“வயசாயிடுச்சுல” எனும் வார்த்தைக்குள் ஒளிக்கப்பட்டு ஒழிக்கப்படுகிறது மெய்த்திறம்
முடிவதற்கும் முடியாதென்ற
சாயம் பூசி முதுமையைக் காரணமாக்குகிறது சமூகம்
சமூகச் சொல்லை
வேதமென்றெண்ணும் மனமும் வயோதிகத்தை வலுக்கட்டாயமாய் தரிக்கிறதுஅனுபவ மூட்டையின்
எண்ணிக்கை உயருதலை வயதெனக் கணக்கிட்டு
வினைகளினிருந்து விலக்கி வைக்க வழிவழி கொண்ட
பழக்கத்தை பின்தள்ளி
அனுபவ மூட்டையின்
எண்ணிக்கை உயருதலை வயதெனக் கணக்கிட்டு
வினைகளினிருந்து விலக்கி வைக்க வழிவழி கொண்ட
பழக்கத்தை பின்தள்ளி
சிட்டுக் குருவிமேல்
சிங்காரமாய் பறந்து செல்லும்
சிறு பிள்ளை மனதோடு
வயதுக்கு விதித்த அட்டவணை மறந்து காற்று போல் முடங்கிடாமல் முடுக்கியோடினால்
வயதும் வாழும் முறையும் இணைகோடல்ல என்பதை இதயமறிந்து புது உதயம் தரும்!
புனிதா பார்த்திபன்