இரும்புச் சங்கிலி இறுக்கமாய் பிணைந்திருக்க,
பழம்பெரும் பூட்டு, கல் வளையத்தில் தொங்குகிறது.
மர்மங்கள் மறைக்கிறதா?
செல்வங்கள் பாதுகாக்கிறதா?
அல்லது கைதியின் சிறைக் கதவை அலங்கரிக்கிறதா?
காலத்தின் பொக்கிஷங்கள் உறங்கும் இடமா?
காலம் கடந்து, உறுதியாய்,
பல ரகசியங்களை தனக்குள் அடக்கி,
சங்கிலியோடு பிணைந்து,
தூங்குகிறது அந்தப் பழமை பூட்டு.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: இரும்புச்
previous post
