பெண் தேவதை அவள்…
அதிசயமாய் தெரிகிறாள்…
மூடிய இமைகளும்
முழ்கடிக்குது நெஞ்சை…
செம்பவள இதழை அழகாய் குவிக்கிறாள்…
அவள் மூச்சு காற்றில் சிதறுது விண்ணின் நட்சத்திரம்…
செங்காந்தள் மலராய் விரல்கள் நீண்டிருக்க…
இவள் மெல்லப் புன்னகைக்க
உலகமே ஒளிரும் பேரழகி இவளோ!
திவ்யாஸ்ரீதர்