில்லை. நான் செத்து விட்டேன் என்றே நினைத்தேன்.
கடைசியாக நான் நினைத்தது இரண்டு விஷயம் மட்டுமே. ஒன்று என் தீராத தாகம்.
பிறகு என் மகளை பற்றி நினைத்தேன். அவள் என்ன பாடுபடுகீறாலோ என நினைத்து வருந்தினேன்.
ஆம்.
அவ்வளவு தான் எனக்கு ஞாபகம் இருந்தது. நான் கீழே விழுந்து விட்டவுடன் நான் செத்து விட்டேன் என்று உணர்ந்தேன்.
நான் கண்ணை திறந்தேன். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. எங்கு இருக்கிறேன் என்றும் தெரிய வில்லை.
எனக்கு முன்பாக ஒரு சதுர பீப்பாய் இருந்தது. அதில் நிறையவே தண்ணீர் இருந்தது. (380) நான் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தேன். ஆசை தீர குடித்தேன். நான் சமாளித்து ஸ்டெடி ஆகி விட்டேன். எனக்கு முன்பாக ஒரு புதிய உலகம். என் பக்கத்தில் என்னைப் போலவே ஒருவன்.
அவன் எனக்கு கை கொடுத்தான். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு ஞாபகம் வந்தது. நான் தீராத தாகத்தால் மிகவும் சோர்வு அடைந்து ஒட ஆரம்பித்தது தெரிய… ஞாபகத்திற்கு வந்தது.
என் செல்ல மகளை விட்டு விட்டு வந்ததும் ஞாபகம் வந்தது.
எனக்கு முன்பாக… மற்றும் பின்பாக ஒரு பெரிய வாழை தோட்டம். ஆம். என் பசிக்கு நல்ல உணவு கிடைத்தது. சாப்பிடும் முன் என் ஆசை தீர பீப்பாய் தண்ணீரில் நன்கு குளித்தேன்.
அம்மா…
அப்பா…
இப்படி குளித்து எத்தனை நாட்கள் ஆகி விட்டது…?
இப்போது நான் பரவாயில்லை.
சற்று நிம்மதி.
சற்று ஆனந்தம்.
அம்மாடியோவ்.. !
என்ன பாடு பட்டு விட்டேன்..?
ஆமாம்…
இவ்வளவு நேரம் உங்களுடன்
பேசி விட்டேன். உங்களுக்கு என்னை தெரிகிறதா…?
என் பெயர் தெரியுமா…?? நானே சொல்கிறேன்.
என் பெயர்…
என் பெயர்…
அரிசிக்கொம்பன்.. …!
பி. கு. : நான் யார் என்று தெரிந்து விட்டதா…?
ஆமாம் நான் யார் என்று இது வரை சொல்ல வில்லை.
இப்போது சொல்லுகிறேன்.
ஆம்.
நான் ஒரு யானை…!
இப்போது நலமாக உள்ளேன்…!!
முற்றும்.