இருள் சூழும் மலைப்பாதை,
விளக்குகளின் கோடுகள் மின்ன.
காலம் விரைந்து பறக்க,
கனவுகள் சாலையாய் விரிந்து செல்ல.
செந்நிற ஒளி, வெண்ணிற ஒளி,
கலந்து ஒன்றாய்க் கவிய.
தூரத்தில் நகரின் ஒளிக்கீற்று,
எதிர்காலம் தன்னைத் தழுவ.
வளைந்து நெளிந்து செல்லும் பாதை,
வாழ்க்கையின் பயணம் போல்.
ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு பாடம்,
முடிவில்லா இந்தப் பயணத்தில்.
வானம் வண்ணக் கோலமிட,
பூமிக்குக் கீழே புதிய பாதை.
மனம் நிறைந்த அமைதியுடன்,
இந்தக் காட்சி ஒரு சொர்க்கம்.
இ டி. ஹேமமாலினி
படம் பார்த்து கவி: இருள்
previous post