படம் பார்த்து கவி: எட்டா

by admin 3
16 views

எட்டா அறிவினுக்கு எட்டிய பட்டங்கள்
பட்டா போட்டதுவாய் தனக்கான தம்பட்டமே
பட்டங்களுமதன் திட்டங்களும் ஏட்டளவிலே என்றிருக்க
எட்டிப்பிடிக்க ஏனோ ஏட்டியும் போட்டியும்
பட்டறிவிலே பெற்றிடும் பல்திறன் அறிவினை
பட்டங்களும் பட்டயங்களும் பெற்றுத் தரலாகுமோ
எட்டுத்திக்கும் எடுத்துச் செல்கிறோம் ஏட்டறிவினை
எட்டியவரை தன்னை வளர்த்துக்கொள்ள மட்டுமன்றோ!?
பட்டிதொட்டியும் பலவளர்ச்சி காணவே பயன்படுத்துகின்றோமா?!
எட்டியே பிடித்து மேலேறிடும் ஏட்டுக்கல்வியும்
எட்டாக்கனியே ஏழை எளிய பாமரர்க்கு
எட்டிய அறிவது ஏட்டறிவோடு நில்லாது
எட்டுத்திக்கும் ஏற்றங்களை ஏற்றிட ஏதுவாகுமெனில்
தட்டுங்கள் கரங்களையே எட்டினோம் விண்ணுயரமெனவே

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!