ஆழியின் மடியில் ஒளிந்திருக்கும் ரகசியமே…
பொன் ஒளியில் நீந்தி வரும் பேரழகே…
சூரியனின் ஒளி கீற்றில் மின்னும் வைரமே…
புது உலகை காண
ஆழ்கடலை விட்டு
வந்தாயோ?
அலையோடு வளையும் தேகமும்…
நீரோடு அசைந்தாடும்
கார்கூந்தலும்…
கவிதையின் வடிவமாய்
உன்னை காட்டுதே!
வர்ணணியில் வானவில்லாய் தோன்றுதே!
நீரின் ஆழத்தில் மாயத் தோற்றம்…
கனவு உலகத்தில் காணும் அற்புதம்…
என்றும் நீ ஒரு மர்மமான உயிரினம்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: ஆழியின்
previous post