சமையலறை புராதனமோ நவீனமோ
அன்னலட்சுமி வாசம் செய்யும் இடமன்றோ?
அக்னியில் வெந்து சோறாக்கித் தந்திடும்
அடுப்பு…சுத்தமாய் நித்தமும் துடைத்தே
பராமரித்திடல் அவசியமே….
எண்ணெய்ப் புகை… பதமாய் வெளியே
தள்ளிடும் நவீனப் புகை போக்கி
பிசுக்கும் அழுக்கும் ஆடையாய் அணிந்த
நவீனம் முறையாய்க் குளிக்காவிடின்
வேலை நிறுத்தம் … வீண் செலவும்தான்…
சுத்தம் சோறு போடும் பழமொழிதான்
ஆயின் காலந்தாங்கி நின்றிடும் உண்மையே…..
நாபா.மீரா
படம் பார்த்து கவி: சமையலறை
previous post