அவள் பிறந்தாள்
ஆனந்தமாய் ஆடினாள்,
பெற்றோர் பரிசாய் பொன் நகை குவித்தனர்.
பாதுகாக்கும் என்றெண்ணிச் சேர்த்தனர்,
வரதட்சணையாக வாழ்த்துச் சொல்லித் தந்தனர்.
கனமென அவள் தோளில் ஏறியது,
கணவனின் எதிர்பார்ப்பு பாரமாய் நின்றது.
முந்நூறு பவுனின் மூச்சுத் திணறலில்,
மயில் துத்தமாய் மாறியது மாங்கல்யம்.
உயிர் குடிக்கும் வரதட்சணைத் தீயில்,
மலர் போன்ற வாழ்வு சாம்பலானது.
தற்கொலை என்ற கொடிய முடிவில்,
தங்கத்தின் மீதான மோகம் தின்றது.
அத்தியாவசியமல்ல தங்க நகை பெண்ணுக்கு,
பொன் நகை எதற்கு?
புன்னகை போதும்!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: அவள்
previous post
