படைப்பாளர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல்
மூச்சு வாங்கியது எனக்கு.இருந்தும் நில்லாது ஓடினேன் நான்.என் இருதயமே வெடித்துவிடும் போலிருந்தது.
மங்கலான வெளிச்சத்தில் நடைப்பயிற்சி செய்தபோது என் தோளின் மீது ஒரு கை விழுந்தது. சடாரென திரும்பிப் பார்க்கையில் என் மனைவியின் கை.
***********************************************
*1995ம் ஆண்டு ஒரு சுபமுகூர்த்த நாளில் நந்தினி,நந்தினிராஜன் ஆனாள். அருமையான ஜோடிப் பொருத்தம். ராஜனுக்கு வாழ்க்கை எல்லாவிதத்திலும் இனிமையாக சென்று கொண்டிருந்தது.
ராஜன் ஒரு நிதிநிறுவனத்தின் சி.இ.ஓ. தன்னை யாரும் அசைக்க முடியாத பெரும் ஷேர்களை வைத்துள்ளான். ராஜன் மிகவும் கண்டிப்பானவன். இந்நிலையில் பெர்சனல் செக்ரட்டரியாக அல்ட்ரா மார்டன் கேர்லாக வந்து சேர்ந்தாள் மதுமிதா. அவள் மேனேஜ்மெண்ட் ஸ்கில்ஸ் வெகு அபாரம். அவள் சேர்ந்த ஒரு வருடத்தில், அவள் சொல்லிய யுக்திகளை பயன்படுத்தியதால் கம்பெனியின் வளர்ச்சி எங்கோ சென்றது.
போர்ட் மீட்டிங்ல் அவள் பலமுறை தன் கருத்துக்களை திறம்பட எடுத்துரைத்தாள் .அங்கெல்லாம் “எஸ் பாஸ்” என்று அடக்கமாக அழைப்பாள். ஆனால் ராஜனின் தனியறையில் “பாஸ்” என்று குரலைக் செக்ஸியாக மாற்றிக்கொள்வாள். விரைவிலேயே மன்மதபாணத்தினால், ராஜன் தன்னைக் முழுவதுமாக மதுமிதாவின் பிடியில் அடைக்கலம் ஆனான்.
ராஜன் தன் பி.ஏவிடம் “புக் எ டிக்கெட் டூ பாம்பே ஆன் 23, எர்லி மார்னிங் பிளைட் அண்ட் புக் ஹோட்டல் ரூம் ஆஸ் யுசுவல்.” “. மதுமிதா தன் பி.ஏவிடம்” ஒரு கிளையண்ட் மீட்டிங்,22 ம் தேதி அகமதாபாத் மார்னிங் பிளைட் புக் பண்ணுங்க ” என்று கட்டளையிடுவாள்.
அகமதபாத்திலிருந்து பம்பாய்க்கு பிளைட்டில் 23 ம் தேதி வருவாள். பிளான் பண்ணியபடி இருவரும் பம்பாயில் வேறு ஹோட்டலில் ரூம் போட்டு தங்குவார்கள்.இதனால் யாருக்கும் எதுவும் தெரியாது. இப்படியே மாதத்தில் இரண்டு நாட்கள் வெவ்வேறான ஊர்களில் தங்கினர்.
ஒருமுறை புதுடில்லியில்,படுக்கையில் இருக்கும் போது மதுமிதா,ராஜனிடம் சொன்னாள் “டார்லிங் ,இப்படி எத்தனை நாள்தான் திருட்டுத்தனமாக இருப்பது?
“மது,வேறன்ன செய்யமுடியும்”
“பேசாம கில் யுவர் வைப்,அப்பறம் நம்ம கல்யாணம்.
“வாட்,என்ன சொல்ற நீ, இது எப்படி நடக்கும்?
“நடக்கும்,நான் சொல்றபடி செய்யுங்க”
முதலில் பிடிவாதமாக மறுத்தான் ராஜன்
“சரி எப்படி அவளை கொலை பண்ணுவது” என்று கேட்டான் ராஜன்.
“
“அப்படி கேளு ராஜ், அதற்கெல்லாம் நான் சரியான பிளான் வைத்திருக்கிறேன். உன் நந்தினி நான்டயாபடிக் தானே அதாவது சுகர் பேசண்ட் இல்லை என்பது தானே”. “
“இல்லை அவளுக்கு சுகர் எல்லாம் இல்லை” என்று கூறினான் ராஜன் “அப்படின்னா வெரி குட் நீ அவளுக்கு டயபடிக் மெடிசின் பாலில் கலந்து கொடுத்து விடு. சுகர் லெவல் மிகவும் குறைந்து, அதனால் ஹார்ட் பீட் மிகவும் பயங்கரமாக ஆகும். அப்போது நீ மூன்று எம்.எல் இன்சுலினை, பத்து எம்.எல் இன்ஜெக்ஷன் டியூபில் எடுத்தக்கொள். இன்ஜெக்ஷன் டுயூபில் இப்பொழுது ஏழு எம்.எல் ஏர் இருக்கும், இப்பொழுது அவள் நரம்பில் இன்ஜக்ட் பண்ணிவிடு. இதனால் அவளுக்கு சிறிது நேரத்தில் மாசிவ் ஹார்ட் அட்டாக் வரும்”.
“ஐயோ எனக்கு இன்ஜெக்ஷன் எல்லாம் போடத் தெரியாது என்று சொன்னான்” “கவலைப்பட வேண்டாம், நான் அதற்கும் ஒரு ஏற்பாடு செய்துள்ளேன், நீ ஒரு நான்கு நாள், நரம்பில் இன்ஜெக்ஷன் போடுவதற்கு பழக ஏற்பாடு செய்துள்ளேன்”.
“இல்லை என்றால் வெளியே ஆளை வைத்து செய்தால் எப்படியும் கண்டிப்பாக தெரிந்து விடும் நாம் மாட்டிக் கொள்வோம்”. ” “என்னுடைய டாக்டர் பிரண்டு வந்து உன் மனைவியை டெஸ்ட் பண்ணிவிட்டு, அவள் இறந்து விட்டாள் என்று கன்பர்ம் செய்வாள். “
“டெத் சர்டிபிகேட் வாங்குவதற்கும் ஏற்பாடு செய்கிறேன் .இதனால் யாருக்கும் சந்தேகம் வராது. நீ ஒரு மாத காலம் துக்கம் அனுசரிக்கவும்.எல்லாம் சரியாகிவிடும்”.
பிளான் செய்த மாதிரி எல்லாம் சரியாக நடந்தது. எல்லோரும் ராஜனிடம் வந்து துக்கம் விசாரித்தார்கள். வந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான், “அவள் கொஞ்ச நாட்களாகவே ஏதோ அவ்வப்போது நெஞ்சு படபடக்கின்றது என்று சொல்லி வரும் போது ,நான் கண்டிப்பாக ஒரு லேடி டாக்டரை பார்த்து விடவும் என்று கூறிக் கொண்டே இருந்தேன். அவள்தான் இதை எளிதாக எடுத்துக்கொண்டு, இல்லை தானாகவே சரியாகிவிடும் என்று இருந்து விட்டாள் அலட்சியமாக இருந்து, இறந்து விட்டாள் மாசிவ் ஹார்ட் அட்டாக்.
நந்தினி இறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ராஜன் ஆழ்ந்த துக்கத்தில் இருப்பது போலவே நடித்து வந்தான் ஆபீசுக்கு வந்தாலும் யாருடனும் பேசுவதை நிறுத்திக் கொண்டான்.எல்லோரும் இவனுடைய நிலையைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார்கள்.
மதுமிதாவின் அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில்லையே ஆரம்பமானது.அவள் எப்பொழுதும் கம்பெனியின் டைரக்டர்கள் மனைவிகளின் தோழிகளாகவே தன்னைக் காட்டிக் கொண்டாள். எல்லோரிடமும் நன்றாக பழகுவாள். அதனால் அவர்கள் எல்லோரும் ராஜனிடம் வந்து “நீ ஏன் மறுமணம் செய்யக் கூடாது, நம் மதுமிதா மிகவும் அறிவார்ந்த பெண்,நம் கம்பெனியின் வளர்ச்சிக்கு எவ்வளவோ பாடுபட்டு இருக்கிறாள். உன்னை மிகவும் நன்கு அறிந்தவள் குடும்ப பாங்கானவள் என்று அப்படி ,இப்படி என்று சொல்லி அவனை சம்மதிக்க வைத்து விட்டார்கள்.
அவன் முதலில் கண்டிப்பாக முடியாது என்று நடித்தாலும், பிறகு சரி என்று ஒத்துக் கொண்ட பின், அவர்கள் திருமணமும் நடந்தேறியது.
மதிமிதா எம் .டி ஆனவுடன் அவளிடம் சுசித்ரா என்ற பெண் அவளின் பி.ஏ ஆகிவிட்டாள், ஹெச் ஆர் டிபார்ட்மெண்டின் பரிந்துரையின் பெயரில். மதுமிதாவுக்கு ஆரம்பத்தில் இருந்து சுசித்ராவைப் மிகவும் பிடித்து விட்டது. ஏனெனில் சுசியும் ,அவளைப் போலவே விஷயங்களை கிரக்கித்துக் கொள்ளவதிலும், திட்டங்களை வகுக்கும் உக்திகளையும் எளிதாக கற்றுக் கொண்டாள்.
ஆனால் மதுமிதா ஒரு விஷயத்தில் கராறாக இருந்தாள். சுசித்ராவை எப்பொழுதும் ராஜனை சந்திக்கவே விடவில்லை.
மதுமிதாவும்,சுசியும், தோழிகளாகவே மிகவும் நெருங்கி பழகி வந்தனர் அப்படி ஒரு நாள் ராஜன் டில்லி சென்றிருந்தபோது, “சுசி எனக்கு மிகவும் போர் அடிக்கிறது, ராஜன் வேறு டெல்லி சென்று விட்டார்.இன்று நம் கெஸ்ட் ஹவுஸ்க்கு , சுமார் ஏழு மணிக்கு வா.ஒரு கெட் டுக்கெதர் பார்ட்டி” என்று சுசித்ராவை அழைத்தாள்.
இப்படி ஒரு இரண்டு மூன்று தடவை பழகிய போது அன்று ஒரு நாள் மதுமிதா கேட்டாள்”ஆமா நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாய்”. அதற்கு சுசித்ரா “நான் விரும்பும் ஆணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது, நான் என்ன செய்ய முடியும்”.
இதைக் கேட்டு போதை தலைக்கு ஏறிய மதமிதா உரக்கச் சிரித்தாள். “அதனால் என்ன? இது ஒரு பிரச்சனையா?உன்னுடைய அவரின், அவளைக் கொன்றுவிடு”. “வாட் என்ன சொல்கிறாய் மது, நடக்கிற விஷயமாகவா சொல்கிறாய் நீ”.
“நடக்க முடியாது என்று ஏன் நீ நினைக்கிறாய் சுசி, என் வாழ்க்கையிலேயே, நான் அதை செய்து விட்டேன்” என்று பேசிக்கொண்டே நந்தினியைக் கொலை செய்ய வகுத்த திட்டங்களைப் பற்றி எல்லாம் சுசியிடம் உளறிக் கொட்டி விட்டாள். சுசி இதற்கு ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டாள்.
ராஜன் அவசர கிளையண்ட் மீட்டிங் என்று பம்பாய் சென்றான். அன்றிரவு மதுமிதா தனியாகத்தான் இருந்தாள். அவர்கள் வீட்டில் ராஜன் இல்லாமல் அவளுக்கு மிகவும் போர் அடித்தது அதனால் அங்கிருந்த அலமாரியில் இருந்த 62.5% ஆல்கஹால் நிறைந்த ஒரு மதுபானத்தை எடுத்து அருந்த ஆரம்பித்தாள். நள்ளிரவு சுமார் 12:30 மணிக்கு திடீரென்று பவர் கட் ஆனது. ஆட்டோமேட்டிக் ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை. அவள் தன் பக்கத்தில் இருந்த டார்ச்சை ஆன் செய்து பார்த்தாள். அதிலிருந்து பேட்டரி பழையதானதால் மிகவும் மெல்லிய வெளிச்சமே கிடைத்தது.
சுமார் ஒரு மணி இருக்கும் பொழுது ,ஒரு வெள்ளை உடை அணிந்து ஒரு வெள்ளை உருவம், அவள் முன் தோன்றியது. ஏற்கனவே போதை தலைக்கு ஏறி விட்ட மதுமிதாவுக்கு பகீர் என்றது.
“நீ தாண்டி என் சக்களத்தி, நான் தாண்டி உன் அக்கா, பேய்யக்கா”, என்று கிசுகிசு குரலில் பேசினது அந்த வெள்ளை உருவ நந்தினி.
மதுமிதா இறந்தபின், ராஜன் மிகவும் நொந்து விட்டான். எப்பொழுதும் ஏதாவது சிந்தனைகளில் மூழ்கி,குற்ற உணர்ச்சியில் சிக்கினான். ஒரு விதமான நோய்க்கு ஆளாகி விட்டான்.
அதனால் ஒரு நாள் இரவு திடீரென்று தன் பெட்ரூமில் இருக்கும் போது அந்த 62.5% ஆல்கஹால் இருந்த பாட்டிலை எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி குடித்துக் கொண்டிருந்தான்.
இரவு ஒரு மணி இருக்கும் திடீரென்று பவர் கட்டானது. அறை முழுவதும் இருட்டானது. முழு போதையில் இருந்த அவன் முன்னே தோன்றியது வெள்ளை உடை அணிந்த அந்த உருவம், “என்னங்க இப்படி கொன்னுட்டீங்களே என்னை” என்றாள் அந்த வெள்ளை உருவ நந்தினி.
மறுநாள் காலை வேலைக்காரர்கள் வந்து பார்த்தபோது ராஜன் இறந்து கிடந்தான்.
**********************************************
சிங்கப்பூர் ஏர்லைன் விமானத்தில் அமைதியாக அமர்திருந்தாள் பிரியங்கா. விமானம் மேலேறி, முன்னேறி பறக்கத் தொடங்கியவுடன் அவளின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
முதலில் சுசித்ராவை மதுமிதாவின் பி.ஏவாக்கியது, பின்பு அவள் தோழி போல மதுமிதாவிடம் நெருங்கி பழகச் சொன்னது, பிறகு மது, ஒரு நாள் மது போதையில் எல்லா உண்மைகளையும் உளரிக் கொட்டியது , பின்பு எல்லோரோட உதவியாலும் சிறிய மாற்றத்துடன், அவர்கள் பாணியிலேயே அவர்களை நான் முடித்துக்கட்டியது,எல்லாம் கனவு போலாகியது.
நான் விபத்தில் இறந்து விட்டதாக உனக்கு வந்திருந்த தகவல் சரியானதல்ல. நான் ஒரு வருடம் கோமாவில் இருந்தேன். திடீரென்று ஒரு நாள் கண்விழித்த போது, உனக்கு நான் பிழைத்த செய்தியை சொல்ல வேண்டும் என்று முயற்சித்த போது தான் தெரிந்து கொண்டேன், என் இரட்டை சகோதரி நந்தினியாகிய நீ , இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது என்று. நம் உருவ ஒற்றுமையைப் பற்றி ஊரே பேசும். நீ இறந்துவிட்டதைக் கேட்ட பின், என் மனதில் அப்பொழுது முதல் ,பெரிய நெருடல் ஏற்பட்டது. அது வளர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தது.
பிறகு,நான் ஏற்பாடு செய்த சூசியின் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். நீ கொலை செய்யப்பட்டாய் என்பதை அறிந்து கொண்டேன்.
திட்டம் தீட்டினேன் ,அவர்கள் பாணியிலேயே சிறிது மாற்றம் செய்து அவர்களை முடித்தேன். உன்னை கொலை செய்தவர்களை பழி வாங்கிவிட்டேன். என் அருமை தங்கையே உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை மன்றாடி வேண்டுகிறேன்.
விமானத்தின் ஒலிபெருக்கியிலுருந்து வந்த செய்தி, விமானம் சிங்கப்பூரில் இன்னும் சிறிது நேரத்தில் தரையிறங்கவதாக ஒலிபரப்பப்பட்டது.
முற்றும்.