எண்ணங்களின் புதுமை ஆக்கமாகிறது
ஆக்கத்தின் வலிமை ஆளுகின்றது
காலக்கோட்பாட்டில்
இன்றைய நவீனம்
நாளைய பழமையாகலாம்
புகழுச்சிக்கு மேல் உச்சி எழலாம்
எண்ணங்கள் புதுப்பிக்கப்படாவிடில்
எண்ணெய்ப்பிசுக்கும் நுரையீரலை நோக வைக்கும் ஊது குழலும் இன்னும் ஆண்டுகொண்டிருக்கும்
உபயோகத்திற்கு
மிகையெனப் பட்டாலும்
புதுமை படைக்க
எண்ணங்களைப் புதுப்பிக்கும் மானுட மதியின்
அதிசிறந்த ஆக்கமே
தேங்கிடாது தேடென்ற
மந்திரத்தின் ஓர் நோக்கமே!
புனிதா பார்த்திபன்
படம் பார்த்து கவி: எண்ணங்களின்
previous post