சின்னப் பாப்பா,
சிவப்புத் தொப்பியுடன்,
வெள்ளைப் பறவையின்
மீது சவாரி செய்கிறாள்.
வானில் மிதக்கும்
இலைகள், பூச்சிகள்,
பறக்கும் பட்டாம்பூச்சிகள்
அவளைச் சுற்றிலும்.
கண்களை மூடி,
கனவுலகில் மிதந்து,
அமைதியின் அணைப்பில்
ஆழ்துயிலில் ஆழ்ந்தாள்.
இந்த மாயக் காட்சியில்,
இயற்கையின் எழில்,
மழலையின் மாசற்ற
அழகும் கலந்ததே!
இ.டி.ஹேமமாலினி