ஆடம்பர பொன்நகையை விட,
சில பெண்களுக்கு பட்டு என்றால் அலாதி ப்ரியம்.
கண்களில் மின்னும் காந்தம்போல்,
இதயத்தில் குடிபுகுந்த சித்திரம்.
உடலில் உடுத்திய பொன்மகளாய்,
நடையில் சிட்டாகப் பறக்கும் எழிலாய்,
பட்டுப் புடவையின் பெருமை சுமந்து,
ஒவ்வொரு அசைவிலும் ஓங்கும் வசீகரமாய்!
பட்டு உடுத்திப் பவனி வரும் பெண்ணின்,
கண்களில் காவியம், நடையில் நவரசம்.
ஒளிவீசும் பட்டின் அழகில்,
அவள் சிட்டாகப் பறப்பாள் வானில்!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: ஆடம்பர
previous post
