படைப்பாளர்: ஹரிஹர சுப்ரமணியன்
அன்றாட வாழ்க்கையில் திகில் , பயம் எல்லாம் ஒரு வித உணர்வு தான் . திகில் என்பது காட்டுக்குள் போய் அனுபவிக்கும் ஒரு அமர்வு என பலர் எண்ணுகின்றனர் , தனியார் மற்றும் ஒரு சில அரசு நிறுவனங்களில் பணி புரிவோரது திகில் மற்றும் பய உணர்வுகளை தான் இந்த கதை உணர்த்துகிறது , எந்த தனி மனிதரையும் குறிப்பிட்டு இந்த கதை புனைய படவில்லை .
தாமரை மில் வழக்கம் போல சுறு சுறுப்பாக இயங்க ஆரம்பித்து விட்டது
ஏற்றுமதி டிபார்ட்மென்ட் வழக்கம் போல அவரவர் பணிகளை பார்க்க ஆரம்பித்து விட்டனர்
அன்று ஏற வேண்டிய கன்டைனர் வந்து லோட் ஏற்ற ஆட்கள் வந்து விட்டனர் , லோட் ஏற்ற வேண்டிய போர்க் லிப்ட் வாகனம் தயார் நிலையில் நின்று இருந்தது , ஓட்டுனரை தான் காணோம் ,
விற்பனை அதிகாரி ரமேஷுக்கு தகவல் சொல்ல பட்டது ..
ஏற்கனவே உற்பத்தி தாமதம் ,,,, இன்றைக்குள் கன்டைனர் ஆலையில் இருந்து ஏற்றி போர்ட் போய் சேர வில்லை என்றால் பெரிய பிரச்சனைகள் ஆகிவிடும்,, விற்பனை மேலாளர் இதை பற்றி யோசித்து மேற்படி போர்க் லிப்ட் ஓட்டுனரை மொபைலில் தொடர்பு கொண்ட போது
” சார் , நேற்றைக்கே நீங்கள் கன்டைனர் லோட் அவசரம் னு சொல்லிடீங்க , ஆனா இன்னிக்கு காலைலே நம்ம மேலாளர் வீடு காரம்மா எனக்கு போன் செய்து அவங்க வீட்டு நாய் குட்டிக்கு உடம்பு சரியில்லே , ஆஸ்பத்திரிக்கு கூடி செல்ல வேண்டும்னுட்டு சீக்கிரமே என்னை வர சொல்லிட்டாங்க , நானும் அவங்க கிட்டே இன்னைக்கு லோட் ஏத்த வேண்டிய அவசரத்தை சொல்லியும் அதுக்கு அவங்க அதெல்லாம், சார் பாத்து பாங்க ன்னு சொல்லிட்டு என்னை உடனே
வர சொல்லிட்டாங்க …….நீங்க நம்ம ஆபீஸ் மேனேஜர் டிரைவர் சும்மாதான் இருப்பார் , அவரை கூட்டி கோங்க னு சொல்லி ,,,, சார் , அம்மா ,கூப்பிடுறாங்க , ” னு சொல்லி போனை சுட் செய்து விட்டார் ,
விற்பனை அதிகாரி செய்வதறியாது திகைத்து நேரடியாக அவரது அறைக்கு செல்ல முற்படும்போது அவரது உதவியாளர் ஓடி வந்து
” சார் , நீங்க இது பத்தி உள்ளே போய் ரொம்ப பேசாதீங்க , அவர் நம்ம முதலாளிக்கு ரொம்ப வேணும்ங்றவங்க ,,,, நம்ம என்ன தான் சொன்னாலும் அது அவரது காதுக்கு தப்பா தான் படும் ,,,, பாத்து பேசுங்க ” னு சொல்லி விட்டு போய் விட்டார் ,
ஓரு கணம், யோசித்த விற்பனை அதிகாரி என்ன நடந்தாலும் சரி என்று முடிவெடுத்து ஆலை மேலாளர் அறையை நோக்கி சென்றார் .
கதவை மெல்ல திறந்து கன்டைனர் அவசரமாக ஏற்ற வேண்டிய சூழ்நிலையை எடுத்து கூறினார் .
மேலாளர் பொறுமையாய் அவரிடம் கேட்டு அதற்கு அவர் என்ன செய்ய வேண்டுமென பதிலுக்கு கேட்டார் , அதற்கு அவர் ஓட்டுநர் இல்லாத நிலையினை கூறினார் .
‘ ரமேஷ் ,, வாங்க , அவசரம் நாத்தான் நீங்க என் சீட்டுக்கு வருவீங்க , என்ன வேணும் சொல்லுங்க … “
பதிலுக்கு “” சார் , இன்னைக்கு லோட் ஏத்தி நாளைக்கு காலையில் பத்து மணிக்குள் தூத்துக்குடி போர்டுக்கு போய் சேரனும் , இல்லாட்டி பெரிய பிரச்சனை யாகிவிடும் , டிரைவர் இன்னைக்கு உங்க வீடு டூட்டி யா வெளியே போய்விட்டார் , ஏதாவது உதவி செய்ய்ங்க ” னு சொன்னதும்
” ஆமா , ரமேஷ் , காலையில் என் வீட்டுக்காரி என்னிடம் சொன்னாள்.
நான் உடனே நம்ம ஆபீஸ் மேனேஜர் டிரைவர்இடம் கூறிவிட்டேன் . அவர் உங்களிடம் பேச வில்லையா ” ன்னு சொன்னதும் ரமேஷ் க்கு
குப் என வேர்த்தது .
” சரி சார் , நான் பாத்துக்கிறேன் ” ன்னு சொல்லி விட்டு அவரது அறையை நோக்கி நடந்தார் ,….
சீட்டுக்கு போய் அந்த டிரைவரின் மொபைல் எண்ணை அழுத்தினார் .
உடனே ரிங் போனது , அவரிடம் திரும்ப எல்லா விஷயங்களையும் கிளி பிள்ளைக்கு சொல்வது போல சொன்னதும் அவர் எதோ பந்தள மகாராஜா போல பதிலுக்கு ” சார் , நான் இப்போ நம்ம சாரோட பொண்ணை காலேஜ்க்கு கொண்டு விட போய்ட்டு இருக்கேன் , வர மூன்று நாளாகும் ” னு சொன்னதும் ரமேஷுக்கு மீண்டும் வேர்க்க
ஆரம்பித்து விட்டது .
” சரி , இனி இவர்களை நம்பினால் நாம் இன்னைக்கு லோட் ஏத்தி விட முடியாது ,, நான் போய் நாம சகோதர பக்கத்துக்கு மில்லில் போய் யாரையாவது கூடி வருகிறேன் ” என்று கூறிவிட்டு தனது பைக்கை எடுத்து மெல்ல கிளம்பினார் ரமேஷ் .
சகோதர பக்கத்துக்கு மில் தான் அந்த குழுமத்திற்கு தாய் ஸ்தாபனம் .
எல்லா முடிவுகளும் அங்குதான் எடுப்பார்கள் , அங்கு ரமேஷ் சென்று
குழு வின் தலைவர் அறைக்கு முன் சென்று அங்கிருந்த நபரிடம் தான் வந்துள்ள செய்தியினை உள்ளே சொல்லுமாறு கூறி காத்திருந்தார் .
உள்ளே வர அனுமதி கிடைத்ததும் சென்று மெல்லிய குரலில் அன்றைய சூழ்நிலை அவரிடம் எடுத்துரைத்தார்.
உள்ளே நல்ல நறுமணம் , கொஞ்ச நேரமாக அங்கங்கு அலைந்து திரிந்து பேசிய களைப்பு எல்லாம் ஒரு கணம் பறந்து போய்விட்டது .
சகோதர மில்லின் தலைவர் சீட்டில் அமர்ந்த நிலையில் மிகவும் பரபர பகை இருந்தார் ,
:” என்ன மிஸ்டர் ரமேஷ் , ரொம்ப பிஸியோ ? இந்த பக்கமே உங்களை காணோம் ” என்று குசலம் விசாரித்துவிட்டு
” ஏதாவது முக்கிய வேலை யா ? அடுத்த வர போர்டு மீட்டிங் கு chairman உடன் இப்ப மீட்டிங் , வீடியோ காலில் ,,,,, நாம் எது இருந்தாலும் அப்புறம் பேசலாம், ” னு சொல்லி அவர் மிகுந்த பரபரப்பில் மூழ்கிவிட்டார் .
மெல்ல கதவை திறந்து வெளியே வரும்போது அவரது மொபைல் சிணுங்கியது . ரமேஷின் உதவியாளர் மெல்லிய குரலில் ” சார் , நம்ம லோடுமேன் ஒருவருக்கு போர்க் லிப்ட் இயக்க தெரியும் , அவர் ஏத்தி விட தயாராக உள்ளார் , என்ன செய்யட்டும் . ” னு கேட்க ரமேஷுக்கு மனதில் சற்று நம்பிக்கை வந்தது .
எதற்கும் ஒரு வேளை மனித வள துறை அதிகாரியிடம் ஒரு வார்த்தை சொல்லி விடலாம் என எண்ணி அவரது அறையினுள் சென்று நடந்ததை கூறியதில் அவரும் ” நீங்க பாட்டுக்கு ஏத்தி விடுங்க சார் , பிரச்சனை ஏதும் ஆகாமல் பாத்துகோங்க ” என்று கூறியதும்
வெளிய வந்தார் .
திரும்ப அவரது சீட்டுக்கு வந்து ” அப்பாடா , என பெரு மூச்சு விட்டு
சற்று கண் அசந்த நிலையில் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் இன்று வரையிலும் நடந்த நிகழ்வுகளை ஓ ட விட்டு ஒரு கணம் உறங்கியே போனார் .
சீக்கிரம் ஓய்வு பெரும் நாள் வந்திடாதா என்று நாட்காட்டியை பார்க்க துவங்கி மனதிற்குள் ஒவொரு நிகழ்வுக்கும்
தீர்வு தான் என்ன ? ஏன் ஒருவரும் அடுத்தவர் பிரச்சனை களை பார்ப்பதே இல்லை .
எல்லோருக்கும் நாம் தான் குறு நில மன்னர் என்ற நினைப்பு , என அவருக்குள்ளே புலம்பி அடுத்த வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் ரமேஷ் .
காலையில் இருந்து ஏற்பட்ட திகில் , பயம் ஓரளவுக்கு லோட் கன்டைனரில் ஏற்றி முடிந்ததும் குறைந்ததை ரமேஷ் உணர்ந்து அடுத்த வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் .
முற்றும்.