கடலில் மின்னும் பொன் நட்சத்திரம் இவள்
ஆல் கடலின் ஆழத்தில் உறங்கும் தேவதை இவள்/
தங்கத் தாரகை மீன் தேகம் கொண்டவள்
ஒளி வீசும் கடல் கன்னியாய் திகழ்பவள்
அசைந்தாடும் பொன் கொடி இவள்
மெல்லிய இடையசைவு கொண்டவள்
பேசும் வார்த்தைகளோ முத்துக்கள்
அழகிய சிற்பமாய் நீலக்கடலில் நீந்துபவள்
கண்கள் இரண்டும் வைரக் கற்கள்
கூர்மையான பார்வையில் கனிவு கொண்டவள்
நடையில் ஒரு வசீகர நாட்டியம், மயக்கும் பேரழகி இவள்
உள்ளம் நிறைந்த பொன்னான குணங்கள் கொண்டவள் இவள்
உதவும் கரம் நீட்டுபவள் இவள்
சிரிக்கையில் தெரியும் தங்க ஒளி
மனதை கொள்ளை கொள்பவள் இவள்
அழகு என்னும் தங்கச் சுரங்கம் இவள்
அன்பென்னும் ஒளி வீசுபவள் இவள்
என்றும் நிலைத்திருக்கும் பொன் ஓவியம் இவள்
என்றும் என்றென்றும் தங்கத் தாரகை இவளே.!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: கடலில்
previous post