சாய்ந்தொளி பாயும் அந்தி வானம்,
சாயலில் தோன்றும் ஒற்றைப் பெண்.
சுற்றிப் பறக்கும் புள்ளினக்கூட்டம்,
சுதந்திரம் அவளின் எண்ணங்களோ?
வானின் சிவப்பும் இளஞ்சிவப்பும்,
வண்ணக் கனவுகள் அவளுடையதோ?
நிழலுருவம் சொல்லும் மௌனம்,
நிறைந்திருக்கும் ஆசைகளின் ஓசை.
பறவைகள் விரியும் சிறகசைவில்,
பரந்து செல்லும் அவளின் நெஞ்சம்.
அந்தி மயங்கும் அமைதியிலே,
ஆழ்ந்த சிந்தனையின் அலைகள்.
இருள் கவிழும் நேரம் நெருங்க,
எதிர்காலத்தின் நம்பிக்கை ஒளி.
பறவைகளோடு சேர்ந்து அவளும்,
பறக்கத் துடிக்கும் மனதினள்!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: சாய்ந்தொளி
previous post