ஒளிரும் சிரிப்புடன், கையில் புகைச்சுருட்டு –
காண்பதற்கு அழகோ, வாழ்வுக்குக் கேடு!
புகைக்கும் ஒவ்வொரு இழுப்பும், ஆயுளின் குறைப்பு,
உள்ளுக்குள் மெல்ல மெல்ல, விஷத்தின் பரவல்.
இனிய வாழ்வு வேண்டும் என்றால், விலகுவோம் புகையிடம்,
நலம் காக்கும் முடிவே, நம் தலைமுறைக்கு வரம்!
சுவாசிக்கும் காற்று, தூய்மையாகட்டும்,
நலமான வாழ்வே, அனைவருக்கும் நிலையாகட்டும்!
இ.டி. ஹேமமாலினி