மெதுவாய் நகரும் மென்மைப் படைப்பு,
தன் ஓட்டையே வீடாய் கொண்டு திரியும்.
புல் மீது பனித்துளி போல் ஜொலிக்கும்,
சிறு கொம்புகள் காற்றில் மெல்ல அசையும்.
பூமியின் அழகை ரசித்து ஊரும்,
மழையின் வருகை இவளுக்குப் பிடிக்கும்.
ஈரமான மண்ணில் தடம் பதிக்கும்,
தன் வழியில் அமைதியாய் செல்லும்.
பாறையின் ஓரத்திலும் செடியின் மீதும்,
எந்தப் பயமுமின்றி வாழும் உயிரே.
சிறு உலகை தன் முதுகில் சுமக்கும்,
அழகான நத்தை நீ ஒரு விந்தையே.
மெல்ல நகர்ந்தாலும் உறுதியாய் செல்லும்,
வாழ்க்கையின் பாடத்தை உனது நடை சொல்லும்.
இயற்கையின் எழில்மிகு ஓவியம் நீயே…
இ.டி.ஹேமமாலினி .