நிலவொளியும், லாந்தரும்
நிலவினை நம்பி இல்லை இரவுகள்
விளக்குகள் காட்டுமாம் வெளிச்சத்தின்
எல்லைதனை… எல்லாம் சரிதான் இன்று
ஆன்டிக்காய் மாறிவிட்ட லாந்தர் வெளிச்சமும்
முழுநிலவின் இதயம் வருடும் மனதைத்
தொடும் அழியா வெளிச்சமும் நல்கிடும்
இயற்கை சுகம் சாத்தியமா செயற்கையிலே?
நாபா.மீரா