இயற்கையின் புல்லாங்குழல் ஓசையுடன், பசுமை வாசல் நம்மை வாவென்று அழைக்கிறதே!
சாதாரணப் பச்சையல்ல இது! ஒவ்வொரு இலை நுனியிலும் ஒரு தனித்துவம்!
மரகதப் பச்சையின் மர்மப் புன்னகை, மெல்ல அசைந்து மயக்குகிறதே…
கரும் பச்சையின் கர்ஜனை, வனத்தின் கம்பீரத்தை உரக்கச் சொல்கிறதே…
இலைகளின் நரம்புகளில் உயிர் ஓட்டமாய் ஜொலிக்கும் இளம்பச்சை, ஜீவனின் அரும்புகள் போல் துளிர்க்கிறதே!
இந்த வனத்தின் பச்சை, வெறும் நிறமல்ல! அது ஒரு சாகச ஆலயம்!
அலையலையாய் ஆர்ப்பரிக்கும் இயற்கையின் ஆதிக்கம்…
நம் நரம்புகளில் உயிர் மின்னலை பாய்ச்சுகிறதே!
ஆனால், இந்தக் கண்கவர் நுழைவாயில் பசுமை…
இது வெறும் இயற்கை உளி செதுக்கியதல்ல!
மனிதனின் சிற்பக் கலை!
அவன் பேராசையின் அழியா எச்சம்!
அவன் பேராற்றலின் மெய்சிலிர்க்கும் மிச்சம்!
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: இயற்கையின்
previous post
