சந்திரனின் ஒளியில் மின்னும் களபம் ஒன்று…
காட்டின் நெருக்கடியை எண்ணி கலங்குதோ?…
விண்ணை நோக்கிப் பார்க்குதே ஏக்கத்துடன்…
நிலவில் ஒரு புது வாழ்வு மலருமோ என்று!…
காட்டில் இடமில்லை இனி, எங்கே நான் போவேன்?…
சின்னஞ்சிறு உள்ளம் கவலை கொள்ளுதே!…
நிலவில் வாழ ஆசை கொள்ளுதோ…
அற்ப மானிடர் கால் தடம் அங்கேயும் பதிந்து விட்டதை அறியாமல்…
அந்தக் களபம் நம்பிக்கை நெஞ்சைத் தொடுதே!…
இ.டி.ஹேமமாலினி .