நிழலாய் தெரிந்தாய், நெருப்பாய் இல்லை,
கொம்புகள் இருந்தாலும், குரூரமாய் இல்லை.
அழகிய இருளாய், ஒளியின் பிள்ளை,
மோகினி நீயோ, மயக்கினாய் என்னை.
மஞ்சள் வெயிலில் மாலையின் சாயல்,
மர்மம் நிறைந்த மங்கையின் மோதல்.
அமைதியாய் இருந்தாலும், அதிரும் அலைகள்,
அசுர குணமாய், ஆனந்த ஓடைகள்.
மறைந்திருந்தாலும், மின்னும் அழகு,
மாயமாய் நீயும், மனதை இழுக்கு.
தேவதையோ நீ, தீயவளோ இல்லை,
காதலோடு கலந்த காரிகை நீயே.
இ.டி.ஹேமமாலினி
