படம் பார்த்து கவி: சாகாமல்

by admin 3
19 views

சாகாமல் சாலையைக்கடந்து சேர்வதுவும் சாதனையே
சாகசங்கள் செய்திடும் சர்க்கஸ் ஸ்தலமென்றே
சகட்டுமேனிக்கு சாலைவிதியை மறந்தலையும் மதியீனரிடையே
சாதரணமாய் சாலையிலே செல்வதுவும் சாமன்யமில்லையே
பாதசாரியும் பாதையோரமாய் போகையிலும் பரிதாபமாய்
ஏதோவொரு வாகனத்தால் வாழ்க்கை இழந்திடல்
சாதரணமாய் சகஜமாகினதாலே சாலைப்பயணமும் சாதனையே

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!