கருப்பு வெள்ளை சாவிகளில்,
சிவந்த ரோஜாக்கள்…
பனித்துளிகள் படர்ந்திருக்க,
இசை மீட்டத் துடிக்குது!
மெல்லிசை மிதக்கும் நேரம்,
பூக்களின் சுகந்தமும் சேர,
காதல் கீதம் இசைக்குதோ?
மனம் உருகிப் போகிறதே!
பித்துப் பிடிக்கும் சங்கீதம்,
வெண்பனியில் செவ்வரத்தம்;
ஈரம்படக் காணுதலே,
இசை எழுப்பும் உன் விரல்கள்!
உன் பாட்டோ? என் மனமோ?
உருகிடவே வழிவகையோ?
அழகே… இசைப் பறவையே…
அதிசயமே இந்தக் காட்சியோ!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: கருப்பு
previous post