நவரச போட்டிக் கதை: அழுது அழுதே செத்தேன் …!

by admin 2
78 views

அழுகை .நவரசத்தில் ஒன்று. என்னவோ தெரியாது என் வாழ்க்கை
முழுவதும் அழது கொண்டே இருந்தேன்.ஆம் .அழுவேன். அழுவேன். அழுது கொண்டே இருப்பேன்.என்னை போல் யாரும் அழுது இருக்க
மாட்டார்கள்.ஆம். என் வழக்கை முழுதும் அழுகை தான் .அந்த மாதிரி வேறு யாரும் அழுது இருக்க மாட்டார்கள்.இது ஒரு மன நோய் . மனநோய்
வருவதற்கு முன்பே பல முறை அழுது உள்ளேன்.அது இயற்கையான
அழுகை.நான் எதற்கு எல்லாம் அழுதேன் என்று எழுதினால் அது ஒரு பெரிய நாவல் ஆகி விடும்.எனவே சுருக்கமாக நான் அழுத கதைகள் பற்றி
எழுதுகிறேன்.

  1. படிப்பு

நான் எஸ்.எஸ் .எல் .சி கடைசி பேட்ச்.பரிச்சைக்கு முன்னால் எந்த
பரிட்சையிலும் 95 சதவீதம் குறைந்து மார்க் வாங்கியது இல்லை. கணக்கில் எப்போதும் 1௦௦ தான். மற்ற பாடங்களில் 95 சதவீதம் மேல் தான் .சில ஆசரியர்கள் என்னை மாநிலத்தில் முதல் மாணவனாக வர வேண்டும் என்று உற்சாகம் ஊட்டினார்கள்.விதி விளையாடியது .
பரிட்சைக்கு முதல் நாள் தலை சுற்றியது. பேதி. மாத்திரை சாப்பிடும்
நிற்கவில்லை. நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.என் அக்கா என்னை
பரிட்சைக்கு காரில் அனுப்பி வைத்தார்.நான் எதுவும் படிக்க வில்லை
.பரீட்சை 13 நாட்கள் நடந்தன . எந்த பரிட்சைக்கும் படிக்க வில்லை.
ஒருவாறு பரீட்சை முடிந்ததும் அரசு மருத்துவ மனையில் அட்மிட்
செய்தார்கள் .டாக்டர்களுக்கே என் விஷயம் என்னவென்று தெரியவில்லை. நான் ஆஸ்பித்திரியில் இருக்கும் போது என் அப்பா என் மார்க் லிஸ்ட் வாங்கிவந்தார். ரொம்ப சந்தோஷமாக அவர் இருந்தார். நான் வாங்கியது 80 சதவீதம் தான் . முழுக்க முழுக்க ஏமாற்றம் .குலுங்கி குலுங்கி அழுதேன். என்னால் தாங்க முடிய வில்லை. ஆனால் எல்லோரும் என்னை பாராட்டி என்னை சமாதனம் செய்து வைத்தனர்.என் கனவு தவிடு பொடி ஆனது. எனக்கு நினைவு தெரிந்து வார கணக்கில் நான் இதற்காக தான் அழுதேன்.பின் ஊட்டி அரசு கலை கல்லூரியில் நன்கு வருடங்கள். கடைசி பிரிவு உபச்சார விழாவில் நண்பர்களை விட்டு
பிரிகிறோம் என்ற எண்ணத்தில் அழுதேன். அது இயற்கையான அழுகை.

  1. அம்மா இறப்பு

நான் ஒரு புரட்சிகர அமைப்பில் முழு நேர புரட்சியளனாக பணி புரிந்து
வந்தேன். பல பிரச்சனிகள். நான் அமைப்பில் பதவி உயர்வு பெற்று மதுரை
மற்றும் தேன் தமிழக பகுதிகளுக்கு அமைப்பாளர் ஆனேன்.அரசியல்
வகுப்புகள் கூட எடுத்தேன். பக்கத்து வீட்டில் சாந்தி என்று ஒரு பெண் .நான்
அவரிடம் என் காதலை சொல்ல முடியாமல் தத்தளித்தேன் .அப்போது ஒரு நாள் என் காதுகளில் பேசுவது போல் உணர்ந்தேன் .இது ஒரு பெரிய
மனநோய்.அவர் தெளிவாக பேசுவது போல் தான் கேட்டது. அவர் ஆண்டு
என் அம்மா என்னை காணமால் தற்கொலை செய்து கொண்டு விட்டார்
என்றும் போலீஸ் என்னை தேடுகிறது எனவும் சொன்னார். அவ்வளவு தான். நான் என் அம்மாவை நினைத்து கதறி கதறி அழுதேன் .
இது தான் மனசிதைவு நோய். பயங்கரமான நோய். அம்மா செத்து விட்டதாக உண்மையில் உணர்ந்தேன் . புரண்டு புரண்டு மூன்று மணி நேரம் அழுதேன். பின் மதுரை ரோட்டில் பைத்தியகாரனாக ஓடினேன்.இது தான் துவக்கம்.இதற்கு பிறகு பல்வேறு காரணங்களுக்கு அழுது உள்ளேன்.என் அம்மா சாகவில்லை.
3 .சரித்திரம்
நான் எதற்காக எல்லாம் அழுதேன் என்று என்னால் சொல்ல முடியாது.
மாத்திரை சாப்பிட்டும் இரவில் தூக்கம் இல்லை .நடு ராத்திரியில் சில
புத்தகங்கள் படிப்பேன். நான் வீர பாண்டிய கட்டபோம்மன் , மருது
சகோதரர்கள் கதை படித்து விட்டு அவர்கள் தியாகம் கண்டு உள்ளம் உருகி
அழுதேன் .பள்ளி படிக்கும் போதே அவர்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும் .
ஆனால் இப்போது அவர்கள் மனம் பற்றி சிந்தித்தேன். 3 மணி நேரம் விம்மி விம்மி அழுதேன்.ஆம் என் மனம் முழுக்க முழுக்க அவர்கள் தியாகம் தான் . என் கண்ணீரால் அவர்களுக்கு மரியாதையை செய்தேன்.ஆம்.
வாஞ்சிநாதனும் என்னை மிகவும் அழ வைத்தார். என் மனம் உணர்ச்சி
வசப்பட்டது. வாஞ்சி நாதன் தன்னை தானே சுட்டு செத்தது என் மனதை
பெரிதும் பாதித்தது. விளைவு அழுகை .அழுகே மட்டுமே .

4. நினைப்பு

பல தடவை பல்வேறு நபர்களை நினைத்து அழுவேன்.அதில் ஒருவர் நான்
படித்த கல்லூரி முதல்வர் கஸ்தூரி.அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்
.நான் அவர் முன்பாகவே சிகரெட் குடித்து இருக்கேன் .பல பேராசரியர்
என்னை டிஸ்மிஸ் செய்ய சொல்லியும் அவர் கேட்க வில்லை. மகத்தான
மனிதர் .மாணவர்கள் பற்றி நன்கு அறிந்தவர். பல வருடங்கள் ஆகியும் அவர் பெருந்தன்மை எனக்கு நன்கு புரிந்தது.ஒரு முறை பஸ்சில் போகும் போது அவரை நினைத்து அழுதேன்.பக்கத்தில் உள்ளவர்…என்ன என்று கேட்டார். பின் நான் மனதிற்கு உள்ளயே அழுதேன். என்னை பாதித்தவர்களின் முக்கிய நபர் இவர். அடுத்து ஷர்மிளா. நான் புன்னகை உலகம் என்னும் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தேன் அவர் தான் மேலாளர். நான் சிகரெட் குடிப்பது தெரியும்.ஒரு நாள் அவர் கேட்டார்.
“ நான் உங்களை சிகரெட் குடிக்க வெளியே போக சம்மதிக்க வில்லை
என்றால் …என்ன செய்வீர்கள் …?”
“ நான் உங்கள் காலில் விழுந்து அனுமதி கேட்பேன் …”
“ நான் உங்கள் காலில் விழுந்து போகாதீர்கள் என்று கேட்டால் என்ன
செய்வீர்கள் …?
நான் அந்த பதிலை சற்றும் எதிர்பார்க்க வில்லை. அவரது சொற்கள் என்னை ரொம்பவே பாதித்தது . மதிய உணவு இடைவேளையில் நான் ரோட்டில் நடந்து சென்று கொண்டே அழுதேன். மிகவும் பாதித்த விஷயம். அவர் அணுகிய விதம் என்னை பல மணிநேரம், பல நாட்கள் அழ செய்தது. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் .ஆனால் என்னை பல நாட்கள் என்னை அழ வைத்து விட்டார். 1௦ நாட்கள் அழ வைத்து விட்டார்.
5 . சார்லி சாப்ளின்
இரவு தூக்கம் வரவில்லை என்றால் எதாவது படிப்பேன். அல்லது டிவி
பார்பேன். ஒரு முறை கம்ப்யூட்டர்லில் சார்லி சாப்ளின் …அவர் நடித்து
இருந்த “ தி கிரேட் டிக்டேடர் “ படத்தின் கிளைமாக்ஸ் உரை கேட்டேன்.
அம்மம்மா …! என்ன உருக்கமான பேச்சு ..? மனிதர்கள் மிஷின் ஆகி
விட்டார்கள் . மற்றவர்களுக்காக சிந்திப்பதை விட்டு விட்டார்கள் . நமது
மனம் மிஷின் ஆகி விட்டது. நாம் மற்றவருக்காக உணர்வது என்பது
இல்லாமல் போய் விட்டது . அவரது பேச்சு என்னை கண்கலங்க
வைத்தது.அவரின் மனிதநேயம் நன்கு வெளிப்பட்டது .அது போதாதா …?
ஆம் . நான் அழ ஆரம்பித்து விட்டேன்.சார்லி சாப்ளினும் ஒரு மன நோயாளி என எனக்கு நன்கு தெரியும் .எல்லோரயும் சிரிக்க வைத்த அவன் என்னை மட்டும் அழ செய்து விட்டான் .சார்லி சாப்ளினை நினைத்தால் எனக்கு அழுகை தான் வரும் .
6.காதலி
நான் சில வருடங்களுக்கு முன் வீட்டு அருகே ஒரு இளம் பெண்ணை
விரும்பினேன். அடிகடி சைட் அடிக்க செல்வேன்.ஆனால் எனக்கு அப்போது வேலை இல்லை.அவரை சந்திக்கும் வாய்ப்பு நான்கு வருடங்களுக்கு பின் கிடைத்தது .அவரிடம் பேசினேன். அவர் தனியார் வங்கி ஒன்றில் பணி செய்து வந்தார். நான் அவரை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று அவரது கிளையில் ஒரு கணக்கு துவங்கினேன். அவருக்கு நான் அவர் வேலை செய்யும் ஆபிசுக்கு பல கடிதங்கள் எழுதி அனுப்புவேன். அவருக்கு பல பரிசு பொருட்களையும் அனுப்பி வைப்பேன். அவர் நன்றாகவே என்னிடம் பேசுவர். வருட கடைசி .அவர்க்கு ஒரு நீண்ட காதல் கடிதம் எழுதினேன். வருடம் முடியும் முன்பே அவரை பதில் சொல்ல சொல்லி எழுதினேன் . ஒரு நாள் ஒரு கால் வந்தது. பேசுபவர் யார் எனக் கேட்டேன் .அதற்கு அவர் நீங்கள் காதல் கடிதம் எழுதியவரின் கணவரின் அப்பா ..அதாவது மாமனார் என்று சொல்லி பேச்சை துவங்கினார். எமனுக்கு ஷாக் …! பேரடி …!! துக்கம் தொண்டையை அடைத்தது. நான் மன்னிப்பு கேட்டு விட்டு போனை துண்டித்தேன் . அவளவு தான் என் காதலிக்கு கல்யாணம் முடிந்து விட்டது என தெரிந்து ஒ ஒ வென அழ ஆரம்பித்தேன். வீட்டில் புரண்டு புரண்டு அழுதேன் . வீட்டில் எல்லோரும் சமாதனம் செய்தார்கள் . ஆனால் என் அழுகை 2 மணி நேரம் ஆகியும் நிற்கவில்லை. அண்ணன் மகள் எனக்கு விஸ்கி வங்கி தர சொன்னார். நானும் துக்கம் தங்காமல் குடித்தேன். குவாட்டர் போத வில்லை. மறுபடியும் குவாட்டர் குடித்தேன் . வாந்தி வந்ததே ஒழிய அழுகை நிற்கவில்லை . சோகம் ..சோகம் …அழுகை…அழுகை மட்டுமே …! என் காதலியை மறக்க முடியாமல் சில வருடங்கள் அவரை நினைத்து நினைத்து அழுது தீர்த்தேன். அழுகை என் தொடர்கதையாகி விட்டது .

7.சினிமா

நான் கர்ணன் ரீ-ரிலீஸ் ஆன போது திரை அரங்கம் சென்று படம் பார்த்தேன். எனக்கு கிருஷ்ணர் மீது கோபம் வந்தது கர்ணனை கொல்ல கிருஷ்ணர் அவர் செய்த புண்ணியங்களின் பலன் யாவும் தனக்கு தானமாக கேட்டார்.இது மிக கொடியது. கர்ணன் சாவதை என்னால் ஏற்று கொள்ள முடிய வில்லை. அரங்கத்திலேயே அழுதேன் .அரங்கம் விட்டு வீடு வந்து சேரும் வரை அழுதேன்.கர்ணன் சாவை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பிறகு விக்ரம் நடித்த சேது மற்றும் தெய்வ திருமகள் படம் பார்த்து அழுதேன். நான் அந்த கதை நாயகர்கள் படும் வேதனை எனது வேதனை போன்று தோன்றியது. தெய்வ திருமகள் படம் பார்த்து விட்டு அழுது கொண்டே அரங்கத்தை விட்டு வெளியேறும் போது சில கல்லூரி மாணவிகள் என்னை அழுகை மூஞ்சி என கேலி செய்தார்கள் .என்னை எதாவது ஒரு விஷயம் என்
மனதை தாக்கி விட்டால் …அவ்வளவு தான் ..அழுகை மட்டுமே மிஞ்சும்.

8.மெண்டல்

அம்மாடியோவ்..கிரிகர் மெண்டல். இவர் ஒரு விஞ்ஞானி.அவர் தான் முதன் முதலில் மரபணு சம்பந்தமாக 3 விதிகளை கண்டு பிடித்து வெளியே அறிவித்தார். ஆனால் அவர் சம கால விஞ்ஞானிகள் கண்டு கொள்ள வில்லை. தாவர இயலில் கணக்கா ..? என்று
எள்ளி நகையாடினார்கள்.அவர் மனம் வெறுத்து பாதிரியார் ஆனார். அவரது கண்டுபிடிப்புகள் குப்பையில் போடப்பட்டது . அவர் அடைந்த மனவேதனை அளவு இல்லாதது. சரியாக 3௦ ஆண்டுகளுக்கு பிறகு 3 விஞ்ஞானிகள் அவர் சொன்னதை நிருபித்து காட்டினார்கள். ஆம் .அவர் இறந்து 3௦ வருடங்களுக்கு பிறகு உலகம் அவர் சொன்ன உண்மையை எடுத்து கொண்டது. அவருக்கு எவ்வளவு மனவேதனை இருந்து இருக்கும்…? துரதிர்ஷ்டசாலி . அவரை பற்றி நினைத்தாலே எனக்கு அழுகை தான் வரும்.அவரை அவர் மன வேதனையை நினைத்தாலே அழுகை தான் மிஞ்சும்.

9 . துன்பமே எல்லை
என் அண்ணன் எனக்கு தெய்வம். அவருக்கு விபத்து ஏற்பட்டு மூளையில்
அறுவை சிகிச்சை செய்தார்கள் .நான் அடைந்த துயரம் அளவே
இல்லை.என்னால் துங்க முடிய வில்லை .நான் அழுததை சொல்லிமாளாது. இரண்டு வருடங்கள் பிறகு எனக்கு வயது 45 ஆனது .எனக்கு கல்யாண ஆசை வந்தது. குழந்தைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு வேலையும் இல்லை. என் நிலை குறித்து தினமும் அழுவேன் … ! வாழ்க்கை முழுவதும் அழுகை என்பது என்னோடு ஒட்டி கொண்டது .நான் எதற்காகவோ , எதையோ நினைத்து ,எதாவது காரணத்திற்காக அழுவேன். அழுவேன் .மன நல மருத்துவர் ஸ்ட்ராங் மருந்து கொடுத்தார் . வாழ்வில் நவரசம் உள்ளது . ஆனால் என் வாழ்கையில் அழுகை மட்டுமே மிஞ்சியது .அழுது …அழுது ..கண்ணீர் சுரப்பிகள் வறண்டு விட்டது .இப்போது பெரும்பாலும் அழுவதை நிறுத்தி விட்டேன். ஆனால் மனதை எதாவது பாதித்தால் அழுது விடுவேன்.

ஆம் …!
அழுகை என்னோடு பிறந்தது …!!
வாழ்வே கண்ணீர் தான் …!!!

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

You may also like

Leave a Comment

error: Content is protected !!