கரிய துகினம் திரண்டு
மழைத் துளிகளைப் பொழிய, அதிரன் முழக்கமாய் அவள் பெயர் ஒலித்தது…
வானவில் வண்ணப் பட்டுச் சேலை உடுத்தி, கண்களை மூடி நின்றிருந்தாள் யுவதி…
நெற்றியில் திலகம் மின்ன, ஆடும் மயிலென நளினமாய் காட்சியளித்தாள்…
நீர்க்குமளிப் பழம் போல் செழித்த கன்னங்கள், செவ்வாம்பல் மலர்போல் இதழ்கள் விரிய, பதுமம் போல் முகம் மலர்ந்திருந்தாள்…
கோடல் மலரென நீண்ட விரல்களில் மென்மையை ஏந்தியிருந்தாள்…
அந்த மழைச்சாரல்கள் அவள் அழகை முழுதாய் வெளிப்படுத்த, என் நெஞ்சம் காதலில் தத்தளித்தது…
என் இதயமோ, அவள்
பேரழகில் முழுதாய்
தொலைந்து போனது.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: கரிய
previous post