இடி இடித்து
இருக்கும் மழையெல்லாம்
வானம் கொட்டியதுபோல்
வந்தவ ரெல்லாம்
தாங்கிப் பிடிக்க முடியாது
தாயை இழந்த பிள்ளைகள்
தலையில் அடித்து
நெஞ்சில் அடித்து
வயிற்றில் அடித்து
வாயில் அடித்து
வந்த கண்ணீர்
இவர்களும் இறப்பாரோ
என்றெண்ண வைத்தது.
உடலோடு உறவாடி
உயிரோடு உயிரான
உற்றவள் எண்ணி
அழுது அழுது
அவன் பட்ட துயர்கண்டு
ஆண்டவனே அவளை மறுபடி
பிறபிக்க நினைத்தான்.
எருமா மட்டைதனில்
எரியூட்ட அவளுடல்
காத்திருக்க அது
கண்ணை பறிக்க
அன்னையிட்ட தங்க வளையல்
அவளோடு சேர
அடம் பிடிக்க
அடித்த கைகளை
எடுத்து விட்டு
மக்களும் வர
அழுத கண்ணீரை
துடைத்து விட்டு
கணவனும் வர
கைகளை அறுத்து அந்த
கை வளையளை
வரவழைக்க சொண்னபோது
எரியப் போகும் அவள்
கைகளை கண்டு
ஏங்கித் தவித்தது
இதுதான் தங்கம்.
செ. ம. சுபாஷினி
படம் பார்த்து கவி: இடி
previous post