ஜன்னலின் கண்ணாடித் திரை,
மழைத்துளிகளின் சித்திரை.
அந்தப் பக்கம் வண்ண ரோஜாக்கள்,
இந்தப் பக்கம் மனதின் ஆசைகள்.
சிவப்பு, ஆரஞ்சு, பிங்க் நிறங்கள்,
ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தன.
ஈரத் துளிகள் பூக்களைத் தழுவ,
மனதில் ஒரு மெல்லிய சங்கீதம் தவழ.
மழையும் பூக்களும் இணைந்த காட்சி,
காதல் மொழியின் இனிய சாட்சி.
இருண்ட பின்னணியில் பிரகாசம்,
உள்ளத்தில் நிறையவே சந்தோஷம்.
இ.டி.ஹேமமாலினி