படைப்பாளர்: சுவாதி மோகன்
மூச்சு வாங்கியது எனக்கு ஆனாலும் நிற்காமல் ஓடினேன் இந்த பக்கம் வந்திருக்கவே கூடாது தவறு செய்த பின் அதை நினைத்து வருந்தி என்ன பயன்?
வழி தவறி விட்டேன் என்பது மட்டும் புரிந்தது எனக்கு ஆனால் கண்ணுக்கு கெட்டிய தூரம் வரை ஊரின் தடமே தெரியவில்லை,இது எந்த இடம் என்று என்னால் யூகிக்க முடியவில்லை,என் தந்தை எப்போது நான் ஊருக்கு வந்தாலும் இருட்டுவதற்கு முன் ஊருக்குள் வந்து விட வேண்டும் என ஏன் சொன்னார் என இப்போது புரிய ஆரம்பித்தது அதற்கு ஏற்றார் போல் என் பின்னால் ஏதோ ஓடி வரும் சத்தம் கேட்டது ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.
ஆந்தை அலறும் சத்தமும் ஓநாய் ஊளையிடும் சத்தமும் எனக்கு மிக நெருக்கமாய் கேட்டது, எனக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்த மரங்கள் எல்லாம் அந்த இருளின் பிடியில் பூதாகரமாக காட்சியளிக்க,இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தேன்.
ஓடிக்கொண்டிருக்கும் அந்த இருள் அடைந்த அத்வான காட்டில் என்னுடனே யாரோ ஓடிவரும் சத்தம் கேட்கவே இன்றுடன் என் கதை முடிந்தது என நான் முடிவு செய்து கொண்டேன்,தோழமையுடன் பழகும் என் தந்தையும், பாசத்தை கொட்டி வளர்க்கும் என் தாயையும், என் பொருள் மீது மட்டும் ஆசைப்படும் எனது தங்கையையும் கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என மனம் விரும்பியது.
சென்னையில் உள்ள பெரிய கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் நான். என் பெயர் வெற்றிவேல் ,எனக்கு இப்பொழுது பொங்கல் விடுமுறை என்பதால் ஊருக்கு வர ஆசைப்பட்டு மதிய பேருந்தில் கிளம்பினேன், ஆனால் என் துரதிஷ்டம் மதிய வேளையிலேயே வந்து இறங்க வேண்டிய நாள் பேருந்து பழுதின் காரணமாக மாலை வேலை தாண்டி தான் வந்து என்னை இறக்கிவிட்டு புகையை கக்கி கொண்டு சென்றது,மாலை வேலை என்றாலும் வெயில் சுள்ளென அடிக்க நாம் பிறந்து வளர்ந்த ஊர் தானே யாராவது வழியில் வந்தால் அவர்களுடன் சென்று விடலாம் என தைரியத்துடன் எங்கள் ஊருக்கு செல்லும் மண் பாதையில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
இன்னும் ஊருக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவே இருக்க ஆள் நடமாட்டமே இல்லை திடீரென வானில் இருள் மேகம் சூழ்ந்து மழை வரும் அறிகுறிகள் தென்பட்டது,நாம் அதிசயத்து வானத்தைப் பார்க்க சட சடவென மழை தூரல் போட ஆரம்பித்தது எனவே எங்காவது ஒதுங்கலாம் என முடிவு செய்து சுற்றி மற்றும் பார்க்க அங்கு ஊருக்கு போகும் வழியில் ஒரு சிறிய கல் மண்டபம் ஒன்று இருந்தது அதில் ஓடி சென்று ஒதுங்கி நிற்க,ஊருக்குப் போகும் சாலையில் ஒரு வண்டி வேகமாக சென்றது சரி அந்த வண்டியில் சென்று விடலாம் என இங்கிருந்து கத்திக் கொண்டே வெளியே வர என் குரல் எனக்கே கேட்கவில்லை என்னடா இது அதிசயமாக இருக்கு என முடிவு செய்து மீண்டும் மீண்டும் கூப்பிட்டு பார்க்க அந்த வண்டி என்னை கவனிக்காமல் வேகமாக ஊரை நோக்கி சென்று விட்டது.
சிறிது சிறிதாக இருள் பரவ ஆரம்பிக்க அப்போதும் மழை விட்டுப் பாடு இல்லை,இதற்கு மேல் இங்கு இருந்தால் நல்லது இல்லை என முடிவு செய்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன் மழை என்னை சுகமாக தழுவிக் கொண்டது.
நான் நடக்க நடக்க தூரம் நீண்டு கொண்டே சென்றதே தவிர குறையவே இல்லை அட என்னடா இது? ஒரு கிலோ மீட்டர் நடக்க இவ்வளவு நேரம் ஆகிறது என மனதுக்குள் திகில் பரவ ஆரம்பித்தது,அப்போதுதான் என் புத்தியில் நாம் தான் போனை வைத்திருக்கிறோமே அதில் தந்தைக்கு கால் செய்து நான் இங்கு நின்று கொண்டு இருக்கிறேன் என தகவல் சொல்லிவிடலாம் என நினைத்து போன எடுத்துப் பார்க்க அது எப்போதோ சார்ஜ் இல்லாமல் உயிர் விட்டிருந்தது.
சென்னையிலிருந்து கிளம்பும் பொழுது போனை முழுமையாக சார்ஜை போட்டுவிட்டு தான் பேக்கில் எடுத்து வைத்தேன். அதுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது எனக்கு ஆனால் இப்போதோ சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிறது எனக்கு ஒன்றுமே புரியவில்லை,நடந்து நடந்து கால்கள் துவள ஆரம்பிக்க அங்கிருந்த ஒரு மணல் திட்டின் மேல் அமர்ந்தேன், இப்பொழுது மழை குறைந்து தூறலாக தூறிக் கொண்டிருந்தது.
நான் அமர்ந்திருந்த திட்டின் மேல் ஒரு கையை வைத்து என் பேக்கை என் மடியில் வைத்துக் கொண்டு இருக்க,அந்தத் திட்டின் மேல் வைத்திருந்த கையை யாரோ பிடிப்பது போன்று தோன்றியது எனக்கு ஏதோ செடியாக இருக்கும் என முதலில் தட்டி விட்டேன் மீண்டும் மீண்டும் கையை யாரோ தொடுவது போன்று தோன்ற,எச்சிலை விழுங்கி கொண்டு நான் திரும்பிப் பார்க்கவும் என் கையை பிடித்தபடி என் பின்னால் ஒரு புகை போன்று உருவம் அமர்ந்திருக்க அவ்வளவுதான் கத்திக் கொண்டே எழுந்து ஓட ஆரம்பித்தேன் நான் ஊருக்கு செல்லும் வழியில் ஓடினேனா? இல்லை வழி மாறிவிட்டேனா? என எனக்கே தெரியாமல் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தேன்.
இப்பொழுது அந்த காட்டினுள் நான் மாட்டிக் கொண்டு வெளியே வர முடியாமல் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டே இருக்கிறேன் என் பின்னால் யாரோ வரும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது,நான் பேருந்தில் இறங்கி கிட்டத்தட்ட ஒரு ஆறு மணிக்கு மேலாகி இருக்கும்,என் தந்தையிடம் நான் நண்பகல் உணவுக்கே வந்துவிடுவதாக சொல்லி இருந்தேன் ஆனால் நான் இன்னும் வீடு போய் சேராததால் என்னை கண்டிப்பாக தேட ஆரம்பித்திருப்பார்கள்.
மழையும் இப்பொழுது நின்று போயிருக்க ஒரு மரத்தின் கீழ் நின்று நான் மூச்சு வாங்கிக் கொண்டிருக்க மேலிருந்து ஏதோ என் மேல் விழுந்தது முதலில் மழை துளியாக தான் இருக்கும் என நினைத்து துடைத்து விட மீண்டும் மீண்டும் சொட்டு சொட்டாக என் மேல் விழுந்து கொண்டே இருந்தது அதை நான் தொட்டுப் பார்க்க அது ரத்த சிவப்பாக இருக்கவும் ஏதோ ஒரு ஆர்வத்தில் மேலே நிமர்ந்து பார்க்க அங்கு ஒரு உருவம் தலைகீழாக என்னை பார்த்தபடி வாயில் ரத்தம் சொட்ட சொட்ட தன் கோரை பற்களை காட்டி என்னை நோக்கி தலைகீழாகவே வந்து கொண்டிருந்தது.
அங்கிருந்து நான் ஓட நினைத்தாலும் என் கால்கள் ஒத்துழைக்கவில்லை என் தந்தையும்,ஊரில் உள்ளவர்களும் ஊருக்கு பக்கத்தில் உள்ள காட்டில் ஒரு மோகினி நடமாடுவதாகவும் அந்த மோகினி ஆண்களை வசியப்படுத்தி காட்டிருக்கும் கொண்டு சென்று கொன்று விடுவதாகவும் அப்படி மயங்கவில்லை என்றால் பயமுறுத்தி திசை மாறி இந்த காட்டிற்குள் அழைத்து வந்து விடுவதாகவும் சொல்லி இருக்க,அதையெல்லாம் என் பகுத்தறிவு இதுவரை நம்பியதில்லை ஆனால் இன்று என் கண் முன்னே அந்த கோர உருவத்தை பார்த்தபின் அவர்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் என நம்ப ஆரம்பிக்க,அந்த உருவம் ஆனது கொஞ்சம் கொஞ்சமாக என்னை நோக்கி கீழே இறங்கி வந்து கொண்டிருந்தது அவ்வளவுதான் இன்று தொலைந்தோம் நாம் என முடிவு செய்து கண்களை இருக்க மூடிக்கொண்டு கடவுளின் மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பிக்க,ஒரு மூச்சுக்காற்று என்மேல் பலமாக மோதியது அதிலே எனக்கு தெரிந்து விட்டது அது எனக்கு மிக நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறது என .
அது என் கழுத்தை வருட ஆரம்பிக்க எனக்கோ பயத்தில் வேர்வை சுரப்பிகள் அதிகமாக சுரக்க ஆரம்பித்தன அந்த குளிர்ந்த இரவிலும்.
அது தன் நீண்ட விரல்கள் உடைய கையை என் கழுத்தில் வைத்து மரத்தோடு சேர்த்து அழுத்த ஆரம்பிக்க நான் மூச்சு விடுவதற்கு திணற ஆரம்பித்தேன் என்ன இருந்தாலும் கண்ணை மட்டும் திறந்து விடக்கூடாது இப்படியே போய் சேர்ந்து விடலாம் என முடிவு செய்தவனாய் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டிருக்க திடீரென உடுக்கை சத்தமும்,பல பேரின் காலடி சத்தமும் கேட்க இதுவரை என்னை இறுக்க பிடித்திருந்த அந்த எலும்பும் தோலுமாய் நீண்ட விரல்கள் உடைய கை என்னை விடவும் நான் தொப்பேன கீழே விழுந்தேன்.
கண்கள் மங்கலாக இருக்க கண்களைத் திறக்க மிகவும் கடினப்பட்டு கண்களை திறக்கவும் என் முன் ஒரு புகை வடிவிலான உருவம் காதை பொத்திக் கொண்டு அலற ஆரம்பித்திருந்தது,அது அலற அலற நிழலாக திரிந்த அந்த உருவங்கள் எனக்கு தெளிவாக தெரிய ஆரம்பித்தது,அவர்கள் என் தந்தையும் என் ஊரை சேர்ந்த சில ஆட்களும் தான்.
எனக்கு அப்போதுதான் போன உயிர் மீண்டு வந்தது இருக்க ஒரு தைரியத்துடனே வேகமாக எழுந்து துவளும் கால்களுடனே அந்த உருவத்தை பயத்துடனே கடந்து என் தந்தையிடம் ஓடினேன் என் தந்தை என்னை வாரி அணைத்துக் கொண்டார்.
அந்தக் கூட்டத்தில் இருந்த பூசாரி அந்த நிழலான உருவத்தின் மீது கருப்பு சாமியின் விபூதியை அள்ளி தெளிக்க அது அலறி துடித்து என்னை பார்த்து கோரமாக முறைத்து பின் காற்றில் துகள் துகளாக கரைந்து போனது.
அதன் பின் நான் பயத்துடனே வீட்டிற்கு வந்து அம்மாவிடம் திட்டு வாங்கியதும்,அப்பா பயந்து போய் கருப்பசாமியின் கோயிலுக்கு சென்று எனக்கு விபூதி அடித்தது தானாகவே நடக்க, பண்டிகை முடிந்து நான் கல்லூரிக்கு சென்றேன் . அங்கு நான் ஊரில் நடந்தவை அனைத்தையும் சொல்ல அனைவரும் என்னை கேலி கிண்டல் செய்தார்களே தவிர யாரும் அதை நம்பவில்லை இப்பொழுதும் நான் ஊருக்கு சென்றால் அந்த காட்டை பார்ப்பதை தவிர்த்து விடுவேன். தப்பி தவறி பார்த்து விட்டால் கூட அங்கு ஒரு பெண் நின்று என்னை பார்ப்பது போல் தோன்றும்.
முற்றும்.