படம் பார்த்து கவி:தலைமீது

by admin 3
66 views

தலைமீது கலசமாய்,
தாளத்தோடு கால்களும்,
குதூகலத்தில் முகங்களும் –
ஆடிடும் கரகத்தின் கோலமிது!
வர்ண ஜாலம் பின்னணியில்,
வசீகர புன்னகை முன்னணியில்,
பாரம்பரியம் பேசிடுதே –
பார்க்கப் பார்க்க பரவசமே!
ஆண், பெண் இணைந்தாட,
அழகிய ஆடை மின்ன,
கலாச்சாரத்தின் களிப்பிலே ..
கண்ணுக்கு விருந்தாகிடுதே!
மனதில் மகிழ்வும்,
முகத்தில் ஒளிவும்,
நடனத்தின் இலக்கணமாய்
நிகழ்த்தும் ஒரு கலைவிருந்தே!

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!