இளஞ்சிவப்பு நிறத்தில்
அழகாய் மின்னினாள்…
கண்ணாடி தேகத்தில்
நிமிர்ந்து நின்றாள்…
அரசனுக்கு அருகில் அமைதியாய் நிற்பாள்…
சதுரங்க கட்டத்தில்
சாதூரியமாய் செல்வாள்…
எதிர்ப்படும் இன்னல்களை துணிந்து வெல்பாள்…
ஆபத்து எனில் அறனாய் காப்பாள்…
துணிந்து செயல்பட்டு உயிரையும் கொடுப்பாள்…
அவளின் முழ சுகந்திரம் கருப்பு வெள்ளை
ஆட்டத்தில் மட்டுமே…
எதிரிகள் அனைத்தும் சூழ்ந்திருக்க, அவளின்
பார்வை கம்பீரமாய் பாய்ந்தது…
வெற்றி தாகம் கண்ணில் மின்னியது…
உலகில் அனைத்து சதுரங்க போரிலும் நாயகியாய் ஜொலிப்பாள்…
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: இளஞ்சிவப்பு
previous post