உடைந்து சிதறிய கண்ணாடி குடுவை…
செம்பூக்கலாய் சிறிய மதுபானம்…
காட்சி அழகாய் தெரிய…
சூழல் உணர்த்தும் காயத்தை…
சிகப்பு திரவம் வழிந்து ஓட…
பெருமூச்சிகள் பல அங்கு எழும்…
உடைந்தது பல மனங்கள்…
இன்பமாய் ஒருவாய் பருக நினைக்க…
முடியாமல் ஆனது, உடைந்து…
நொருங்கிய உணர்வுகளோடு…
சிதறிய கண்ணாடி குடுவை.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: உடைந்து
previous post
