சிகப்பு ரோஜாக்களும், வெள்ளை விசைகளும்…
பியானோவின் மென்மேல் காதல் கொண்டன…
பனித்துளிகள், பூக்களின் இதழ்களில்
முத்தமிட்டு, சுகந்தம் பரப்பின…
விரல் தொடு உணர்வால் இசையெழுப்பும் பியானோ,
இதயத்தின் ஆழத்தைத் தொட்டு மீட்டியது…
கண்கள் வழி புகுந்து, கவிதை படைக்கும் அழகில்,
ரோஜாவும் இசையும், ஒன்றாய் வசீகரித்தன.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: சிகப்பு
previous post